Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
வெயிலால் முகத்தில் பிம்பிள் அதிகமா வருதா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க போயிடும்...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலத்தில் சிலர் முகப்பரு பிரச்சனையை சந்திப்பார்கள். ஏனெனில் வெயில் காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால், அதிகமாக வியர்க்கும். இதனால் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, சுற்றுச்சூழல் உள்ள தூசிகள் சருமத்தில் படிந்து, சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி பருக்களை உண்டாக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.
உங்களுக்கும் இந்த மாதிரியான முகப்பரு அதிகமாக வருமா? இதை தடுக்க எந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே கோடைக்காலத்தில் வரும் வலிமிக்க பிம்பிளைப் போக்க உதவும் ஒருசில ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கோடைக்காலத்தில் அடிக்கடி போட்டு வந்தால், முகப்பருக்களைத் தடுக்கலாம்.

1. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்குடன் சிறிது தயிரை சேர்த்துக் கொண்டால், முகப்பருவிற்கு முக்கிய காரணமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறும்.
2. கற்றாழை ஃபேஸ் பேக்
உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வருகிறதா? அப்படியானால் கற்றாழையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு:
* நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை முகப்பரு அதிகம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மாயமாய் மறையும்.
3. மஞ்சள் மற்றும் வேப்பிலை ஃபேஸ் பேக்
பழங்காலம் முதலாக மஞ்சள் சரும அழகை பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள பருக்கள் சீக்கிரம் பட்டுப்போகும். அதற்கு:
* சிறிது வேப்பிலையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
4. முட்டை வெள்ளைக்கரு மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்
உங்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் கட்டுப்பாடின்றி வருகிறதா? அப்படியானால் இந்த முட்டை வெள்ளைக்கரு மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்கைப் போடுங்கள். அதற்கு,
* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் ஒரு துளி டீ-ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. கடலை மாவு, தேன் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
சரும அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவு சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்கவல்லது. குறிப்பாக முகப்பருக்கள் மற்றும் முகப்பரு தழும்புகளை இது கட்டுப்படுத்தும். இந்த கடலை மாவுடன் தேன் மற்றும் தயிரை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு,
* ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications