Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
புகைப்பிடிப்பது உங்கள் சருமத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
புகைப்பழக்கம் என்பது ஒரு தீய பழக்க வழக்கமாகும். புகைப்பிடிப்பதால் நம் உடலில் ஏராளமான நோய்கள் உண்டாகிறது. புகையிலை நம் தோல் செல்கள், சுவாசக்குழாய் செல்கள், மனித உடலின் அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது.
புகையிலையில் நிகோடின் என்ற போதைப் பொருள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிகோடின் தோல், சுவாச பாதை மற்றும் குடல் சளி வழியாக உறிஞ்சப்படுகிறது. நிகோடின் தோல்களில் உள்ள உயிரணு செல்களில் பாதிப்பை உண்டாக்கி செல் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

இது செல்களில் உள்ள தோல் இரத்த தமனிகளை அழித்து இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. நிகோடின் கொலாஜன் புரதம் கொண்ட தோல் ஃபைப்ரோபிளாஸ்ட்களின் வடிவத்தை பாதிக்கிறது. இந்த ஃபைப்ரோபிளாஸ்ட் நம் சருமத்திற்கு மிகவும் அவசியம்.
இது சருமத்தின் உறுதி மற்றும் காயங்களை குணப்படுத்துவதற்கும், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கும் அவசியம். சரி வாங்க புகைப்பிடிப்பதால் உங்கள் சருமம் எந்த விதத்தில் எல்லாம் பாதிப்படைகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தோல் வயதாகுதல் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுதல்
புகைப்பிடிக்கும் பழக்கம் சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் அளவை குறைக்கிறது. இதனால் உங்கள் சருமம் சீக்கிரமே வயதாக தொடங்குகிறது. 2021 ஆம் ஆண்டு மதிப்பாய்வு படி, புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகைப்பிடிப்பவர்களின் வைட்டமின் டி அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் டி தோலுக்கு அரணாக செயல்படவும், தோல் திசுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது. புகைப்பிடிப்பதால் சரும சுருக்கங்கள், முகத்தின் கவர்ச்சி குறைந்து போதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. புகைப்பிடித்தல் என்பது உங்கள் முக தோற்றத்தில் பல தீங்கை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
தோலின் தோற்றம் மற்றும் தோலில் தொய்வு ஏற்படுதல்
புகைப்பிடிப்பது நமது சருமத்தில் மெலனோசைட் உற்பத்தியை உண்டாக்குகிறது. இதனால் சருமத்தில் வயதான புள்ளிகள், கருப்பு திட்டுகள் போன்றவை ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.
இதனால் வெளிர் மற்றும் சீரற்ற நிலை ஏற்படும். இது சருமத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்கும் நிலையை உண்டாக்குகிறது. புகையிலையில் சரும நீர் இழப்பை ஏற்படுத்தும் இராசயனங்கள், சருமத்தில் உள்ள கொலாஜன், எலாஸ்டின் மற்றும் ஃபைபர்களின் சிதைவை ஏற்படுத்தும் இராசயனங்கள் இதில் உள்ளன.
அலோபீசியா
ஒரு நாளைக்கு 10 அல்லது அதற்கு மேல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு மிதமான மற்றும் கடுமையான ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா உருவாகும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இதனால் முடி உதிர்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. டி. என். ஏ சேதம், இரத்த நாளங்களில் சுருக்கம், முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன்களில் பாதிப்பு, வயதாகுதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
புகைப்பிடிப்பதை நிறுத்தினால் எந்த மாதிரியான நன்மைகள் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும்
புகைப்பிடிப்பதை நிறுத்திய ஒரு மாதத்திற்கு முன்பே வயதான புள்ளிகள், சிவத்தல் போன்ற பிரச்சினைகள் குறையலாம். புகைப்பிடிப்பதை நிறுத்துவது சருமத்தில் வயதான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்தினால் சருமம் புத்துணர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 2010 இல் இத்தாலியின் மிலனில் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு பைலட் திட்டம் 64 பெண்களில் நடத்தப்பட்டது. புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் தோலில் ஏற்படும் நன்மைகளை மதிப்பிட ஆராய்ச்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் அவர்களின் சருமம் 9 வயது வரை குறைந்த மாதிரி தென்பட்டது. இளமையாக இருப்பது போன்ற தோற்றத்தை பெற்றார்கள்.
ஒரு நபர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு உடல் அதன் கொலாஜன் உற்பத்தியை மீட்டெடுக்கும். இது உங்கள் சருமத்திற்கு பிரகாசமான மென்மையான தோற்றத்தை கொடுக்கும். புகைப்பிடித்தலை நிறுத்துவதால் தோலில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் மாற்றியமைக்க முடியும்.
புகைப்பிடிப்பதால் கண்களில் ஏற்படும் மாற்றங்கள்
புகைப்பிடிப்பதால் கண்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. பல்வேறு கண் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிகரெட் புகையால் கண் எரிச்சல், மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனால் கண்களில் சிவத்தல், வறட்சி மற்றும் கண்களில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. நீண்ட காலமாக புகைப்பிடிப்பது கண்களில் கண்புரையை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. இது வயதானவர்களில் பார்வை இழப்பை உண்டாக்குகிறது.



Click it and Unblock the Notifications
