For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கைச் சுற்றி வெள்ளையா சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இதுல ஒரு வழிய ட்ரை பண்ணுங்க..

கீழே வெள்ளைப்புள்ளிகளைப் போக்க தேனைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு எது வசதியானதோ அதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

|

சிலரது மூக்கின் மேல் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் அசிங்கமாக இருக்கும். இதையே வெள்ளைப்புள்ளிகள் என்று கூறுவர். இந்த வெள்ளைப்புள்ளிகளானது எப்போது ஒருவரது முகத்தில் ஏற்படும் தெரியுமா? சருமத்தில் இறந்த செல்கள், எண்ணெய் பசை போன்றவை அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்புகள் ஏற்படும் போது, அவை வெள்ளைபுள்ளிகளை உருவாக்கும். இப்படி சருமத்தில் உருவாகும் வெள்ளைப்புள்ளிகள் ஒருவரின் முக அழகையே பாழாக்கும்.

Homemade Honey Face Packs To Get Rid Of Whiteheads In Tamil

உங்கள் முகத்தில் இப்படி அசிங்கமான வெள்ளைப்புள்ளிகள் உள்ளதா? அப்படியானால் அதை நம் வீட்டு சமையலறையில் உள்ள தேனைக் கொண்டு எளிதில் நீக்கலாம். கீழே வெள்ளைப்புள்ளிகளைப் போக்க தேனைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு எது வசதியானதோ அதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எலுமிச்சை, தேன் மற்றும் சர்க்கரை

1. எலுமிச்சை, தேன் மற்றும் சர்க்கரை

எலுமிச்சை, தேன் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்றையும் கொண்டு போடும் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள வெள்ளைப்புள்ளிகளை திறம்பட நீக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கில் தேன் உள்ளதால், அது சருமத்தை வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். இந்த ஃபேஸ் பேக்கை தயாரிப்பதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை நன்கு கலந்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

2. ஓட்ஸ் மற்றும் தேன்

2. ஓட்ஸ் மற்றும் தேன்

உங்கள் வீட்டில் ஓட்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த ஓட்ஸ் உடன் தேன் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக்கை போடுங்கள். இந்த ஃபேஸ் பேக் வெள்ளைப் புள்ளிகளைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகப்பொலிவைத் தரும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் முழுவதும் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.

3. மஞ்சள் மற்றும் தேன்

3. மஞ்சள் மற்றும் தேன்

மஞ்சள், தேன் ஆகிய இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான பொருட்கள். மேலும் இவை இரண்டும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியவை. உங்களுக்கு வெள்ளைப்புள்ளிகள் அதிகம் இருந்தால், ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

4. முட்டை வெள்ளைக்கரு மற்றும் தேன்

4. முட்டை வெள்ளைக்கரு மற்றும் தேன்

முட்டையின் வெள்ளைக்கருவும் ஒரு அற்புதமான அழகு பராமரிப்புப் பொருள். குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கரு வெள்ளைப்புள்ளிகளை எளிதில் வெளியேற்றும். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், வெள்ளைப்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பொலிவும் மேம்படும்.

5. நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன்

5. நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன்

நாட்டுச்சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட அகற்றும் மற்றும் தேன் சருமத்தை ஈரப்பமூட்டும். அந்த இரண்டு பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள வெள்ளைப்புள்ளிகள் நொடிகள் நீங்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேன் ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் இருக்கும் அசிங்கமான வெள்ளைப்புள்ளிகளை நீக்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கி, முகத்திற்கு நல்ல பொலிவை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Honey Face Packs To Get Rid Of Whiteheads In Tamil

Here are some homemade honey face packs to get rid of whiteheads. Read on to know more...
Story first published: Thursday, December 22, 2022, 20:25 [IST]
Desktop Bottom Promotion