அம்பானியின் டின்னர் பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து சென்ற உடை எத்தனை லட்சம் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

புதுப்புது ஃபேஷன்கள் எத்தனை எத்தனை வந்து போனாலும், ஒரு பெண் எப்போதும் அன்றைய நவநாகரிகத்திற்கு ஏற்ப மாறிக் கொள்கிறாள்... அதிலும் குறிப்பாக நடிகைகள் தங்களது ஃபேஷன் விஷயத்தில் வெகு உஷாராக இருக்கிறார்கள்..

ஐஸ்வர்யா ராய் முதலில் உலக அழகியாக தேந்தெடுக்கபட்டு பின்னர் சினிமா துறைக்கு வந்தவர்.. இவரது அறிமுகம் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் தான்... தமிழில் அறிமுகமாகிய ஐஸ்வர்யா ராய் பின்னர் பாலிவுட்டிலும் தனது கொடியை பறக்கவிட்டார்...

அதன் பின்னர் அதன் பிறகு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.. அவருக்கு இப்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. இவருக்கு இப்போது 44 வயதாகிறது...!

Aishwarya Rai bedazzling golden gown

இவர் பெரும்பாலும் அதிகமாக கேமிராக்களின் கண்களில் விழுவதில்லை.. ஆனாலும் நமக்கு எப்போதுமே உலக அழகி என்றாலே நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான்... அவரது நடை, உடை பாவணைகள் அனைத்தும் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்...!

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அம்பானியின் டின்னர் பார்டியில் தான் கேமிராவின் கண்களில் விழுந்துள்ளார்.. அவர் இந்த பார்ட்டிக்கு கோல்டன் மஞ்சள் நிற உடையில் வந்துள்ளார்.. இந்த உடையை வடிவமைத்தவர் அலெக்சில் மாபிலே ஆவார்..

Aishwarya Rai bedazzling golden gown

இந்த உடையில் ஸ்ட்ராப்ஸ் இல்லை.. இந்த கவுணின் முழு பகுதியும் ஒரு தேவதையை போன்ற தோற்றத்தை அவருக்கு கொடுத்துள்ளது.. இதில் உள்ள நேக்லைன் ஸ்வீட் ஹார்ட் நேக் லைன் ஆகும்.. மேலும் ஏ வடிவிலான ஒரு மடிப்புகள் உடையின் அழகை மேம்படுத்தி காட்டியுள்ளது...

Aishwarya Rai bedazzling golden gown

மேலும், இதில் இரண்டு பாக்கெட்டுகளும், அழகிய பெல்ட்டும் இருந்தது.. இது உடையின் அழகை இன்னும் மெருகேற்றுவதாக இருந்தது... அதுமட்டுமின்றி குறைவான மேக்கப்பில், சுருளான லூஸ் கேரில் மிக சாதாரணமாக தோற்றமளித்தார் ஐஸ்வர்யா ராய்..! இவரது இந்த உடையின் விலை 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயாம்...!!!

Read more about: fashion
English summary

Aishwarya Rai bedazzling golden gown

Aishwarya Rai bedazzling golden gown
Subscribe Newsletter