For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பட்டாசுகளால் சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்கை நீக்க நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..

தீபாவளி பட்டாசுகளால் சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளைப் போக்க சிறந்த வழி என்றால், அது ஃபேஸ் பேக்கைப் போடுவது தான். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க நிறைய ஃபேஸ் பேக்குகள் உள்ளன.

|

தீபாவளி பண்டிகையன்று அனைவருமே பட்டாசுகளை வெடித்து கொண்டாடியிருப்போம். ஆனால் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை சருமத்தில் தங்கி சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும். சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டால் அது பலவிதமான சரும பிரச்சனைகளை வரவழைத்து, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். எனவே தீபாவளிக்கு பின் உடலை சுத்தம் செய்வது போலவே, சருமத்தையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

Post Diwail Skin Care: Face Packs That Helps To Remove Dirt From Your Skin In Tamil

தீபாவளி பட்டாசுகளால் சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளைப் போக்க சிறந்த வழி என்றால், அது ஃபேஸ் பேக்கைப் போடுவது தான். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க நிறைய ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். கீழே சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

1. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 1-2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகப்பரு மற்றும் எண்ணெய் பசை பிரச்சனையைத் தடுக்க உதவும்.

2. தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

2. தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

ஒரு தக்காளியை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு, பாதி வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

3. கற்றாழை மற்றும் மஞ்சள் தூள்

3. கற்றாழை மற்றும் மஞ்சள் தூள்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் மற்றும் பருக்கள் தடுக்கப்படும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, இத்துடன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தயிர் மற்றும் வாழைப்பழம்

4. தயிர் மற்றும் வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி, துணியால் துடைக்க வேண்டும். இதனால் தயிர், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளைக் குறைக்கும். வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக்குகடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5. தேன் மற்றும் எலுமிச்சை

5. தேன் மற்றும் எலுமிச்சை

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைத்து, முகப்பரு மற்றும் பிம்பிளைத் தடுக்க உதவும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதில் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Post Diwail Skin Care: Face Packs That Helps To Remove Dirt From Your Skin In Tamil

Post Diwail Skin Care: Here are some face packs that helps to remove dirt from your skin. Read on to know more...
Story first published: Tuesday, October 25, 2022, 19:23 [IST]
Desktop Bottom Promotion