For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குளிர்காலத்தில் உங்க சருமத்தை பளபளன்னு ஜொலிக்க வைக்க... இந்த பானங்களை குடிச்சா போதுமாம்!

செம்பருத்தி டீ கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், உங்கள் சருமத்தை பளபளக்க வைக்க செம்பருத்தி உதவுகிறது.

|

ஒவ்வொரு பருவ காலநிலைகளுக்கு ஏற்ப சருமத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை சமாளிக்க அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சரும பராமரிப்பு வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். குளிர்காலத்தில் கூறும் பொதுவான புகார்கள் வறண்ட மற்றும் மந்தமான சருமம். மேலும் குளிர்காலத்தில் நீரேற்றம் எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து விடுகிறோம். குறைந்த வெப்பநிலை காரணமாக, தாகம் குறைவதால் தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம், இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு வளர்சிதை மாற்றத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும், மந்தமான உணர்வு, தலைவலி, சோர்வு மற்றும் ஒழுங்கற்ற குடல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

drinks to stay hydrated and glow this winter in tamil

உடலில் தண்ணீர் இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, குளிர்காலத்தில் உங்களை நீரேற்றமாக வைக்கவும் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் உதவும் பானங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்கள்

சூப்கள்

சூடான காய்கறி சூப்கள் குளிர்காலத்தில் சௌகரியமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள். அவை நீரேற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல், குடலுக்கு இனிமையானவை. உணவுக்கு முன் வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப்பை சாப்பிடுங்கள்.

பச்சை சாறுகள்

பச்சை சாறுகள்

பச்சை சாறுகள் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருப்போம். இது நமது தினசரி திரவ தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகளின் நல்ல கலவையாக இருக்கிறது. சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பச்சை சாறுகள் உதவுகிறது. மேலும், பச்சை சாறு உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துகளுடன் கூடிய நீரேற்றத்தை வழங்குகிறது.

எலுமிச்சை பானம்

எலுமிச்சை பானம்

எலுமிச்சைப்பழம் வீட்டில் விரைவாக தயாரிக்கப்படும் பானமாகும். இது உங்கள் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது இது வைட்டமின் சியின் மூலமாகவும், நீரேற்றமாக இருக்கவும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

சூடான தேநீர் மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் நம்மை புத்துணர்ச்சியூட்டுகிறது. பகலில் க்ரீன் டீயை அனுபவிக்கலாம் அல்லது இரவில் கெமோமில் தேநீர் உங்களை அமைதிப்படுத்தலாம். அந்த வகையில், வெவ்வேறு டீகள் வெவ்வேறு நன்மைகளை உங்களுக்கு தருகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் அழகான சருமத்திற்கும் கூடுதலாக, பல்வேறு மூலிகை தேநீர்கள் உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் தலைவலியை நிர்வகிக்க புதினா தேநீர் உதவுகிறது.

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி டீ கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், உங்கள் சருமத்தை பளபளக்க வைக்க செம்பருத்தி உதவுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

'கோல்டன்-பால்' என்றும் அழைக்கப்படும் மஞ்சள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் பிரபலமானது. பால் புரதம் மற்றும் கால்சியத்தின் வளமான மூலமாகும்; நீரேற்றம் பால் கூடுதலாக நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தூங்கும் முன் சூடான பால் குடிப்பது உறக்கத்திற்கு உதவும். மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதால், பலர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்காக ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்ப்பார்கள். மேலும், இது உங்கள் சரும ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

மேலே உள்ள அனைத்து பானங்களும் உங்கள் நீரேற்ற இலக்குகளை அடைய உதவும். ஆனால் தண்ணீருக்கு மாற்றாக இருக்க முடியாது. ஆதலால், தேவையான தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம். ஒரு பயணத்தின் போது, ஒரேடியாக அதிக தண்ணீரை குடிப்பதற்குப் பதிலாக நாள் முழுவதும் சிப்ஸ் தண்ணீர் குடிக்கவும். குளிர்காலத்தில் உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கலாம், ஏனெனில் இது உங்களை மேலும் நீரிழக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

drinks to stay hydrated and glow this winter in tamil

Here we are talking about the drinks to stay hydrated and glow this winter in tamil.
Story first published: Tuesday, November 22, 2022, 19:00 [IST]
Desktop Bottom Promotion