அனுஷ்காவிற்கு கோஹ்லியின் திருமணப்பரிசு என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

திரையுலகம் மற்றும் கிரிக்கெட் உலகம் சேர்ந்து நாம் எல்லாரும் எதிர்ப்பார்த்த விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் நேற்று இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்திருக்கிறது.

ஐந்து வருடக் காதல், விராட் தான் காதலித்த கனவு தேவைதையையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.யாருக்கும் தெரியாமல் இவர்களது திருமணம் திடீரென்று நடந்து விட்டிருக்கிறதே என்று யாரும் கவலை கொள்ளாதீர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பின்னர் தான் விராட் மற்றும் அனுஷ்காவின் திருமணம் நடந்திருக்கிறது.

நிச்சயதார்த்தத்தின் போது அனுஷ்காவிற்கு வழங்க வேண்டி ஒரு மோதிரத்தை வாங்க மட்டுமே மூன்று மாதங்கள் வரை செலவிட்டிருக்கிறார் விராட். விராட் மற்றும் அனுஷ்கா திருமணத்தின் போதும் பிற சடங்குகளின் போதும் அணிந்திருந்த நகைகள் மற்றும் ஆடைகளை பற்றிய ஓர் தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெஹங்கா :

லெஹங்கா :

திருமணத்தின் போது இளம் ரோஸ் நிறத்தில் எம்பிராய்டரி வொர்க் நிறைந்த லெஹங்கா அணிந்திருந்தார் .லைட் இங்கிலீஷ் கலர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

எம்பிராய்டரி டிசைன் :

எம்பிராய்டரி டிசைன் :

பெரும்பாலான நிறம் பிங்க் நிறமாகவும். இளம் பச்சை, மஞ்சள் மற்றும் மயில்கழுத்து நீள வண்ணத்தில் பார்டரில் எம்பிராயடரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

சில்வர் மற்றும் தங்க நிறத்திலான மெட்டல் த்ரட்டில் முத்தக்களும், பீட்ஸும் கோர்க்கப்பட்டிருக்கிறது.

செர்வானி :

செர்வானி :

நார்மலாக விளையாட்டு வீரராக களத்தில் டீ சர்ட் அணிந்தே பார்த்துப் பழகிய விராத்தை செர்வானி அணிந்து மாப்பிள்ளை கெட்டப்பில் பார்க்க அழகாகவே தெரிகிறார். ராயல் லுக் என்றே சொல்லலாம்.

சில்க் டர்பன் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த நகை கச்சிதமாக பொருத்தமானது.

நகைகள் :

நகைகள் :

அனுஷ்கா அணிந்திருந்த லைட் பிங்க் லெஹங்காவிற்கு ஏற்றது போல பெரிய வைரக் கற்களுடைய நகையை அணிந்திருந்தார். அன் கட் டைமண்ட் கற்கள் கொண்டு செய்யப்பட்டிருந்த சோக்கர் மாடல் நெக்லஸ் மிகவும் எடுப்பாக அமைந்திருந்தது.

வைரம் போக, பிங்க் நிற கற்கள் மற்றும் ஜப்பான் நாட்டில் பாரப்பரியமான முத்துக்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

விராட் :

விராட் :

மணமகன் விராட் கோஹ்லி நகைகளை அணிவதற்கு பதிலாக எம்பிராய்ட்ரி டிசைன் செய்த ஸ்டோல் அணிந்திருந்தார்.

விராட்டும் மனைவி அனுஷ்கா அணிந்திருந்த பிங்க் நிறத்திலான ஆடையைப் போலவே விராட்டுக்கும் பிங்க் நிறத்திலான செர்வானி.

அதற்கு பிங்க் நிற ஸ்டோல் அதில் தங்க நிறத்தில் ஜர்தோஷி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிச்சயதார்த்தம் :

நிச்சயதார்த்தம் :

அனுஷ்கா ஷர்மா தன்னுடைய நிச்சயதார்த்தத்தின் போது சிகப்பு நிற வெல்வட் சேலையை அணிந்திருந்தார்.

அதில் நிறைய கைவேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மினியேச்சர் முத்துக்கள் எனப்படுகிற சிறிய முத்துக்களைக் கொண்டு ஜர்தோஷி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எல்லாமே சிகப்பு :

எல்லாமே சிகப்பு :

அன் கட் டைமண்ட் மற்றும் முத்துக்களைக் கொண்டு சோக்கரும் அதற்கு மேட்ச்சான தோடும் அணிந்திருந்தார். கண்களுக்கும் சிகப்பு நிற மேக்கப் போடப்பட்டிருந்தது.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அனுஷ்கா அணிந்திருந்த சிகப்பு நிற பெரிய பொட்டு எடுப்பாக தெரிந்தது. விராட் நீள நிறத்தில் கோட் அணிந்திருந்தார்.

நடனம் :

நடனம் :

தன்னுடைய கலகலப்பான குணத்தால் எல்லாராலும் ரசிக்கக்கூடியவராக விராட் கோஹ்லி இருக்கிறார். திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக மணமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்வு நடைபெறுகிறது.

 ஆட்டம் போட்ட விராட் :

ஆட்டம் போட்ட விராட் :

அதனை ‘ஹால்தி' என்று அழைக்கிறார்கள். அந்த நிகழ்விற்கு மிகவும் எளிமையான மஞ்சள் நிறக் குர்த்தா மற்றும் பிங்க் நிற ஸ்கார்ஃப் அணிந்திருந்தார்.

பெரும் மகிழ்ச்சிப்பொங்க உற்சாக நடனம் ஆடிய விராட்!

மெஹந்தி :

மெஹந்தி :

இயற்கையாகவும் மிகவும் சிம்பிளாகவும் பேக்கிரவுண்ட்டில் fuchsia பிங்க் என்ப்படுகிற அடர் நிறமான பிங்க் நிறமும் , ஆரஞ்ச் கிராபிக் நிறம் எனப்படுகிற டார்க் மஞ்சள் நிறத்தில் லெஹங்கா அணிந்திருந்தார்.

இதற்கு மேட்சிங்காக இளம் நீள நிறத்தில் ஃப்ளோரல் பிளவுஸ் அணிந்திருந்தார்.

மேக்கப் :

மேக்கப் :

மெஹந்தி நிகழ்வில் குறைவான மேக்கப் மட்டுமே போடப்பட்டிருந்தது. உடனிருந்த விராட் பாரம்பரியமான காதி குர்த்தா அணிந்திருந்தார். அத்துடன் fuchsia பிங்க் நிறத்தில் நேரு ஜாக்கெட் அணிந்திருந்தார்.

அந்த ஜாக்கெட்டில் ப்ளேசர் பட்டன் கொண்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது.

ரெட் விசஸ் பிங்க் :

ரெட் விசஸ் பிங்க் :

பெரும்பாலும் திருமண நிகழ்வு என்றாலே மெரூன் அல்லது சிகப்பு நிறத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் இந்த ஜோடி பிங்க் நிறத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இவர்களுக்கு ஹிந்து முறைப்படி, சடங்கு சம்பிரதாயங்கள் சூழ நடந்திருக்கிறது.

மணமக்கள் அணிந்திருந்த மாலை கூட மிகவும் லைட் கலரான இளம் பிங்க் மற்றும் வெள்ளை நிறப்பூக்களால் கொண்டு செய்யப்பட்டிருந்தது.

மோதிரம் :

மோதிரம் :

நிச்சயதார்த்தத்தின் போது விராட் அனுஷ்காவிற்கு ஓர் மோதிரத்தை அணிவித்தார். இது அனுஷ்காவிற்கு என்றே பிரத்யோகமாக தேடித்தேடி மூன்று மாதம் அழைந்து கண்டுபிடித்திருக்கிறார் விராட்.

வாவ்! :

வாவ்! :

இது மிகவும் அரிதான ஒரு வகை வைரக்கல். அதனை ஆஸ்திரியாவைச் சேர்ந்த வைக்கல் வல்லுநர் செதுக்கித் தர, அதனை மோதிரமாக விராட் அனுஷ்காவிற்கு அணிவித்திருக்கிறார்.

இதன் விலை மட்டும் ஒரு கோடியைத் தாண்டுமாம்!!

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Virat Kohli Perfect Gift to Anushka!

Virat Kohli Perfect Gift to Anushka!
Story first published: Tuesday, December 12, 2017, 14:30 [IST]
Subscribe Newsletter