முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? அப்ப இத செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? சரும பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? எவ்வளவு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லையா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பிரச்சனைக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரைக்கிறது. அவற்றை எண்ணெய் பசை சருமத்தினர் தினந்தோறும் பின்பற்றினால், நிச்சயம் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள். கோடைக்காலம் வர இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. எனவே இப்போது இருந்தே கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

முக்கியமாக எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பிரச்சனை முகப்பரு தான். அதோடு, முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும். இங்கு இப்பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஆயுர்வேதம் கூறும் சில எளிய தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் உள்ள மருத்துவ பண்புகள், எண்ணெய் பசை சருமத்தினருக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை பசையைத் தடுக்கலாம். அதிலும் பாலுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

சந்தன பவுடர் மற்றும் மஞ்சள் தூள்

சந்தன பவுடர் மற்றும் மஞ்சள் தூள்

எண்ணெய் பசை சருமத்தினருக்கு சந்தனம் மிகச்சிறந்த பொருள். சந்தனம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிக்கும். அத்தகைய சந்தன பவுடரை மஞ்சளுடன் சேர்த்து மாஸ்க் போடுவது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. அதற்கு சந்தன பவுடர் மஞ்சள் தூளை சரிசம அளவில் எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. மேலும் இது அனைவரது வீட்டிலும் எளிதில் வளர்ப்பதற்கு ஏற்ற செடியும் கூட. இந்த செடியின் இலையை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவி வர, முகத்தில் உள்ள அதிகப்படியாக எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும பிரச்சனைகளும் அகலும்.

தேன்

தேன்

தேனில் உள்ள மருத்துவ பண்புகள் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருள். அதிலும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஸ்கால்பில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால், தலையில் இருந்து முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர்

நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். பின் ஒரு ஐஸ் கட்டியை துணியில் கட்டி, முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்ய, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

முட்டை மற்றும் எலுமிச்சை

முட்டை மற்றும் எலுமிச்சை

முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் இந்த வேப்பிலை நீரால் முகத்தை தினமும் கழுவி வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீயல் பண்புகள் பருக்கள் அதிகம் வருவது தடுக்கப்படுவதோடு, முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையும் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதைக் கொண்டு தினமும் முகத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படுவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள முல்தானி மெட்டி உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பௌலில் 4 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

டீ பைகள்

டீ பைகள்

டீ பைகளைக் கொண்டு டீ தயாரித்த பின், அந்த டீ பைகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து நீரால் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள டானிக் அமிலம், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்துளைகளை சுத்தம் செய்து, முகத்தை பிரகாசமாக காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple And Effective Ayurvedic Solutions For Oily Skin

Here are some easy Ayurvedic remedies for oily skin, with ingredients you probably already have lying around at home. Read on to know more...
Story first published: Thursday, February 1, 2018, 17:30 [IST]
Subscribe Newsletter