Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: உங்களின் முகம், கை, கால்களை விட, உங்கள் கழுத்துப் பகுதி மட்டும் ரொம்ப கருப்பா இருக்குதா? பொதுவாக சருமமானது அதிகமாக வெயிலில் வெளிப்படும் போது கருமையடையும். இதை சன்-டான் என்று அழைப்பர். இது நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் நிகழ்கிறது. மேலும் இந்த மெலனின், சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நமது சரும செல்களைப் பாதுகாக்கிறது.

எப்போது கழுத்துப் பகுதி சூரிய ஒளியில் நேரடியாக படுகிறதோ, அப்போது சூரிய கதிர்களால் கருமையடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சில சமயங்களில் உடலில் தைராய்டு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், கழுத்துப் பகுதி கருமையடைவதற்கான வாய்ப்புள்ளது. இப்படி கருப்பாக இருக்கும் கழுத்தை வெள்ளையாக்க வேண்டுமா? அப்படியானால் ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுகள். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு கழுத்து பகுதிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, கழுத்துப் பகுதியில் உள்ள கருமை குறைவதைக் காணலாம்.
1. கற்றாழை ஜெல்லை
கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் கற்றாழையில் அலோயின் என்னும் பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு கற்றாழை ஜெல்லை தினமும் காலை, மாலை என இரண்டு வேளையிலும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
2. எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது கழுத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் சிறிது நீரை சேர்த்து கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்யும் போது, கழுத்தில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.
3. தயிர்
தயிர் புரோபயோடிக் நிறைந்த மிகவும் அற்புதமான உணவுப் பொருள் மட்டுமின்றி, மிகச்சிறந்த சரும பராமரிப்பு பொருளும் கூட. இந்த தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை கழுத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவும் போது, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
4. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது மட்டுமின்றி, இதில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அதிகப்படியான கருமையைப் போக்க உதவுகிறது. அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வர, கழுத்தில் உள்ள கருமை மாயமாய் மறைவதைக் காணலாம்.
5. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்த அற்புதமான கோடைக்கால உணவுப் பொருள். இந்த வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுவது மட்டுமின்றி, சரும கருமையைப் போக்க உதவும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

