Just In
- 8 min ago
கடவுளுக்கு உணவு படைக்கும்போது தெரியாம கூட இந்த விஷயங்கள நீங்க செய்யக்கூடாதாம்...ஏன் தெரியுமா?
- 33 min ago
இதுல உங்க பெருவிரல் எப்படி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்...
- 57 min ago
இந்த எளிய வாஸ்து குறிப்புகள் உங்கள் வியாபாரத்தில் விரைவான இலாபத்தையும், வெற்றியையும் அடைய உதவுமாம்!
- 1 hr ago
வெற்றிலை சாப்பிட்ட பிறகு நீங்க இந்த உணவு பொருட்கள சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா ஆபத்தாம்!
Don't Miss
- News
எல்லாம் பிரண்ட்ஷிப்பிற்காக! மனைவியை 5 நண்பர்களுடன் சேர்ந்து கணவனே பலாத்காரம்.. ஷாக்கான போலீஸ்
- Finance
ரஷ்யாவை அசைக்க முடியாதோ.. சவால்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனை..என்ன நடந்தது தெரியுமா?
- Sports
நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?
- Movies
ஜனவரி 28ல் துவங்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி.. அப்டேட் சொன்ன சீரியல் நடிகை!
- Automobiles
யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! தலையில் நல்லா மொளகா அரைச்சிடுவாங்க...
- Technology
மீண்டும் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை கம்மி விலையில் களமிறக்கும் Redmi.!
- Travel
சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
தங்கம் மாதிரி நீங்க ஜொலிக்க இந்த முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்குகளை யூஸ் பண்ணா போதுமாம் தெரியுமா?
ஆண், பெண் என அனைவரும் தான் அழகாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சரும மினுமினுப்புக்கும் பாதுகாப்பிற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இயற்கையான பொருட்கள் உள்ளன. முல்தானி மிட்டி அல்லது புல்லர்ஸ் எர்த் ஒரு இயற்கையான களிமண் மூலப்பொருள் ஆகும். இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்டைய ஆயுர்வேத மூலிகை மருந்து இயற்கை தாதுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. இது முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பிரச்சனைகள் மற்றும் திறந்த துளைகளை குறைக்க உதவுகிறது. தூள் வடிவ பேஸ்டாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தை மெதுவாக வெளியேற்றி, மென்மையான, மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.
முல்தானி மிட்டியுடன் உங்கள் சமையலறை பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம். வழக்கமான பயன்பாட்டின் மூலம், ஒப்பனை அல்லது மற்ற சலூன் அழகு சிகிச்சைகள் மூலம் சேதமடைந்த உங்கள் சருமத்தை நீங்கள் சரிசெய்து புத்துயிர் பெறலாம். உங்களுக்கு அழகான சருமத்தை வழங்கக்கூடிய முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்குகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

எளிய ஃபேஸ் பேக்
நீரிழப்பு தோலுக்கு இந்த எளிய ஃபேஸ் பேக் வேலை செய்யும்.
தேவையான பொருட்கள்: 1 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 1/4 கப் பால் (அதிக கொழுப்பு), ரோஸ் வாட்டர்.
வழிமுறைகள்: அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக்கை 10-15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

கூலிங் ஃபேஸ் பேக்
சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் ஈரப்பதமாக்குவதற்கும் இந்த கூலிங் ஃபேஸ் பேக் வேலை செய்கிறது.
தேவையான பொருட்கள்: 1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி சந்தன தூள், 2 தேக்கரண்டி தேங்காய் தண்ணீர், 2 தேக்கரண்டி பால்.
வழிமுறைகள்: பொடிகள் மற்றும் திரவங்களை நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். சுத்தமான உங்கள் முகத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்
முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்ய ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்கை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்: 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்.
வழிமுறைகள்: அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, தண்ணீரில் நன்றாக பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை முகப்பரு, பருக்கள் மீது தடவவும். 30-45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த இயற்கையான ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.

ஈரப்பதமூட்டும் மாஸ்க்
அனைத்து தோல் வகை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு இந்த ஈரப்பதமூட்டும் மாஸ்க் உதவும்.
தேவையான பொருட்கள்: 1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல். உங்கள் முல்தானி மிட்டியை சம பாகமாக கற்றாழை ஜெல்லுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வழிமுறைகள்: முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான பேஸ்ட் வரை நன்கு கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். பேக் 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

ரேடியன்ஸ் ஃபேஸ் பேக்
இயற்கையான சரும பளபளப்பு மற்றும் சருமம் பொலிவாக இருக்க இந்த ரேடியன்ஸ் ஃபேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்: 3 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி தக்காளி சாறு, 1/2 தேக்கரண்டி பால்.
வழிமுறைகள்: அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். உலர்ந்த, சுத்தமான முகத்தில் அதைப் பயன்படுத்துங்கள். 15 நிமிடங்களுக்கு பேக்கை அப்படியே விடவும். சிறந்த முடிவுகளுக்கு, பளபளப்பான, பொலிவான சருமத்தைப் பெற வாரத்திற்கு ஒரு முறை இந்த பேக்கைப் பயன்படுத்தவும்.

பப்பாளி எக்ஸ்ஃபோலியண்ட் ஃபேஸ் பேக்
தோலை உரித்தல் மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த பப்பாளி எக்ஸ்ஃபோலியண்ட் ஃபேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தலாம்.
தேவையானவை: 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ்.
வழிமுறைகள்: நன்றாக பேஸ்ட் செய்ய பொருட்களை நன்கு கலக்கவும். சுத்தமான, உலர்ந்த முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக்கை அதிகபட்சம் 30 நிமிடங்கள் உங்கள் முகத்தில் வைத்திருக்கவும். பேக் முழுமையாக உலர அனுமதிக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

எலுமிச்சை எக்ஸ்ஃபோலியண்ட் ஃபேஸ் பேக்
சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்க எலுமிச்சை எக்ஸ்ஃபோலியண்ட் ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்: 1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1/2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி கிளிசரின்.
வழிமுறைகள்: ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய பொருட்களை நன்கு கலக்கவும். வட்ட இயக்கத்தில் தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.