Latest Updates
-
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வெயிலால் டல்லாக இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான வெயில் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். அதுவும் நீண்ட நேரம் வெயிலில் சுற்றி திரியும் போது, சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சரும வறட்சியை சந்திக்க நேரிடும். இப்படி ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்க முயற்சிக்காவிட்டால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை, மென்மைத்தன்மையும் பாதிக்கப்படும்.

இந்நிலையில் கோடையில் சருமம் அழகாகவும், நீரேற்றத்துடனும் இருக்க ஹையலூரோனிக் அமில சீரம்கள் போன்ற இலகுவான, ஈரப்பதமூட்டும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். அதுமட்டுமின்றி, ஒருசில ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ்க்குகளையும் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும், பொலிவோடும் இருக்கும். அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளை போடும் போது முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது கோடையில் பொலிவான சருமத்தைப் பெற உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தர்பூசணி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் சில துண்டுகள் தர்பூசணியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பிளெண்டரில் சிறிது வெள்ளரிக்காயை எடுத்து, அத்துடன் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, சருமத்திற்கு ஒரு நல்ல பொலிவைத் தரும்.
5. முல்தானி மெட்டி மற்றும் புதினா ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து, அத்துடன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது புதினா இலைகளை அரைத்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் முகப்பரு அதிகம் கொண்டவர்களுக்கு ஏற்றது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
