Just In
- 18 min ago
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- 1 hr ago
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago
குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?
Don't Miss
- Movies
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- Automobiles
நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?
- Sports
இப்படி ஒரு விக்கெட்கீப்பர் தான் தேவை.. அப்புறம் உங்க இஷ்டம்.. பண்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சாஹா!
- News
துரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?... கட்சி தலைமை யார் பக்கம்?
- Finance
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' கடைசியா தனது இன்ஸ்டாவில் போட்ட ஃபோட்டோ இதாங்க...
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் பிரபல சீரியல் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் வி.ஜே. சித்ரா. இவரது பெயரை சொல்வதை விட முல்லை என்று சொன்னால் இன்னும் எளிதாக பலரும் அடையாளம் காணும் அளவில், இந்த சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார் சித்ரா. ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், மாடலிங் படித்துள்ளதால், பல்வேறு ஃபோட்டோ சூட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இதற்கு இவரது ஃபோட்டோசூட்டுகளும் ஓர் காரணம்.
MOST READ: காலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள்!
பொதுவாக பலரும் வி.ஜே, சித்ராவுக்கு புடவை மட்டும் தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். ஏனெனில் இவர் பெரும்பாலான சீரியல்களில் புடவை அணிந்து தான் நடித்துள்ளார். அதேப் போல் ஃபோட்டோ சூட்டுகளும் புடவைகளிலேயே தான் இருந்தன. இதனாலோ என்னவோ, இவர் மார்டன் உடைகளை அணிந்தால், சற்று அழகு கூடி காட்சியளிக்கிறார்.
இவர் என்ன தான் இவ்வுலகை விட்டு சென்றாலும், இவரது சில தோற்றங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காது நிலைத்திருக்கும். அப்படி மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை'-யின் மறக்க முடியாத சில தோற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை
இது ஃபோட்டோசூட் ஒன்றின் போது சிவப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்த போது எடுத்தது. இந்த புடவையில் அழகைக் கூட்டி காட்டும் வகையில் கண்களுக்கு போட்டிருந்த மேக்கப் அட்டகாசமாக இருந்தது.

ப்ளாக் அண்ட் ஒயிட்
இது கருப்பு மற்றும் வெள்ளை காம்பினேஷன் கொண்ட வெஸ்டர்ன் உடை அணிந்து இன்ஸ்டாவில் வி.ஜே. சித்ரா வெளியிட்டிருந்த போட்டோ.

அடர் நீல நிற புடவை
இது வி.ஜே. சித்ரா ஃபோட்டோசூட் ஒன்றிற்கு அடர் நீல நிற புடவை அணிந்து, ஃப்ரீ ஹேரில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை
இது கோல்டன் பார்டர் கொண்ட பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, கவர்ச்சிகரமான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து போட்டோவிற்கு கொடுத்த போஸ். அதிலும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டிருந்த ஹேர் ஸ்டைல், மேக்கப் மற்றும் கூலிங் கிளாஸ் அட்டகாசமாக இருந்தது.

பிங்க் நிற ஷீர் புடவை
இது ஃபோட்டோசூட் ஒன்றிற்காக எம்பிராய்டரி செய்யப்பட்ட பிங்க் நிற ஷீர் புடவை அணிந்து, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு ஸ்டைலாக சித்ரா கொடுத்த போஸ்கள்.

ரோஸ் நிற ப்ளைன் புடவை
இது ரோஸ் நிற ப்ளைன் புடவை அணிந்து, அதற்கு பிரிண்ட்டர் ஜாக்கெட் போட்டு, ப்ரீ ஹேருடன் பசுமையான தரையில் அமர்ந்து சித்ரா கொடுத்த போஸ். இந்த சிம்பிளான தோற்றமும் இன்ஸ்டாவில் பல லைக்குகளை அள்ளியது.

மணப்பெண் லுக்
இது சிவப்பு பார்டர் கொண்ட வெந்தய நிற பட்டுப் புடவை அணிந்து, அதற்கு பொருத்தமான ஆபரணங்களை அணிந்து ஒரு மணப்பெண் கோலத்தில் எடுத்த ஃபோட்டோசூட். இதுப்போன்று பலவாறு ஃபோட்டோசூட்டுகளை சித்ரா எடுத்துள்ளார். ஒவ்வொன்றும் அவ்வளவு அட்டகாசமாக, சித்ராவுக்கே டிசைன் செய்தது போன்று இருந்தது.

அடர் ஊதா நிற புடவை
இது இன்ஸ்டாவில் பெல்ட் கொண்ட அடர் ஊதா நிற ப்ளைன் புடவை அணிந்து வி.ஜே. சித்ரா வெளியிட்ட போட்டோக்கள். இந்த ஃபோட்டோவும் இன்ஸ்டாவில் பல ரசிகர்களைக் கவர்ந்த ஃபோட்டோக்களாகும்.

சுடிதார்
இது சித்ரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது வெளிரிய பிங்க் நிற சுடிதார் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

கடைசி போட்டோ
இது ஃபோட்டோசூட்டிற்காக ஊதா மற்றும் பச்சை நிற பாவாடை தாவணி அணிந்து வி.ஜே. சித்ரா எடுத்த போட்டோ. அதோடு இது தான் வி.ஜே. சித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட கடைசி ஃபோட்டோவும் கூட.