தீபாவளியன்று பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? அப்ப தினமும் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...

நம் வீட்டு சமையலறையில் முகத்தின் அழகை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஏராளமான பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தின் அழகை எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதில் மேம்படுத்தலாம்.

தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையில், என்ன தான் வீட்டில் இருந்தே அலுவலக வேலை செய்தாலும் பியூட்டி பார்லருக்கு சென்று சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் நேரம் கிடைப்பதில்லை. ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்வதில் ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், அலுவலக வேலை நடக்கும் போதே வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கலாம்.

Get Glowing Skin This Diwali With These Homemade Face packs

நம் வீட்டு சமையலறையில் முகத்தின் அழகை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஏராளமான பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தின் அழகை எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதில் மேம்படுத்தலாம். நீங்கள் தீபாவளி அன்று அழகாக ஜொலிக்க நினைத்தால், இன்று முதல் முகத்திற்கு பின் கொடுக்கப்பட்டு ஃபேஸ் பேக்குகளில் ஒன்றை தினமும் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி-எலுமிச்சை பேக்

தக்காளி-எலுமிச்சை பேக்

தக்காளி மற்றும் எலுமிச்சையில் உள்ள சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகள், சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். மேலும் இந்த பேக் முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும். அதற்கு பாதி தக்காளியை அரைத்து, அத்துடன் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, சருமத்தை உலர்த்திய பின் மறக்காமல் மாய்ஸ்சுரைசரை தவறாமல் தடவ வேண்டும்.

வாழைப்பழ தயிர் பேக்

வாழைப்பழ தயிர் பேக்

வாழைப்பழத்தில் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாக்க உதவும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு கையால் மசித்து, அத்துடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

முட்டை-பாதாம் பேக்

முட்டை-பாதாம் பேக்

முட்டை சருமத்துளைகளை இறுக்க உதவி புரிந்து , சருமத்திற்கு ஒரு பொலிவைக் கொடுக்க உதவும். பாதாம் எண்ணெய் சரும சுருக்கங்களைக் குறைத்து இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை-ரோஸ்வாட்டர் பேக்

கற்றாழை-ரோஸ்வாட்டர் பேக்

கற்றாழை ஜெல் ஒரு பொதுவான அழகு பராமரிப்பு பொருள். ரோஸ்வாட்டர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் குறைக்க உதவும். ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

மஞ்சள் ஃபேஸ் பேக்

மஞ்சள் ஃபேஸ் பேக்

அனைவரது வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் தூளுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு, மஞ்சள், பால் ஃபேஸ் பேக்

கடலை மாவு, மஞ்சள், பால் ஃபேஸ் பேக்

நீங்கள் பண்டிகை காலங்களில் ஜொலிக்க நினைத்தால், இந்த ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

வாழைப்பழ பால் பேக்

வாழைப்பழ பால் பேக்

வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் பால் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், சருமம் நன்கு நீரேற்றத்துடன் இருக்கும்.

ரோஸ்வாட்டர்

ரோஸ்வாட்டர்

ரோஸ்வாட்டரில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சருமத்துளைகளின் ஆழத்தை சுத்தம் செய்யும். உங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை துடைத்து எடுங்கள்.

எலுமிச்சை சர்க்கரை ஸ்க்ரப்

எலுமிச்சை சர்க்கரை ஸ்க்ரப்

சில நேரங்களில் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முகப்பரு தழும்புகளைக் குறைக்க உதவுகிறது. சிட்ரிக் அமிலம் சரும கருமையைக் குறைக்கிறது. அதற்கு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றியில் ஒன்றரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மென்மையாக தேய்த்து, பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, October 23, 2021, 14:50 [IST]
Desktop Bottom Promotion