For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்!!

இரண்டே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய மூன்று அழகான ஹேர்ஸ்டைல்கள் எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

|

Recommended Video

மூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்!! | Boldsky

எப்பவும் நம்மளோட ஸ்கின்னையும் ஹேரையும் பராமரிக்கிறது ரொம்ப மெனக்கெடற வேலைன்னு நினச்சுட்டு இருக்கோம். அதுலயும் இந்த முடி இருக்கே அப்பப்பா.... இழுத்து கட்டிட்டு போனா வியர்டா தெரியும், ஃப்ரீ ஹேர் விட்டா முடி கொட்டும், ஸ்ப்லிட் ஹேர் வரும், ஆபிஸ்,காலேஜ்னு கொஞ்சம் ட்ரெண்டியா போலாம்னு ட்ரஸ் அக்சசரீஸ் எல்லாம் செல்க்ட பண்ணிருவோம் ஆனா இந்த ஹேர் ஸ்டைல் தான் பெரிய பிரச்சனையா இருக்கும்....

Quick Easy Braid Styles for Summer

அதுக்காக தான் இந்த வீடியோ எந்த ஹேர் ஸ்டைலும் எனக்கு செட்டாக மாட்டிங்குதுன்னு சொல்றவங்க ஹேர் ஸ்டைல் பண்ண எல்லாம் டைம் இல்லனு சொல்றவங்களுக்கு ஒரு பெஸ்ட் சொல்யூசன் காத்திட்டு இருக்கு மூணு விதமான ஹேர் ஸ்டைல் க்விக்கா எப்டி பண்றது பாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

முதல்ல முடிய நல்லா சீவிக்கோங்க. நேர் உச்சி எடுத்து பழக்கமிருந்தாலும் இந்த ஹேர் ஸ்டைல் பண்ணும் போது சைட்ல உச்சி எடுத்துக் கோங்க ஏன்னா இந்த ஹேர்ஸ்டைலுக்கு நேர் உச்சி எடுத்தா நல்லாயிருக்காது.

இப்போ கம்மியான போர்ஷன் இருக்கிற சைட்ல இருந்து முடிய எடுத்து வெளிய விடுங்க.

#2

#2

அதத்தவிர மத்த முடிய எல்லாம் ஒரு சைட் கொண்டு வந்துருங்க அதுக்கப்பறம் நிறைய முடி இருக்குற சைட் ஃபவ் இருக்குமில்லயா அங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா முடி எடுத்துட்டு பின்னிட்டே வாங்க கரெக்டா காதுக்கு மேல வரும் போது அந்த ஹேர லாக் பண்ற மாதிரி ஒரு க்ளிப் மாட்டிக்கங்க

இப்போ மொத்த முடியையும் ரெண்டு பார்ட்டா பிரிக்கணும்.

#3

#3

முதல் பார்ட்டா நல்லா டைட்டா ரோல் பண்ணுங்க அதே நேரத்துல ரெண்டாவது பார்ட்டையும் டைட்டா ரோல் பண்ணனும். முதல்ல மாட்டியிருந்த க்ளிப்ப ரிமூவ் பண்ணிட்டு இந்த ரெண்டு தனித்தனி ரோலையும் சேர்த்திடுங்க கடைசியா ஒரு பேண்ட் போட்டுட்டு விட்ரலாம். ஹேர் லாக் ஆன மாதிரியும் ஆச்சு பாக்கவும் நீங்க ட்ரெண்டியா ஒரு ஹேர் ஸ்டைல் பண்ண மாதிரி தெரியும்.

#4

#4

இதுக்கு தலையில உச்சி எடுக்காம ஃபுல்லா லாக் பண்ணி ஃப்ரண்ட் ஃபவ் இருந்தா அழகா இருக்கும். லாக் பண்ணிட்டு மொத்த முடியையும் ஒரு பேண்ட் போட்டு லாக் பண்ணிக்கோங்க லாக் பண்ண முடில இருந்து ஒரேயொரு சின்ன பிட் முடிய மட்டும் பிரிச்சு அதுல இருந்து மொத்த முடியையும் சுத்தி ஒரு தடவ சுத்தி ஹேர் பின் குத்திக்கணும்.

#5

#5

இப்போ நம்ம நார்மலா ஜடை பிண்ற மாதிரி ஹேர மூணா பிரிச்சு ஜடை பின்னிடலாம். ரொம்ப திண் ஹேர் இருக்குறவங்க நடுவுல கொஞ்சம் இழுத்து விடுங்க ஹேர் கொஞ்சம் டென்சா தெரியும். இது நார்மல் ஹேர் ஸ்டைல் தான் ஆனா பாக்க டிஃபரண்டா தெரியும்.

#6

#6

இது ரொம்பவே சிம்பிள்.... முதல்ல மொத்த ஹேரையும் சைட்ல லாக் பண்ணி ஒரு பேண்ட் போட்டுக்கோங்க அதுல இருந்து ஹேர ரெகுலரா மூணா பிரிச்சு ஜடை பின்ற மாதிரி பின்னி கடைசியா இன்னொரு பேண்ட் வச்சு லாக் பண்ணிடுங்க. இப்போ மேல ஃபர்ஸ்ட் போட்ட பேண்ட்ட மெல்ல வெளிய எடுத்துருங்க...

பாக்க ஸ்டைலிஷா இருக்கும். ஃபர்ஸ்ட் போட்ட பேண்ட் கடைசியா எடுக்கணும்ன்றனால ரொம்ப டைட்டா போட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quick Easy Braid Styles for Summer

Quick Easy Braid Styles for Summer
Desktop Bottom Promotion