For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையாகணுமா? அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...

முகத்தில் இருக்கும் சிறிய கரும்புள்ளி, சிறு திட்டுகள், கண்ணை சுற்றிய கருவளையம், முக சுருக்கம் போன்றவற்றை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள். இதுபோன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு, தோசை மாவை ஒரு சிறந்த இயற்கை

|

மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் நமக்கு சரும பராமரிப்பும், அழகு பராமரிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமானோர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும பிரச்சனையும், கூந்தல் பிரச்சனையும். விளம்பரங்களை பார்த்து சிறந்த அழகு சாதனப் பொருட்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள் என வாங்கி, அதிலிருக்கும் இரசாயங்களை மறந்து விடுகின்றனர். பின்னர்,அவை ஏற்படுத்திய பக்கவிளைவுகளுக்காக மருத்துவரை நாடுகின்றனர். இது தேவையா?

Dosa Batter Face Pack For Skin Whitening

நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற, வீட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏராளம் இருக்கின்றன. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நம்மை அழகு படுத்திக் கொள்ள முடியும் என்றால், அதை ஏன் முயற்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான அழகை கூட்டும் ஒரு விஷயத்தை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறோம். அது தான் தோசை மாவு ஃபேஸ் மாஸ்க்.

முகத்தில் இருக்கும் சிறிய கரும்புள்ளி, சிறு திட்டுகள், கண்ணை சுற்றிய கருவளையம், முக சுருக்கம் போன்றவற்றை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள். இதுபோன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு, தோசை மாவை ஒரு சிறந்த இயற்கை வழி என்று கூறலாம். அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் தோசை மாவிற்கு உள்ளது. வாருங்கள், அதன பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோசை மாவிற்கு தேவையான பொருட்கள்:

தோசை மாவிற்கு தேவையான பொருட்கள்:

* அரிசி

* கழுவிய உளுத்தம் பருப்பு

* வெந்தயம்

* உப்பு

* தேன்

* பால்

தோசை மாவு ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

தோசை மாவு ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

* முதலில், உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தனி தனி பாத்திரத்தில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைக்கும் போது உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தை சிறிது சேர்த்து ஊற வைக்கவும்.

* அரை மணி நேரம் கழித்து, உளுத்தம் பருப்பை நீர் வடித்துவிட்டு, ஒரு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நீர் அளவாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* இப்போது அதே மாதிரி அரிசியை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அரிசியில், பருப்பை விட குறைந்த நீரை பயன்படுத்தவும். அரிசியை சற்று கரடுமுரடானதாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த இரண்டு மாவுகளையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலக்கிய மாவு மிகவும் அடர்த்தியாக இருக்க கூடாது என்பதனை நினைவில் கொள்க.

* இப்போது, அத்துடன் உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஒரு மூடி போட்டு அப்படியே வைக்கவும். தோசை மாவிற்கான செய்முறையும் இதே தான்.

* ஒரு வேளை உங்களிடம் மீதமுள்ள தோசை மாவு ஏதேனும் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளது படி செய்யவும்.

* தோசை மாவுடன், தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலக்கிய மாவு, மென்மையான, சற்று தடிமனான பேஸ்ட் பதத்தில் இருக்க வேண்டும்.

* தயார் செய்துள்ள மாவை, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவவும்.

* 20 முதல் 30 நிமிடங்கள் உலர்த்திய பிறகு, கைகளால் முகத்தை மெதுவாக தேய்த்து கழுவிடவும்.

வெளிர் தோல்

வெளிர் தோல்

சரும நிறக் குறைபாடு என்பது பலரை சிரமத்திற்கு ஆளாக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும். அது போன்ற பிரச்சனைகளுக்கு, தோசை மாவை பயன்படுத்தலாம். தோசை மாவை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து அதை கழிவிடவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், சிறந்த முடிவுகளுக்கு தினமும் முகத்தில் மசாஜ் செய்யலாம். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

சுருக்கம்

சுருக்கம்

சரும சுருக்கத்திற்கு சிறந்த தீர்வுகளில் ஒன்று தோசை மாவு. (பெரும்பாலும் இது வயதாவதற்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது). இதனால் தான் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது பலரை எரிச்சலடைய செய்கிறது. உங்கள் முகத்தை தோவை மாவு கொண்டு மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிடவும். அவ்வாறு செய்வது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை அளித்திடும். எனவே, எந்த சந்தேகமும் இல்லாமல், முக சுருக்கங்களுக்கு தோசை மாவை பயன்படுத்த தொடங்கலாம்.

முகப்பரு

முகப்பரு

முகப்பரு போன்ற பிரச்சனைகளை விரட்ட தோசை மாவை பயன்படுத்தலாம். கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தாமல், வெறும் தோசை மாவை மட்டும் பயன்படுத்தி முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சருமத்தை சுத்தப்படுத்த

சருமத்தை சுத்தப்படுத்த

உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது. உங்கள் முகத்தில் தோசை மாவை தேய்க்கும் போது, அது சருமத்தின் ஆழத்திற்குச் சென்று, சரும துளைகளை சுத்தப்படுத்துகிறது. தோசை மாவு சிறந்த சரும சுத்திகரிப்புகளில் ஒன்றாகும்.

இறந்த செல்கள்

இறந்த செல்கள்

தோசை மாவு என்பது இறந்த சரும செல்களை நீக்க உதவுவதில் சிறந்தது. இதை முகத்தில் தடவி மசாஜ் செய்து வர, முகத்தில் இருக்கும் புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோல் இறுக்குதல்

தோல் இறுக்குதல்

தளர்வான சருமத்தை சரிசெய்ய தோசை மாவை பயன்படுத்தலாம். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிடவும். மேலும், இது தோல் எரிச்சலையும் நீக்கிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dosa Batter Face Pack For Skin Whitening

Homemade dosa batter face scrub: Dosa batter helps you get glowing skin by cleansing dark circles, pimples and dark spots from your face.
Desktop Bottom Promotion