மாரடைப்பால் மரணத்தைத் தழுவிய நடிகை ஸ்ரீதேவியின் சில கடந்த வருட தோற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பல வருடங்களாக பலரது மனதில் கனவுக் கன்னியாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. துபாய்க்கு சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, இன்று அதிகாலை திடீரென்று மாரடைப்பால் இறைவன் அடி சேர்ந்தார். நாடு விட்டு நாடு சென்று உயிரைத் துறந்த இவருக்கு இந்திய திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி நல்ல நடிப்புத் திறமையைக் கொண்டவர் மட்டுமின்றி, இவரது ஸ்டைல்கள் அனைத்துமே அற்புதமாக இருக்கும். சொல்லப்போனால் 80-களில் இவர் தனது ஸ்டைலால் இந்திய திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருந்தார்.

16 வயதினிலே திரைப்படத்தில் 'மயில்' கதாப்பாத்திரத்தில் நடித்து, மயில் என்று கூறினால் இன்றும் பலரது நினைவிற்கு வருபவர் இவரே ஆவார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியது. இத்தகைய நடிகை ஸ்ரீதேவி என்ன தான் 54 வயதானாலும், பல ஸ்டைலான உடைகளை அணிந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார். குறிப்பாக இவருக்கு புடவை மிகவும் அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும். இப்போது சமீப காலத்தில் நடிகை ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்திருந்த சில அற்புத தோற்றங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோஹித் மர்வா திருமணம்

மோஹித் மர்வா திருமணம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் மருமகனான மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்றிருந்தார். 2 நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ரீதேவி டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ஆர்கன்ஷா புடவை அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் இது.

மாஸ்கோ நிகழ்ச்சி

மாஸ்கோ நிகழ்ச்சி

ஸ்ரீதேவி கடந்த வருடம் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த மிகவும் அழகிற மோனோகுரோம் லெஹெங்கா அணிந்திருந்தார். ஸ்ரீதேவி இந்த உடைக்கு மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் ஸ்டைல் அற்புதமாக இருந்தது. முக்கியமாக இந்த உடையை அவர் கையாண்ட விதம் அவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது.

2018 லேக்மீ ஃபேஷன் வீக்

2018 லேக்மீ ஃபேஷன் வீக்

நடிகை ஸ்ரீதேவி எப்போதுமே எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் அசத்தலாக மற்றவர் அவரைப் பற்றி பேசும்படியான உடை அணிந்து வருவார். இந்த அழகிய நடிகை 2018 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கைக் காண வந்திருந்தார். அப்போது அவர் பாஸ்டல் ஷேடு அனிதா டாங்ரே வடிவமைத்த உடை அணிந்து வந்திருந்தார். அவருடன் வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மிகவும் அழகிய பூப்போட்ட உடை அணிந்து வந்திருந்தார்.

2017 இந்திய சர்வதேச திரைப்பட விழா

2017 இந்திய சர்வதேச திரைப்பட விழா

நடிகை ஸ்ரீதேவி 2017 ஆம் ஆண்டு நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் திறப்பு நிகழ்ச்சியின் போது, கணவர் போனி கபூர் மற்றும் மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள் ஜான்வி அற்புதமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர். இந்த சிவப்பு கம்பள விழாவில் நடிகை ஸ்ரீதேவி பழுப்பு நிற புடவை அணிந்து, மேட்ச்சாக தங்க சோக்கர் அணிந்து வந்திருந்தார்.

கடைசி திரைப்படம்

கடைசி திரைப்படம்

இது மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான் நடித்த கடைசி திரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்கு மேற்கொண்டு வந்த ஸ்டைலாகும். இதுவரை இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைலிலேயே அற்புதமானதும் இது என்றே கூறலாம். அம்மா திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு நடிகை ஸ்ரீதேவி பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த பார்டரில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீல நிற புடவை அணிந்து, அதற்கு மேட்ச்சாக கழுத்தை ஒட்டிய அழகிய ஆபரணம் ஒன்றையும் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remembering The Gorgeous Sridevi, Best Looks She Carried In 2017-2018

Paying a tribute to the ever-gorgeous Sridevi, best looks she carried in 2017 and 2018. Have a look.
Story first published: Sunday, February 25, 2018, 12:31 [IST]