Latest Updates
-
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்! -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும் -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Beetroot Face Packs In Tamil: ஒவ்வொருவருமே எப்போதும் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக சருமத்திற்கு விலை உயர்ந்த பல அழகு சாதன பொருட்களை வாங்கியும் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி விலை அதிகமான க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினால் தான் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் நம் வீட்டிலேயே சருமத்தின் அழகையும், பொலிவையும், ஏன் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும் பொருட்கள் அதிகம் உள்ளன. அதில் ஒன்று தான் பீட்ரூட்.

பீட்ரூட்டில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டாலயின்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி, சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தரும். அதுவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்கு சரும நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு பீட்ரூட்டைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உங்களுக்காக சில பீட்ரூட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பீட்ரூட் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பீட்ரூட்டை துருவி, அதன் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் கெட்டியான தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. பீட்ரூட் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பீட்ரூட்டை துருவி அதன் சாற்றினை ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. பீட்ரூட் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பீட்ரூட்டை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. பீட்ரூட் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பீட்ரூட்டை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
5. பீட்ரூட் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பீட்ரூட்டை துருவி ஒரு கிண்ணத்தில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
