Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
இந்த 4 பொருட்களில் ஏதாவது ஒன்றை வைத்து தினமும் காலையில் முகம் கழுவினால்...உங்க முகம் பிரகாசிக்குமாம்!
பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் குளிர்ந்த பாலில் உங்கள் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
இன்றைய பிஸியான காலகட்டத்தில் நாம் சரும பராமரிப்பு குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. ஆனால், தினமும் காலையில் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது, உங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்று மட்டும் விரும்புவீர்கள். விழித்தெழுவதற்கும் உங்கள் நாளைத் தொடங்குவதற்கும் இடையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அது நீங்கள் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும், சமைக்க வேண்டியது முதல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் தயார்படுத்துவது வரை, உங்கள் நாள் தொடங்கும் முன் சில கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். காலையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும்போது, சரும பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்குவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆதலால், உங்கள் பிஸியான பட்டியலில் தோல் பராமரிப்பு கடைசியாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன், உறங்கும் தோலை எழுப்பவும், சருமத்தில் உள்ள எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கவும், உங்கள் சருமப் பராமரிப்பு முறையின் அடுத்த படிகளுக்கு உங்கள் சருமத்தை தயார்படுத்தவும் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 4 பொருட்களை கொண்டு முகத்தை கழுவுவது, உங்கள் சருமத்தை பிரகாசிக்க வைக்குமாம்.

இறந்த செல்களை அகற்றுகிறது
நீங்கள் காலையில் உங்கள் முகத்தை சுத்தம் செய்வது, உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், நச்சுகள் மற்றும் எண்ணெய்கள் ஆகியவற்றை நீக்குகிறது. மேலும் இது உங்கள் சருமத்தை தயார் செய்து, தயாரிப்பு உறிஞ்சுதலை துரிதப்படுத்துகிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்திற்கு சரியாக சிகிச்சையளிப்பது தினமும் காலை நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம்.

எலுமிச்சை
காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தில் எலுமிச்சையைப் பயன்படுத்துவது இயற்கையான பொலிவைத் தரும். ஏனெனில் இது பழுப்பு நிறத்தை நீக்கி, கறைகளை குறைக்க உதவுகிறது. இதேபோல், உங்கள் சருமத்தை மென்மையாக்குவதற்கும், உங்கள் சருமத்தை பொலிவாக்குவதற்கும் காலையில் தக்காளி சாறுடன் உங்கள் முகத்தை மசாஜ் செய்யலாம். நீங்கள் எழுந்ததும் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் முகத்தை சோப்பு இல்லாமல் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். சருமத்தை உலர்த்தி, பின் இந்த பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இந்த பொருட்களை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள், ஏனெனில் அவை ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும்.

பால்
பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் குளிர்ந்த பாலில் உங்கள் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். மேலும், பால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும். அழுக்கு மற்றும் பாக்டீரியாவை அகற்றவும் மற்றும் ஊட்டமளிக்கும் ஃபேஸ் மாஸ்க்காக நாள் முடிவில் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம். காலையில் பாலை பயன்படுத்தும்போது, முகம் பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தேன்
உங்கள் இடது கையின் உள்ளங்கையில், இரண்டு தேக்கரண்டி தேனை வைக்கவும். அந்த தேனை உங்கள் முகம் முழுவதும் தடவி, பதினைந்து நிமிடங்களுக்கு உங்கள் தோலில் வட்ட இயக்கத்தில் தடவ வேண்டும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் முகத்தில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு புதிய எலுமிச்சை துண்டை தேய்க்கவும். பின்னர் அதை உலர அனுமதிக்கவும். தேன் மற்றும் எலுமிச்சை முகத்தில் உள்ள முடிகளை அகற்றவும், உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல், கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களை நீக்கி, கருவளையங்களைக் குறைக்கிறது. இதனால், ஸ்ட்ராபெர்ரி உங்கள் சருமத்திற்குச் சிறந்தது. ஸ்ட்ராபெர்ரிகளின் சாறு உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சக்தி வாய்ந்த நன்மைகளை தருகிறது. காலப்போக்கில், அது கருவளையங்களை குறைத்து, உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications