For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமத்துல சுருக்கம் வராம எப்போதும் பொலிவா அழகாக இருக்க நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்!

வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். வைட்டமின் ஏ குறிப்பாக தோல் செல் பழுது மற்றும் கொலாஜன் உற்பத்தியை உறுதிப்படுத்துகிறது.

|

எந்த பிரச்சனையும் இல்லாத அழகான பொலிவான சருமத்தை பெற நாம் அனைவரும் விரும்புவோம். அழகு என்று வரும்போது சரும பராமரிப்பு மிக அவசியம். குறைபாடற்ற சருமத்தை பெற நாம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். மேக் அப் மற்றும் ஃபேஸ் மாஸ்க் கருவளையங்கள், கறைகள் மற்றும் பொலிவற்ற சருமத்தை மறைக்க முடியும். ஆனால், சரும சுருக்கங்களை மறைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உங்கள் சருமத்தில் சுருக்கம் ஏற்பட தொடங்கும். இது பல்வேறு காரணங்களால் நிகழ்கிறது. சன்ஸ்கிரீன் பயன்படுத்தாது, மாசுபாடு, குறைவான நீர் உட்கொள்ளல் மற்றும் மோசமான உணவு ஆகியவை உங்க சரும சுருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

Foods You Should Eat More Often For Wrinkle Free Skin in tamil

சுருக்கங்கள் வருவதைத் தாமதப்படுத்த, இளமையான சருமத்தை எப்போதும் பெற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட்டுவிட்டு மற்ற ஆரோக்கியமான சர்க்கரை மாற்றுகளுடன் மாற்றுவது. அதைத்தொடர்ந்து, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலாஜன்

கொலாஜன்

ஆரோக்கியமான சருமத்திற்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பொருள் இது. கொலாஜன் என்பது உங்கள் சருமத்தை உறுதியாகவும், சுருக்கங்கள் இல்லாமல் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் புரதமாகும். உடலில் கொலாஜன் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இருபதுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதியில் குறையத் தொடங்குகிறது. கொலாஜன் சப்ளிமெண்ட் அல்லது எலும்பு குழம்பு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எலும்பு குழம்பில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.

இலை கீரைகள்

இலை கீரைகள்

வைட்டமின் சி நிறைந்த கீரை, காலே, கோஸ் மற்றும் சீமை பரட்டைக்கீரை போன்ற இலை கீரைகள் சூரியனால் ஏற்படும் சேதம் மற்றும் மாசுபாட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இலை கீரைகளில் காணப்படும் வைட்டமின் ஈ சரும செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கீரைகளில் ஃபோலேட் உள்ளது, டிஎன்ஏவை சரி பார்க்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து. இது புதிய செல்களை உற்பத்தி செய்து பராமரிக்க உதவுகிறது. பச்சை இலை காய்கறிகளில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது சருமத்தை புதுப்பிக்கும் மற்றும் சரிசெய்யும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை என்பது உலகெங்கிலும் உள்ள உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சுவையான, ஆரோக்கியமான மசாலா. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நன்மை பயக்கும் தாவர கலவைகள் நிறைந்த, இலவங்கப்பட்டை ஒரு தோல் பராமரிப்பு மூலப்பொருளாக பிரபலமடைந்து வருகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும், சருமத்தை ஒளிரச் செய்யவும் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். மேலும், உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான செல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பாலிபினால்கள் இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ளது.

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சியில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது தோலின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. இஞ்சி மற்றும் தேன் கலந்த தேநீர் அல்லது பானம் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. தேனுடன் இணைந்து, இந்த கலவையானது இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு திறன்களை கொண்டுள்ளது. இது சருமம் வயதாவதை தாமதப்படுத்துகிறது மற்றும் சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள்

ஆரோக்கியமான கொழுப்புகள்

வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். வைட்டமின் ஏ குறிப்பாக தோல் செல் பழுது மற்றும் கொலாஜன் உற்பத்தியை உறுதிப்படுத்துகிறது. மற்ற கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் சூரியனில் இருந்து புற ஊதா சேதத்தை குறைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கும் உணவு பொருட்கள்; சால்மன், அவகேடோ, அக்ரூட் பருப்புகள், நெய், ஆளி விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்.

பெர்ரி

பெர்ரி

பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் தோலில் உள்ள கொலாஜனை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகின்றன. மேலும், இது சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

காளான்

காளான்

காளான் தாமிரம் நிறைந்தது. இது சருமத்தில் இயற்கையாக இருக்கும் புரதம், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்த உதவுகிறது. இது உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

எடமாம்

எடமாம்

எடாமமில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தயாரிக்க எளிதானது மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது. ஐசோஃப்ளேவோன்களின் இருப்பு சருமத்தை நீரேற்றமாகவும், மென்மையாகவும், உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. எடமேமில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது சருமத்தை மிகவும் வறண்டு போகாமல் தடுக்கிறது மற்றும் போதுமான கொலாஜன் உற்பத்தியைப் பராமரிப்பதன் மூலம் முன்கூட்டிய வயதைக் குறைக்கிறது.

கற்றாழை

கற்றாழை

நீங்கள் காற்றாழை ஜெல்லை உங்கள் முகத்தில் தடவலாம் அல்லது கற்றாழை சாற்றை குடிக்கலாம். இதில் கொலாஜன் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஸ்டெரால்கள் உள்ளன. இது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. இது சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தி, சருமத்திலுள்ள கறைகளை குறைக்க உதவுகிறது. மேலும், உங்கள் சருமம் பொலிவாக ஜொலிக்க கற்றாழை உதவும்.

தண்ணீர்

தண்ணீர்

அனைத்து ஆடம்பரமான தோல் பராமரிப்பு தயாரிப்புகளையும் முறியடிக்கும் ஒரு மேஜிக் சப்ளிமெண்ட் தண்ணீர். உடலில் போதுமான நீரேற்றம் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. ஒட்டுமொத்தமாக வயதாகும் நிலையை தாமதபடுத்த தண்ணீர் உங்களுக்கு உதவும். மேலும், இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Eat More Often For Wrinkle Free Skin in tamil

Here we are talking about the Foods You Should Eat More Often For Wrinkle Free Skin in tamil.
Story first published: Friday, July 29, 2022, 15:54 [IST]
Desktop Bottom Promotion