For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க

By Haribalachandar Baskar
|

பெண்கள் தங்களது கூந்தல் அலங்காரம் செய்வதில் அதீத கவனம் செலுத்தக் கூடியவர்கள். மிக நீண்ட கூந்தல் வேண்டும் என்கிற ஆவலில் இருந்து தங்கள் கூந்தலை பலவகையாக உருமாற்றிக் கொள்ளவதற்கான விருப்பங்களை பெண்கள் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக மாடல்களுக்கும் பிரபலங்களுக்கும் இந்த கூந்தல் பரிமாற்றம் என்பது மிகத் தேவையானதாக இருக்கிறது.

ஹாலிவுட்டில் இருப்பவர்களுக்கு எதையாவது புதிதாக செய்யாவிட்டால் அவர்களால் நிம்மதியாகவே இருக்க முடியாது. அப்படி முடியில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றமே பேசு பொருளாக மாறி இருக்கிறது. தங்களது கூந்தலை அவர்கள் பரிமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரபலங்களை பிந்தொடர்பவர்கள் சும்மா இருப்பாங்களா காசு இல்லாமல் வேலை செய்து அவுங்களுக்கு புரோமசனையும் பண்ணிவிட்டு போயிடுறாங்க. அப்படி ட்ரெண்ட் ஆன பிரபலங்களோட முடி உருமாற்றத்தை பற்றி தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒவ்வொன்றுக்கும் ஒன்று

ஒவ்வொன்றுக்கும் ஒன்று

ஒவ்வொருவகையான உடைகளுக்கு ஏற்றவாறு அணிகலன்களை தேர்ந்தெடுத்து அணிவது போன்று இன்று கூந்தலையும் உருமாற்றிக் கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான கூந்தல் அமைப்பு மற்றும் முக அமைப்பு உள்ளது. அந்த அமைப்புகளுக்கு ஏற்றவாறு தங்களது முடிகளை உருமாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். உதாரணமாக வட்ட முக அமைப்பு கொண்டவர்களின் முடித்தன்மை சுருட்டையாகவோ, தடிமனாகவோ , மென்மையாகவோ இப்படி பல வகைகளில் இருக்கலாம். இதை அடிப்படையாகக் கொண்டு எந்த முடி அழங்காரத்தை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பதற்கான தேடலில் தான் இன்றைய கால பெண்கள் முழுமையாக ஈடுபடுகின்றனர்.

Most Read: இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

அழகு சாதனக் கடை:

அழகு சாதனக் கடை:

முன்பெல்லாம் ப்யூட்டி பார்லர் என்பது நகரங்களில் மட்டும் தான் இருக்கும். கண்புருவத்தில் உள்ள முடிகளை ஒழுங்கமைக்க மட்டும் தான் ப்யூட்டி பார்லருக்கு செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் கிராமங்களில் கூட ப்யூட்டி பார்லர்களின் ஆதிக்கம் கோலோச்சத் தொடங்கியுள்ளது. எனவே தேவையான அழகு பராமரிப்பு விசயங்களை உடனுக்குடன் செய்து கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது.

முடியுடன் விளையாடுங்கள்:

உங்களுக்கான சிறந்த முடி அலங்காரத்தை தெரிவு செய்ய வேண்டுமெனில் உங்கள் முடியுடன் விளையாடத் தயாராகுங்கள். அது முதன்மையான முடித் வெட்டுவதாக இருக்கலாம், முடிக்கு கலரூட்டுவதாக இருக்கலாம், முடியின் அலங்காரத்தை உருமாற்றுவதாக இருக்கலாம். தன்னுடைய அழகில் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் அனைவருக்கும் இந்த விளையாட்டை விளையாடிப் பார்த்து தான் ஆக வேண்டும். அதற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வாழும் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் யார் என இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கெட்டி பெர்ரி

லேடி ககா

டெய்லர் ஸ்விப்ட்

ஹெய்லி பெய்பர்

கேத்ரீன் லாங்ஃபோர்ட்

கெட்டி பெர்ரி:

கெட்டி பெர்ரி:

image courtesy:

கேத்ரீன் எலிசபெத் ஹட்சன் என்பது கெட்டி பெர்ரியின் இயற்பெயராகும். இவர் அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்சியின் நடுவர் என பல பரிணாமங்களைக் கொண்டவர். பொதுவாக பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் தோன்றுபவர்கள் தங்கள் அழகை பராமரித்துக் கொள்வதற்கு மிகப்பெரிய சிரமத்தை மேற்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக பாடகர்கள் அணியும் உடை, முடி அலங்காரம் என எல்லாமே மிக அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். அப்படித் தான் இவரும் தன்னுடைய முடி அலங்காரத்தை மாற்றி இருக்கிறார்.

