Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
Pattani Masala Sadam Recipe in Tamil: வெரைட்டி சாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம்தான். இந்த சாதங்களை செய்வது எவ்வளவு எளிதானதோ அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட. ஆனால் எவ்வளவு நாள்தான் இந்த இதுபோன்ற கலவை சாதத்தையே செய்து கொண்டிருப்பது. புதிதாக ஏதாவது வெரைட்டி சாதம் செய்ய விரும்பினால் ஒருமுறை இந்த பட்டாணி மசாலா சாதத்தை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பட்டாணி மசாலா சாதம் செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானதாகும், மேலும் இந்த சாதம் பட்டாணியை வைத்து செய்யப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பட்டாணி மசாலா சாதம் பார்ப்பதற்கும் சரி, சாப்பிடுவதற்கும் சரி பிரியாணி சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு சாதத்தை செய்து கொடுக்க விரும்பினால் இந்த சாதத்தை தாராளமாக செய்யலாம்.
உங்களுக்கு சுவையான பட்டாணி மசாலா சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி மசாலா சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முக்கால் கப் பட்டாணி
- 1 கப் சீரக சாம்பா அரிசி
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 1 சிறிய தக்காளி (நறுக்கியது)
- 1 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ ஸ்பூன் சாம்பார் தூள்
- ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 4 பெரிய பூண்டு பல்
- 1 இன்ச் இஞ்சி
- 1 ஸ்பூன் நெய்
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- 1 கிராம்பு
- ½ ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் கல்பாசி
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாகக் கழுவி ஊறவைக்கவும். வெங்காயத்தை நறுக்கி, புதினா, கொத்தமல்லியைத் தயாராக வைக்கவும். அதேபோல தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். பட்டாணியை ஊற வைத்துக் கொள்ளவும். அதேபோல அனைத்து மசாலா பொருட்களையும் தயாராக வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு மற்றும் கல்பாசி ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒருமுறை கிளறிவிடவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். அதன்பின் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கிளறவும். அதன்பின் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் பொடி, ¼ ஸ்பூன் கரம் மசாலா, பிரியாணி மசாலா மற்றும் மஞ்சள் தூளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- ஊறவைத்து நீரை முழுமையாக வடித்து வைத்திருக்கும் பட்டாணியையும் அரிசியையும் இதில் சேர்க்கவும்.
- நன்கு கலக்கிவிட்டு, 2 கப் தண்ணீர் சேர்க்கவும்; உப்பு அளவைச் சரிசெய்து, சிறிது நெய் ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைக்கவும்.
- தீயை மிதமான அளவில் வைத்து, பாத்திரத்தை மூடிய நிலையில் 14 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- அரிசி நன்கு வெந்ததும், சாதத்தை மெதுவாகக் கிளறிவிடவும். பின்னர் பாத்திரத்தை மூடியபடியே 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பட்டாணி மசாலா சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications