For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா...?

|

முகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண், பெண் இருவரின் இயல்பான ஆசை. முகத்தின் அழகை கூட்ட பல்வேறு வழிகள் இருக்கின்றன. சிலர் அழகியல் கடைகளுக்கு செல்வார்கள், சிலர் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே அழகு பெறுவார்கள், சிலர் வேதி முறையை பயன்படுத்துவர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு வித முறை இருக்கத்தான் செய்யும்.

Natural Beauty Tips Using Pumpkin

அந்த வகையில் பழங்கள் அல்லது காய்கறிகளை கொண்டு செய்யும் அழகியல் முறைகளும் அதிக பலனை தர கூடியதாம். குறிப்பாக பூசணிக்காயில் கூட அழகு ரகசியம் உள்ளது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில் பல்வேறு நலன்களை கொண்ட பூசணியை வைத்து எவ்வாறு அழகு பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா...?

ஒரு சில காய்கறிகளில் மட்டுமே முக அழகை பராமரிக்கும் அழகியல் தன்மை இருக்கும். அந்த வகையில் பூசணியும் அதி அற்புதமானது. என்னப்பா...உன் முகம் இப்படி கலை இழந்து இருக்கேனு...? கேக்குறவங்கள வாய் அடைத்து வைக்க செய்கிறது இந்த பூசணி முக பூச்சுகள். குறிப்பாக பூசணியில் உள்ள எண்ணற்ற சத்துக்களே இதற்கு முதன்மையான காரணமாகும்.

நலம் தரும் பூசணி..!

நலம் தரும் பூசணி..!

நாம் அதிகம் ஒதுக்கி வைத்துள்ள காய்கறிகளில் இந்த பூசணியும் ஒன்று. இதனின் மகத்துவத்தை அறியாமலே நாம் இதை தவிர்த்து வருகின்றோம். இவற்றில் உள்ள ஏராளமான ஊட்டசத்துக்கள் இதோ...

- புரதம்

- கலோரிகள்

- நார்சத்து

- கார்போஹைட்ரெட்

- வைட்டமின் சி

- வைட்டமின் ஈ

- காப்பர்

- பொட்டாசியம்

- ரிபோபிளவின்

வெண்மையான சருமத்திற்கு

வெண்மையான சருமத்திற்கு

முகம் மிகவும் வெண்மையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக கருதப்படுகிறது. வெயிலின் அதிக தாக்கத்தால் முகத்தின் வெண்மை குறைந்து கருமையாக இருக்கிறதா..? உங்களுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள ஃபேஸ் மாஸ்க் இதுவே.

தேவையானவை :-

அரைத்த பூசணி 2 டீஸ்பூன்

தேன் 1 டீஸ்பூன்

பால் 1 டீஸ்பூன்

இலவங்க பொடி சிறிதளவு

செய்முறை :-

செய்முறை :-

இந்த அழகியல் ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்ய, முதலில் பூசணிக்காயை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதனுடன் தேன், இலவங்க பொடி, பால் சேர்த்து கொண்டு நன்கு கலக்கி கொள்ளவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் முழுமையாக பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் வெண்மை பெறும்.

எண்ணெய் பசையை போக்க...

எண்ணெய் பசையை போக்க...

பெரும்பலான ஆண்கள் மற்றும் பெண்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரக்க செய்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் பருவாகவும் வெளிப்பட கூடும். எண்ணெய் பசை முகத்தை குணப்படுத்த இந்த குறிப்பு போதும்.

தேவையானவை :-

சர்க்கரை 1 டீஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் 1 டீஸ்பூன்

பூசணிக்காய்

Most Read:ஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த 10 உணவுகள் தான் முக்கிய காரணம்..!

செய்முறை :-

செய்முறை :-

முகத்தை எண்ணெய் பசைகள் இல்லாமல் வைத்து கொள்ள பூசணி சிறந்த தீர்வாகும். இதற்கு முதலில் அரைத்த பூசணியை எடுத்து கொண்டு அவற்றுடன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து சர்க்கரை சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவினால், எண்ணெய் பசையின்றி முகம் அழகாகும்.

உடனடி பொலிவிற்கு...

உடனடி பொலிவிற்கு...

திடீரென்று உங்களின் நண்பரின் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால், முக பொலிவின் தயக்கம் இல்லாமல் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் மகிழ்வை உறுதி செய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் போதுமே...!

தேவையானவை :-

வெள்ளை கரு 1

பால் 1 டீஸ்பூன்

அரைத்த பூசணி 2 டீஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பூசணியை நன்கு அரைத்து கொண்டு அவற்றுடன் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து கொண்டு கலக்கவும். பிறகு பாலையும் சேர்த்து கலக்கி, முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் உடனடி அழகு பெறும். அத்துடன் இளமையான முக பொலிவையும் இந்த ஃபேஸ் மாஸ்க் தருமாம்.

இளமையான சருமத்திற்கு

இளமையான சருமத்திற்கு

உங்கள் முகம் நீண்ட காலம் இளமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த எளிமையான ஃபேஸ் மாஸ்க் உதவும். பூசணியில் உள்ள சத்துக்கள் முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி இளமையாக வைத்து கொள்ளும்.

தேவையானவை

தேன் 1 டீஸ்பூன்

யோகர்ட் 2 டீஸ்பூன்

அரைத்த காஃபி பொடி 2 டீஸ்பூன்

அரைத்த பூசணி 2 1 டேபிள்ஸ்பூன்

Most Read:முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் முன்னோர்களின் எளிய முறைகள்..!

செய்முறை :-

செய்முறை :-

பூசணியை நன்கு அரைத்து கொண்டு அவற்றுடன் யோகர்ட் மற்றும் காஃபி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனையும் அவற்றுடன் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து இந்த ஃபேஸ் மாஸ்க்கை நீரினால் அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் இளமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக அழகிற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Beauty Tips Using Pumpkin

Even when Halloween season wraps up, pumpkins still pop up everywhere during fall. But you may not have used this ubiquitous squash in your beauty regimen yet.
Desktop Bottom Promotion