For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.

கரித்தூள் இயற்கையானது என்பதால் நீங்கள் எந்த வித பயமும் இல்லாமல் தாராளமாக இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யலாம். இவை உங்களுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கரித்தூள் உங்கள் முகத்திற்கு

|

கரித்தூள், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் கரித்தூளை கொண்டு தான் பல் துலக்கினார்கள் என்று நாம் கேள்விப் பட்டு இருப்போம் இது உண்மையிலேயே பற்களை வெள்ளையாக்கும் தன்மை கொண்டு இருப்பதால் தான் அவர்கள் இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை அதே போலத்தான் இந்த கரித்தூள்கள் உங்கள் முகத்தில் பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி முகத்தினை சுத்தப்படுத்துகிறது.

Diy charcoal Mask Recipes

கரித்தூள் இயற்கையானது என்பதால் நீங்கள் எந்த வித பயமும் இல்லாமல் தாராளமாக இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யலாம். இவை உங்களுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கரித்தூள் உங்கள் முகத்திற்கு அழகைச் சேர்ப்பதில் மிக முக்கிய பங்கு வைக்கிறது. இந்த கரித்தூளை பாதாம் ஆயில், பேக்கிங் சோடா மற்றும் சில பொருட்களுடன் சேர்த்து பேஷ் மாஸ்க்காக போட்டுக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம்

கரித்தூள் கொண்டு பேஷ் மாஸ்க் போடும் போது உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய்களை உறிஞ்சு முகத்தினை சுத்தப்படுத்தும். அத்துடன் புரோபயாடிக் மாத்திரை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கும் போது முகப்பருக்களை நீக்க உதவும். ஒரு தேக்கரண்டியளவு கிளே, ஒரு தேக்கரண்டியளவு கரித்தூள், ஒரு புரோபயாடிக் மாத்திரை, இரண்டு தேக்கரண்டியளவு ஆப்பிள் சீடர் வினிகர், ஒரு துளி 1 தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். கரித்தூள், கிளே மற்றும் புரோபயாடிக் மாத்திரை தூள் ஆகியவற்றைக் கிண்ணத்தில் கொட்டி கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கி பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கழுவிய பின்பு கண்டிப்பாக மாய்ஸ்சரைசரை தடவுங்கள்.

MOST READ: பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா? எலுமிச்சை போதும்.

பிளாக்ஹெட்ஸ் மாஸ்க்

பிளாக்ஹெட்ஸ் மாஸ்க்

உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நிறப் புள்ளிகளை அகற்றுவதற்கு இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம். இதனை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம். இரண்டு தேக்கரண்டியளவு பேஷ் வாஷ், ஒரு தேக்கரண்டியளவு பாதாம், ஜோஜோபா, அல்லது வைட்டமின் ஈ எண்ணெய்,இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா, இரண்டு தேக்கரண்டியளவு கரித்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் பேஷ் வாஷ் மற்றும் எண்ணெயை ஊற்றி, அரிசி மாவு, பேக்கிங் சோடா மற்றும் கரித்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கி கலவையை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். மேலும் கண்களுக்கு அருகில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இந்த கலவையை நீங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

சரும உறுதி

சரும உறுதி

முட்டையின் வெள்ளைக்கரு உங்களின் சருமத்தை உறுதியானதாக மாற்றுவதற்கு உதவும். ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு கரித்தூள், 1/4 தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு எடுத்து முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கலக்கி கரித்தூள் மற்றும் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். கலவை பேஸ்ட் போல் வரவில்லையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து முகத்தில் வறண்ட இடங்களில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

தேன் மாஸ்க்

தேன் மாஸ்க்

தேன் உங்கள் முகத்தில் இருக்கும் சிவப்பு நிறப் புள்ளிகளை நீக்க உதவும். அத்துடன் கரித்தூள் சேர்க்கும் போது சரும எரிச்சலைப் போக்கும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டியளவு தேன், ஒரு தேக்கரண்டியளவு க்ரீன் டீ பவுடர், ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டியளவு கரித்தூள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

முகப்பரு மாஸ்க்

முகப்பரு மாஸ்க்

கரித்தூள் மற்றும் கற்றாழை கலந்த பேஷ் மாஸ்க் இது உங்களுக்கு இருக்கும் சரும எரிச்சல் மற்றும் முகப்பரு போன்றவற்றிலிருந்து விடுதலை தரும். கரித்தூள் தேவையான அளவு, கற்றாழை ஜெல் சிறிதளவு மற்றும் ஒரு துளி தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இரண்டு நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

MOST READ: உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க

தயிர் மாஸ்க்

தயிர் மாஸ்க்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகின்றன. இதனால் சருமத்தில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் சேராமல் பாதுகாக்கிறது. இரண்டு தேக்கரண்டியளவு தயிர், இரண்டு தேக்கரண்டியளவு கரித்தூள், இரண்டு தேக்கரண்டியளவு தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பின்பு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தேவையான மாஸ்க்கை பயன்படுத்தி ஒளிரும் மற்றும் பளபளக்கும் சருமத்தைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diy charcoal Mask Recipes, How to Apply, and Skin Benefits

Charcoal has an amazing ability to bind with impurities so bacteria, dead cells, oil and toxins are swept away when charcoal enters the game. It naturally works together with popular face mask ingredients like clay, honey and yogurt to make them even more effective.
Story first published: Thursday, September 19, 2019, 16:08 [IST]
Desktop Bottom Promotion