Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
குளிர்காலத்தில் சந்திக்கும் சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க...
சென்சிடிவ் சருமத்தினருக்கு தேன் மிகச்சிறந்த சரும பராமரிப்பு பொருள். இப்போது தேனை குளிர்காலத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
குளிர்காலம் வந்தாலே சருமத்தில் பிரச்சனைகளும் வர ஆரம்பித்துவிடும். குறிப்பாக சரும வறட்சியை நிறைய பேர் சந்திப்பார்கள். குளிர்காலத்தில் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தடுக்க பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் அந்த க்ரீம்கள் தற்காலிகமாகவே நிவாரணத்தை அளிக்கும். எனவே கெமிக்கல் கலந்த க்ரீம்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முயலுங்கள். அதுவும் நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் தேன் கொண்டே சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கலாம்.

தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதைத் தவிர, பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பிற சரும தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது. முக்கியமாக தேனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது. சென்சிடிவ் சருமத்தினருக்கு தேன் மிகச்சிறந்த சரும பராமரிப்பு பொருள். இப்போது தேனை குளிர்காலத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

#1 தேன் மற்றும் பால்
ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலுடன், சம அளவில் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி குளிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், சருமம் பட்டுப்போன்று இருக்கும்.

#2 தயிர் மற்றும் தேன்
ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்றது.

#3 தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்பு சருமத்தை உலர்த்தி, மாய்ஸ்சுரைசரை மறக்காமல் தடவ வேண்டும்.

#4 கற்றாழை ஜெல், தேன் மற்றும் பட்டை தூள்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்பு துணியால் சருமத்தை உலர்த்தி, மாய்ஸ்சுரைசரை மறக்காமல் தடவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