அதிலும் கெட்டி பெர்ரி தனித்துவமான ஃபேசன் தேர்வுகளை தேர்வு செய்வதில் பெயர் போனவர். அது மட்டுமில்லாமல் தலைசிறந்த முடி அலங்காரத்தை தேர்வு செய்வதில் இவரின் வல்லமை மிகப் பெரியது. அவர் சமீப காலமாக பிக்ஸி வகை ஹேர்கட்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். பிளாட்டினம் போன்ற அலை அலையாக காட்சி அளிக்கக் கூடிய அவரது கூந்தல் பரிமாற்றம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. மிகக் குறுகலாக முடியை வெட்ட வேண்டும் என ஆசை உள்ளவர்கள் இதை தேர்வு செய்யலாம்.

Most Read: இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க

லேடி ககா

லேடி ககா

image courtesy:

இவரும் ஒரு அமெரிக்க பாடகர் தான். சிறிய வயதில் திறந்த மேடையில் பாடகராக தோன்றிய லேடி ககா தற்போது பாடலாசிரியர், நடிகை என பல பரிணாமங்களை எடுத்துள்ளார். நடிகை என்றாலே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் படத்திற்கு வெளியே இயல்பாகவே திரிபவர்களுக்கு மத்தியில் லேடி ககா இயல்பு வாழ்க்கையிலும் கூந்தல் அலங்கார மாற்றத்தை விரும்புகிறார். க்யூர்கி வகை அலங்கார மாடலை இவர் தற்போது தேர்வு செய்திருக்கிறார். அதோடு மட்டும் நில்லாமல் கூந்தலுக்கு அவர் செய்திருக்கும் கலரிங்கும் அவருக்கு அருமையாக பொருந்தியிருக்கிறது.

டெய்லர் ஸ்விப்ட்:

டெய்லர் ஸ்விப்ட்:

image courtesy:

டெய்லர் அலிசன் ஸ்விப்ட் என்ற இயற்பெயர் கொண்ட டெய்லர் ஸ்விப்ட் தன்னுடைய சுயவாழ்க்கையை பாடலாக மாற்றி ஊடகங்களில் வெளியிட்டு அதன்மூலம் உலக கவனத்தை ஈர்த்தவர். தோள்பட்டை அளவு இருக்கக்கூடிய அலை அலையான அல்லது சுருள் தன்மை கொண்ட அலங்காரத்தை இவரது முடிக்கு கொடுத்திருக்கிறார்.

ஹெய்லி பெய்பர்

ஹெய்லி பெய்பர்

image courtesy:

ஹெய்லி பெய்பர் 23 வயதே ஆன அமெரிக்க மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலாமாவார். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சொல்லவா வேணும். அவர்கள் கூந்தலில் அடிக்கிற சேட்டைகள் என்பது சொல்லி மாளாது. அப்படிப்பட்ட ஹெய்லி பெய்பர் பபிள்கம் பிங் கலரில் தனது முடி அலங்காரத்தை மாற்றி அமைத்திருக்கிறார். ஆனால் இன்னர்நெட்டில் ஒரு காய்ச்சி காய்ச்சுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது ஆனால் பலரது பாரட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

Most Read: மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

கேத்ரீன் லாங்ஃபோர்டு:

கேத்ரீன் லாங்ஃபோர்டு:

image courtesy:

கேத்ரீன் லாங்ஃபோர்டு ஒரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை. இவருக்கும் 23 வயதே ஆகிறது. ஹன்னா பேக்கர் என்ற கதாபாத்திரத்தால் உலகுக்கு நன்கு அறிமுகமானவர். அதே 13 ரீசன் ஒய் என்ற இணையத்தொடரில் நடித்து பல்லாயிரக்கணக்கானவர்களின் இதயத்தில் கொடி கட்டிப்பறந்தவர். பழுப்பு நிறத்தை அடித்தளமாகக் கொண்டு செப்பு கலந்த சிவப்பு நிறக்கலரை தனது நீண்ட கூந்தலுக்கு கலரிங் செய்து தற்போது அசத்தி வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Celebrity Hair Transformations of 2019

Playing up with your hairstyle is one of the easiest ways to get a makeover. Whether it is a major haircut or a unique hair color, hair transformations have been everyone’s go-to choice when they need a beauty change. Our favorite celebrities are living proof of this! Here are our favorite hair transformations from 2019 so far.