Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ சில அற்புத வழிகள்!
நகத்தை சுற்றி இருக்கும் கருப்பு வளையங்கள் தங்கள் மொத்த அழகையும் கெடுக்கிறதே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களே அற்புதங்களை செய்யும்.
சிறந்த பராமரிப்பு உள்ள நகங்கள் சுத்தத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும். ஆனால், எவ்வளவு தான் சுத்தமாக நகங்களை பராமரித்து, மெனிக்யூர் எல்லாம் செய்து அழகாக வைத்துக் கொண்டாலும், நகங்களை சுற்றி அசிங்கமாக கருப்பு நிறம் இருந்தால் அது மொத்த அழகையும் கெடுத்து விடும். அழகு நிலையங்களுக்கு சென்று செலவு செய்து அழகை பராமரிப்பது தான் தற்காலத்தில் பெரும்பாலான பெண்களின் பழக்கமாக உள்ளது.

நகத்தை சுற்றி இருக்கும் கருப்பு வளையங்கள் தங்கள் மொத்த அழகையும் கெடுக்கிறதே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. அதிக பணம் செலவு செய்து பராமரிப்பு செய்ய வேண்டாம். வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களே நகங்களை சுற்றியுள்ள கருப்பு வளையங்களை போக்குவதில் சிறந்த பலன்களை தரக்கூடும். அழகான கைகளை பைசா செலவில்லாமல், இங்கே கூறப்பட்டுள்ளது போல் செய்து தங்களது அழகை மேலும் கூட்டிக் கொள்ளுங்கள்....

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. இவை, பொலிவான சருமத்தை பெற உதவக்கூடியவை. தக்காளியை அரைத்து முகத்தில் தடவினால் எப்படி பொலிவான சருமம் கிடைக்குமோ, அப்படி தான் நகங்களை சுற்றி தக்காளி பேஸ்டை போடும் போதும், பொலிவு கிடைக்கும். உங்கள் சமையல் அறையில் எப்போதும் இருக்கும் தக்காளி ஒன்றே போதும், இந்த பிரச்னையை விரட்டியடிக்க.

எப்படி பயன்படுத்துவது?
தக்காளியை அரைத்து தான் போட வேண்டும் என்றில்லை. தக்காளியை இரு துண்டுகளாக நறுக்கி நகங்களை சுற்றி தேய்த்தால் கூட போதும். சிறந்த பலனை பெற, தக்காளி பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன்பு நகத்தை சுற்றி போட்டு விட்டு, இரவு முழுவதும் விட்டுவிடவும். காலை எழுந்து அதனை கழுவி விடவும். மேலும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது சர்க்கரையை தூவி, நகத்தை சுற்றி தேய்க்கும் போது, இறந்த செல்களை நீங்கி, கருப்பு தோல் உரிந்து, நகத்தை அழகாக்கும்.

கற்றாழை ஜெல்
அழகான கைகளில், அழகாக பராமரித்து வரும் நகங்களை சுற்றியிலும் அதிக கருப்பு நிறத்தில் வளையம் தென்பட்டால் நீங்கள் கற்றாழை ஜெல்லை உபயோகிப்பதே சிறந்தது. ஏனென்றால், கற்றாழையில் சருமத்திற்கு ஊட்டமளிக்கக் கூடிய பண்புகள் அதிகமாக உள்ளது.

எப்படி பயன்படுத்துவது?
முகத்திற்கு கற்றாழை ஜெல்லை தேய்ப்பது போலவே, நகங்களை சுற்றியும் தேய்க்க வேண்டும். கற்றாழையில், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால் சிறந்த ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை அது தரக்கூடும்.

மஞ்சள் தூள்
அழகான சருத்தை பெற உதவுவதில் மிகவும் சிறந்தது என்றால் அது மஞ்சள் தான். நம் முன்னோர் முதல் தற்போதைய தலைமுறையினர் வரை பயன்படுத்தி வரும் மஞ்சள் தூள், பிரகாசமான மற்றும் பொலிவான சருமத்தை பெற்றிட உதவும்.

எப்படி பயன்படுத்துவது?
நகங்களை சுற்றியுள்ள கருமை நிறம் போக வேண்டும் என்றால், மஞ்சள் தூளில் சிறிது நீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல கலந்து, நகங்களை சுற்றி போடவும். இந்த கலவையுடன் ஆலிவ் ஆயிலை கலந்து பயன்படுத்துவது மேலும் சிறந்தது. நகம் கடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் நிச்சயம் இதனை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நகத்தை தொடர்ந்து கடிப்பதால் நகங்கள் சுற்றிலும் இருக்கக் கூடிய எரிச்சல் நீங்கிவிடும்.

தயிர்
நகத்தை சுற்றிலும் உள்ள கருமையான வளையத்தை போக்க, தயிரை கூட பயன்படுத்தலாம். இதிலுள்ள குளிர்ச்சிப் பண்புகள் சருமத்திற்கு ஊட்டமளிக்கக் கூடியது. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. மேலும், சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கி, பொலிவை தரக்கூடும்.

எப்படி பயன்படுத்துவது?
தயிரை கை விரல்களில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், தயிருடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications