Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
கோடைகாலத்தில் தங்கம் மாதிரி ஜொலிக்கிற சருமம் வேணுமா? இந்த பழங்களை முகத்தில் யூஸ் பண்ணுங்க போதும்...!
Summer Care Tips: மக்களை வாட்டி வதைக்கும் கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறதோ அதேயளவிற்கு சருமமும் பாதிக்கப்படுகிறது. கோடைகாலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியமாகும். சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் பியூட்டி பார்லரையே நம்பி இருக்க முடியாது.
வீட்டிலேயே செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். பழங்கள் உடலை உள்ளுக்குள் இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் ஆரோக்கியமானதாக வைத்திருக்கும்.

சில பழங்களை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமானதகவும், பளபளப்பானதாகவும் மாற்றும். பிரபல அழகுக்கலை நிபுணர் ஜெயஸ்ரீ சருமத்தை கோடைகாலத்தில் அழகாக வைத்துக்கொள்ள உதவும் பல ஃபேஸ் பேக்குகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்
ஸ்ட்ராபெர்ரிகள் கவர்ச்சிகரமான பழங்கள் மட்டுமல்ல, அவை ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்தவை. அவை சருமத்தை பிரகாசமாக்கவும், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
எப்படி செய்ய வேண்டும்?
நன்கு பழுத்த ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து கூழாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்ட்ராபெர்ரி கூழில் 1 ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து இளமையான சருமத்தைப் பெற உதவும்.
பப்பாளி ஃபேஸ் மாஸ்க்
பப்பாளி அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு பழமாகும், இதில் பப்பேன் என்ற சக்திவாய்ந்த நொதி உள்ளது. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி பளபளப்பாக மாற்றும். பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குக்கும்.
எப்படி செய்ய வேண்டும்?
சருமத்தை தங்கமாக மாற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்கிற்கு, நன்றாக பழுத்த பப்பாளியின் சில துண்டுகளை எடுத்து கூழ் போல பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கூழில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் சருமம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்
கோடைகாலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் பழம் என்றால் அது தர்பூசணிதான். தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது, இது ஒரு இயற்கை டோனராகவும் இருக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
எப்படி செய்ய வேண்டும்?
தர்பூசணி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே செய்வதற்கு, சில தர்பூசணி துண்டுகளை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த பழக்கூழில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், நீரேற்றமான, புத்துணர்ச்சி நிறைந்த மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.
மாம்பழ ஃபேஸ் மாஸ்க்
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மேலும் சருமத்தை ஈரப்பதமாக்கி புத்துணர்ச்சி இயற்கை சர்க்கரைகள் உள்ளன.
எப்படி செய்ய வேண்டும்?
மாம்பழ ஃபேஸ் பேக்கின் நன்மைகளை அனுபவிக்க, சில பழுத்த மாம்பழத் துண்டுகளை எடுத்து கூழாகப் பிசைந்து கொள்ள வேண்டும். கூழுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் மிருதுவமான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications

