For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது?... இத செஞ்சாலே போதும்...

|

திருமணம் என்பது எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷலான தருணம். அதிலும் மணப் பெண்ணுக்கு மிகவும் முக்கியமான நாள். அதற்காக ஒவ்வொரு பெண்ணும் பல மாதங்களாக தங்களை அழகுபடுத்திக் கொள்ள முயலுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் திருமணத்தை பற்றிய மன அழுத்தம், தூக்கமின்மை, தொடர்ந்து மேக்கப் போடுதல், தடபுடலான விருந்து உணவுகள் இவையெல்லாம் அவர்களின் சருமத்தை பாதிக்கிறது.

இதனால் அவர்கள் முகமே பொலிவற்று போய் விடும். மேலும் நீங்கள் மணப்பெண்ணாக இருப்பதால் எல்லாரின் கவனமும் உங்கள் மீது தான் இருக்கும். அந்த சமயத்தில் உங்கள் முகழகு இவ்வாறு இருந்தால் என்னாவது சொல்லுங்க?.

எனவே தான் இந்த மாதிரியான சமயங்களில் உங்கள் சருமத்திற்கு ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. பரபரப்பான திருமண விழாவில் ஓடி ஓடி களைந்து போகும் போது கூட உங்கள் முகம் அழகாக ஜொலிக்எ வேண்டுமா? அதற்காகத்தான் இந்த கட்டுரையே. இதோ உங்க வீட்டு மணப் பெண்ணுக்கான சரும பராமரிப்பு முறைகளும் டிப்ஸ்களும். வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும ஈரப்பதம்

சரும ஈரப்பதம்

இது எளிதான டிப்ஸ். உங்கள் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். காலையில் எழுந்ததும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை நீக்கி சருமத்தை ஈரப்பதமூட்டி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும். தண்ணீர் மட்டுமல்லாமல் பழ ஜூஸ்கள், தேங்காய் தண்ணீர், லெமன் ஜூஸ் கூட பகிர்ந்து வரலாம். சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதே பாதி சரும பிரச்சனைகளை களைந்து விட முடியும்.

MOST READ: பெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா?

எளிதான மேக்கப் போடுங்கள்

எளிதான மேக்கப் போடுங்கள்

திருமண நிகழ்ச்சிகளின் போது எளிதான மேக்கப் போடுங்கள். ஏனெனில் திருமணத்திற்கு பிறகு கூட நீங்கள் சின்ன சின்ன விஷேசங்களுக்கு மேக்கப் போட வேண்டிய சூழல் உண்டாகும். இப்படி அடிக்கடி உங்கள் முகத்திற்கு பவுடர், க்ரீம் என அப்பிக் கொண்டே இருப்பது சரி கிடையாது. இது உங்கள் சரும துவாரங்களை அடைத்து பருக்கள், கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகளை உண்டாக்கி விடும். எனவே ஸ்மார்ட்டான மேக்கப் போட கற்றுக் கொள்ளுங்கள். எனவே அடர்ந்த பவுண்டேஷனுக்கு பதிலாக கொஞ்சம் மாய்ஸ்சரைசர், ஆப்பிள் போன்ற கண்களுக்கு ப்ளஷ், கண் இமைகளுக்கு ஐ லைனர், லைட்டான லிப்ஸ்டிக் இது போதும் உங்கள் அழகை எடுப்பாக காட்ட முடியும்.

இரவில் நல்ல தூக்கம்

இரவில் நல்ல தூக்கம்

திருமணம் என்று வந்து விட்டாலே போதும் உங்களால் சரியாக தூங்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான சருமத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம். அப்பொழுது தான் உங்கள் சருமமும், உடலும் புத்துணர்வு பெறும். எனவே குறைந்தது 6-8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

உங்கள் சரும பராமரிப்புக்கு என்று நேரம் ஒதுக்கி தொடர்ந்து செய்து வாருங்கள். இதனால் நீங்கள் மென்மையான கொழு கொழுவென சருமத்தை பெற முடியும். தினமும் சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல், சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல் போன்ற மூன்று வேலைகளை தவறாமல் செய்து வாருங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் பயன்படுத்தி தேய்த்து குளியுங்கள்.

சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

சூரியக் கதிர் களிலிருந்து உங்கள் சருமத்தை காக்க சன் ஸ்கிரீன் பயன்படுகிறது. இதை நீங்கள் அப்ளே செய்யாவிட்டால் உங்கள் சருமம் சீக்கிரம் வயதாகி விடும். SPF 30 போன்ற சன் ஸ்கிரீன் லோஷன்களை நீங்கள் பயன்படுத்தி வரலாம். சன் ஸ்கிரீன் க்ரீம் தவிர வெளியில் வெயிலிலே செல்லும் போது முழுவதும் மூடிய ஆடைகளை அணிந்து செல்லுங்கள். முடிந்தால் முகத்திற்கு ஸ்கார்ப் போட்டுக் கொள்ளுங்கள்.

MOST READ: காந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...

சரியாக தேர்ந்தெடுங்கள்

சரியாக தேர்ந்தெடுங்கள்

நீங்கள் மணப்பெண் என்பதால் உங்களுக்கு நிறைய புதுசு புதுசான அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்துவார்கள். மார்கெட்டிலும் நிறைய பொருட்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். நிறைய பொருட்களில் கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்திருக்கும். சில பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது. சரும துளைகளை அடைக்காத பொருட்கள், பாரபன் இல்லாத பொருட்கள், நறுமணம் இல்லாத பொருட்களை பார்த்து தேர்ந்தெடுங்கள். இதை நீங்கள் பயப்படாமல் நீண்ட காலங்கள் கூட பயன்படுத்தலாம். உங்கள் சருமம் இளமையாக அப்படியே இருக்கும்.

படுக்க போகும் போது மேக்கப் வேண்டாம்.

படுக்க போகும் போது மேக்கப் வேண்டாம்.

இந்த டிப்ஸ் மணப் பெண்ணுக்கானது மட்டும் கிடையாது. எல்லாரும் மனதில் வைக்க வேண்டிய ஒன்று. படுக்க போகும் போது அப்படியே மேக்கப் உடன் செல்வது நல்லது கிடையாது. நிறைய பேருக்கு இந்த மேக்கப்பை எல்லாம் களைத்து அதுக்கு அப்புறம் படுக்கைக்கு செல்வது என்பது சோம்பேறித்தனமாக இருக்கும். ஆனால் மேக்கப் ரிமூவல் போன்றவற்றை பயன்படுத்தி ஈஸியாக இதை செய்யலாம். இதற்கு சிறந்த இயற்கையான பொருள் என்றால் தேங்காய் எண்ணெய் தான். அது உங்களுக்கு ஒரு சிறந்த மேக்கப் ரிமூவலாக பயன்படும்.

சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்

சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்

சருமத்தை எப்பொழுதும் போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம். காலையில் மற்றும் இரவில் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இயற்கையாகவே எண்ணெய் பசை சருமம் கண்டவர்களுக்கு மாய்ஸ்சரைசர் தேவையில்லை. அப்படி இல்லையென்றால் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு என்று தனி மாய்ஸ்சரைசர் இருக்கிறது.இதன் மூலம் பொலிவான அழகான சருமத்தை நீங்கள் பெற முடியும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும். புரோட்டீன் மற்றும் விட்டமின் சி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் சாலட் போன்ற உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் மற்றும் அதிக சர்க்கரை வாய்ந்த பொருட்கள் வேண்டாம். ஆரோக்கியமான உணவை மணப்பெண் எடுத்துக் கொண்டால் அது உங்கள் சருமத்தில் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்.

MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்யுங்கள்

தினசரி 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி மேள்கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது உடம்பில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறி விடும். மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்திற்கு பொலிவூட்டும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ட்ரை பண்ணி நீங்களும் மண மேடையில் தேவதை போல் ஜொலிக்கலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Amazing Post Wedding Skin Care Tips

Weddings are special and especially for the bride. You spend months and months preparing for the D-day and want to look your absolute best. But the stress of the wedding, the lack of sleep, the constant make-up for the various functions and a heavy diet can take a toll on your skin.