For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெற்றியில் இப்படி பருக்கள் வருதா?... என்ன செஞ்சா சரியாகும்...

சில நேரங்களில் நம் முக அழகை கெடுக்கும் விதத்திலேயே இந்த பருக்கள் வந்து தொல்லை பண்ணும். நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டு மறைத்தாலும் நெற்றியில் தோன்றும் பருக்கள் அசிங்கமாக தென்படக் கூடும்.

|

சில நேரங்களில் நம் முக அழகை கெடுக்கும் விதத்திலேயே இந்த பருக்கள் வந்து தொல்லை பண்ணும். நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டு மறைத்தாலும் நெற்றியில் தோன்றும் பருக்கள் அசிங்கமாக தென்படக் கூடும். இந்த மாதிரியான பருக்கள் தோன்ற நமது உணவு முறை, சரும பராமரிப்பு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை போன்றவை காரணமாக அமைகின்றன. சில நேரங்களில் இது ரெம்ப வலி ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். சரி வாங்க இந்த நெற்றியில் தோன்றும் பருக்களை எப்படி வீட்டு முறையைக் கொண்டே மாயமாக்கலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலையை சுத்தமாக வையுங்கள்

தலையை சுத்தமாக வையுங்கள்

நெற்றியில் பருக்கள் வருவதற்கு பொதுவாக பொடுகும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.எனவே முதலில் உங்கள் பொடுகுக்கு ஒரு முடிவு கட்டுங்கள். இதற்கு நீங்கள் மைல்டு ஆன்டி பொடுகு ஷாம்பை பயன்படுத்தலாம்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம்

எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு அடிக்கடி நெற்றியில் பருக்கள் உருவாகும். எனவே அடைப்பட்ட சரும துளைகளை யும், எண்ணெய் பசையையும் போக்க முதலில் முயலுங்கள்.

வீட்டு முறைகள்

வீட்டு முறைகள்

முல்தானி மெட்டி பொடி, ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் சரும எண்ணெய் தன்மை சமநிலைக்கு வரவும்.

இல்லையென்றால் தினமும் குளிர்ந்த நீரில் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவுங்கள். எண்ணெய் பசை இல்லாத சருமத்தை பெறலாம்.

எலும்பிச்சை ஜூஸ்

எலும்பிச்சை ஜூஸ்

படுப்பதற்கு முன் கொஞ்சம் லெமன் ஜூஸல் காட்டன் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி கொள்ளவும். இரவு நேரத்தில் இது நன்றாக வேலை செய்யும். சூரிய ஒளியில் லெமன் ஜூஸ் தடவி செல்ல வேண்டாம். எனவே காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே பருக்களை எதிர்த்து போராட இது வல்லது. தக்காளி ஜூஸை எடுத்து முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரும் உங்களுக்கு லெமன் அல்லது தக்காளி ஜூஸ் மாதிரி செயல்படும். ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து படுப்பதற்கு முன் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு

சில சமயங்களில் பருக்கள் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மூலமாகக் கூட ஏற்படலாம். இது அந்த மருந்தால் ஏற்பட்ட அழற்சியால் கூட இருக்கலாம். எனவே சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies To Get Rid Of Forehead Bumps

These bumps could be pimples and zits. Simple home remedies can help you get rid of the bumps on forehead.
Desktop Bottom Promotion