Latest Updates
-
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
கோடையில் முகம் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப இந்த பச்சை பயறு ஃபேஸ் பேக்கை போடுங்க...
Summer Skin Care Tips: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், சருமம் பொலிவிழந்து, கருமையாகவும், சில சமயங்களில் வறண்டும் இருக்கும். இந்நிலையில் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள தவறாமல் சரும பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையிலேயே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாசிப்பருப்பு. இந்த பாசிப்பருப்பின் மாவைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வரும் போது சருமத்தில் உள்ள பல பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும நிறமும் அதிகரிக்கும், அதன் ஆரோக்கியமும் மேம்படும்.
அக்காலத்தில் நம் முன்னோர் தங்களின் சரும அழகை பராமரிக்க பயித்தம் பருப்பு/பச்சை பயறு மாவைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அப்படிப்பட்ட பச்சை பயறு மாவை தினமும் சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தி வருவதோடு, அதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வரும் போது இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இப்போது பச்சை பயறு மாவை கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்பதைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, பொலிவைத் தரும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தில் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியை போக்கும், முகப்பருவை தடுக்கும் மற்றும் பொலிவிழந்த சருமத்தை பிரகாசமாக்கும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பச்சை பயறு மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை தடுக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
