For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி இருக்கிற கடுமையான கருந்திட்டையும் ஈஸியா எப்படி சரி பண்ணலாம்?...

கருமையால் சருமத்தின் உண்மையான நிறம் மறைந்து அங்கங்கே கருமை நிற திட்டுக்கள் தோன்றும். இத்துடன் இணைந்து அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படுகின்றன. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இந்த கோடைக்கால கருமையால் பெர

|

சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது ஒரு சருமத்திற்கு சிறந்த விளைவுகளை உண்டாக்குவதில்லை. சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்கள், சருமத்தை எரித்து, நிற மாற்றத்தை உண்டாக்குகிறது. சூரிய ஒளியில் நீங்கள் நிற்கும் நேரத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்கிறது.

beauty

இதனால் ஏற்படும் சேதம் Sun tan என்னும் கோடைக்காலக் கருமை என்று அறியப்படுகிறது. மேலும் இதனால் சரும அரிப்பு, தடிப்பு மற்றும் சரும நிறமாற்றம் போன்ற பிரச்சனைகளும் உண்டாகிறது. வெளியில் கட்டாயம் வெயிலில் நின்று தான் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் உள்ளவர்கள், இந்த கோடைக்கால கருமையை முடிந்த அளவிற்கு வேகமாக போக்கிக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருந்திட்டுக்கள்

கருந்திட்டுக்கள்

கருமையால் சருமத்தின் உண்மையான நிறம் மறைந்து அங்கங்கே கருமை நிற திட்டுக்கள் தோன்றும். இத்துடன் இணைந்து அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படுகின்றன. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இந்த கோடைக்கால கருமையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சன்ஸ்க்ரீன் இல்லாமல் வெளியில் செல்வது கூட சருமத்தை பாதிக்கிறது. உங்கள் சரும அழகை பராமரிக்க நீங்கள் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்தும்போது, இத்தகைய கோடைக்கால கருமையைப் போக்க ஒரு எளிய வழிமுறை உள்ளது. எல்லோர் வீடுகளிலும் இருக்கும் வினிகர் இதற்கான சிறந்த தீர்வைத் தருகிறது. சமயலறையில் பல்வேறு பயன்பாட்டிற்கு உதவும் இந்த வினிகர், சருமத்தில் மென்மையாக வினை புரிந்து, இந்த கருமையைப் போக்க உதவுகிறது.

வினிகர் எப்படி வேலை செய்கிறது?

வினிகர் எப்படி வேலை செய்கிறது?

வினிகர் முற்றிலும் இயற்கையான ஒரு பொருள் ஆகும். இது ஒரு சிறிய அளவு புளிப்பு சுவை உடையது. இதற்கு காரணம் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சிட்ரிக் அமிலம். இதன் காரணமாகத்தான் பல்வேறு சமயங்களில் எலுமிச்சைக்கு மாற்றாக வினிகரை நாம் பயன்படுத்துகிறோம். எலுமிச்சையைப் போலவே வினிகரும் சருமத்தின் கருமையைப் போக்க உதவுகிறது. குறிப்பாக சூரிய ஒளி பட்டு ஏற்படும் சரும சேதம் மற்றும் கருமையைப் போக்க வினிகரின் உதவி மிகப் பெரியது.

நன்மைகள்

நன்மைகள்

வினிகரின் இயற்கையாக இருக்கும் சிட்ரிக் அமிலத்தின் காரணமாக, கோடைக்கால கருமை மறைகிறது. இது சருமத்திற்கு மென்மையான உணர்வைத் தருவதால் நேரடியாக பஞ்சை இந்த வினிகரில் நனைத்து சருமத்தில் கருமை உள்ள இடங்களில் தடவலாம்.

வினிகரில் கட்டுப்படுத்தும் பண்பு உள்ளதால், சருமத்தின் pH அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. சருமத்தின் சமநிலையை நிர்வகிப்பதால் பல்வேறு சரும பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

ஒவ்வாமை மற்றும் தொற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க வினிகர் பெரிதும் உதவுகிறது. பருக்கள் மற்றும் கட்டிகள் அதிகம் உள்ள சருமத்திற்கு உள்ளிருந்து குணமளிக்க உதவுகிறது.

முதுமை தோற்றம்

முதுமை தோற்றம்

வயது முதிர்வை தடுக்கும் தன்மை வினிகரில் இருப்பதால் பல்வேறு வயது முதிர்வைக் குறைக்கும் பேஸ் பேக்குகளில் இதனை ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள், போன்றவை போக்கி, சருமம் விரைவில் தளர்ந்து போவதை குறைக்க வினிகர் பயன்படுகிறது.

சருமத்தை சீராக்குவது இதன் அடிப்படை குணமாகும். கருந்திட்டுக்கள், வெண்புள்ளிகள், தோல் அழற்சி, தடிப்பு போன்றவற்றை எதிர்த்து வினிகர் போராடுகிறது. இதன் தன்மையால் உங்கள் முகம், எந்த ஒரு தழும்பும், குறியும் இல்லாமல் களங்கமற்று இருக்கிறது.

கிளன்சர்

கிளன்சர்

வினிகர் ஒரு இயற்கையான க்ளென்சர் ஆகும். இதனை பயன்படுத்தி தினமும் உங்கள் முகத்தை கழுவலாம். சருமத்தின் pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவது இதன் சிறப்பு தன்மையாகும். இதனால் உங்கள் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

வினிகர் பயன்படுத்தி கோடைக்கால கருமையைப் போக்க உதவும் பேஸ் மாஸ்க்/ பேஸ் பேக் (வெள்ளை மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்)

சருமத்தை லேசாக்கி, கருமையை போக்கி சருமத்தை தூய்மை படுத்தும் தன்மை வெள்ளை மற்றும் ஆப்பிள் சிடர் வினிகருக்கு உண்டு என்பதால் தான் இந்த மந்திரப் பொருளை பல்வேறு பேஸ் மாஸ்க் மற்றும் பேஸ் பேக்குகளில் பயன்படுத்தி வருகின்றனர். கோடை வெயிலால் கருமையான உங்கள் சருமத்தை எளிய முறையில் குணப்படுத்த சில குறிப்புகள் இங்கே உள்ளன. இவை உடனடி சரும மாற்றத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டவை ஆகும்.

வினிகர் மற்றும் தண்ணீர் :

வினிகர் மற்றும் தண்ணீர் :

சரும எரிச்சலைப் போக்கி இதமான உணர்வை வினிகர் தருகிறது. ஆகவே கோடைக் காலங்களில் வினிகர் பயன்படுத்தி முகத்தை கழுவுவதால் முகத்திற்கு ஒரு இனிமையான அனுபவம் கிடைக்கிறது. இதனால் சருமம் ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு மட்டும் இல்லாமல், அரிப்பையும் போக்குகிறது, இதனால், கோடைகாலக் கருமை இயற்கையாகவே மறைகிறது.

தண்ணீர் மற்றும் வினிகரை சம பங்கு சேர்க்கவும். இதனை ஒரு ஸ்ப்ரே ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். எப்போது வேண்டுமானாலும் இதில் இருக்கும் கலவையை உங்கள் முகத்தில் தெளித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு பஞ்சை இந்த நீரில் நனைத்து உங்கள் முகத்தை துடைக்கலாம். இதனால் சருமத்தில் ஏற்பட்ட கருமை தானாக சில நாட்களில் மறைகிறது.

வெள்ளை வினிகர் மற்றும் அரிசி மாவு ஸ்க்ரப்

வெள்ளை வினிகர் மற்றும் அரிசி மாவு ஸ்க்ரப்

கோடைக்கால கருமையை போக்குவதில் மற்றும் சருமத்தை தூய்மை படுத்துவதில் வெள்ளை வினிகர் சிறந்த பலன் தருகிறது. அரிசி மாவு ஒரு ஸ்க்ரப் போல் செயலாற்றுகிறது, மேலும் சருமத்தின் வெண்மையை மீட்டு தர உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும். அதனுடன் 1 ஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை ஒரு பேஸ்ட் போல் செய்து சரும பாதிப்பு உள்ள இடங்களில் தடவவும். சென்சிடிவ் இடங்களை மட்டும் விட்டு விடவும். மற்ற இடங்களை நன்றாக ஸ்க்ரப் செய்து சுத்தமான நீரால் கழுவவும். இதனால் கோடைக்கால கருமை நீங்கி முகமும் பளபளப்பாக இருக்கும்.

வினிகர் மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க்

வினிகர் மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க்

இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டையும் பயன்படுத்தலாம். தக்காளிக்கு சரும நிறத்தை மேம்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் வினிகருடன் இணைந்து நல்ல பலன் கொடுக்கும். இந்த பேஸ் பேக் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தியவுடன் அடுத்த சில நிமிடங்களில் அதனை நீக்கி விட வேண்டும். வினிகர் மற்றும் தக்காளி சாற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை சரும பாதிப்பு உள்ள இடத்தில் தடவவும். அது காயும் வரை அப்படியே விடவும்.

இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் ஒரு வித கூச்சம் உண்டாகும். இதற்குக் காரணம் தக்காளியின் பயன்பாடு. இந்த பேக் முகத்தில் காய்ந்தவுடன் சருமதிற்குள் மறைந்து விடும். அந்த தருணத்தில் உங்கள் முகத்தைக் கழுவவும். பிறகு ஒரு மாயச்ச்சரைசெர் தடவவும். இதனால் உங்கள் சருமம் கருமை நீங்கி பொலிவாக மாறும்.

வினிகர் மற்றும் உருளைக்கிழங்கு மாஸ்க்

வினிகர் மற்றும் உருளைக்கிழங்கு மாஸ்க்

கோடைக்கால கருமையைப் போக்க உருளைக்கிழங்கு வினிகருடன் இணைந்து சிறந்த தீர்வைக் கொடுக்கிறது. இது முகத்தை மட்டும் பொலிவாக்குவதில்லை, மேலும் கண்களுக்கு கீழ் பகுதியும் கருமை நீங்கி அழகாக மாறுகிறது. ஒரு உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றுடன் வினிகர் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாஸ்க்கிற்கு ஆப்பிள் சிடர் வினிகர் மட்டுமே பயன்படுத்தவும். இந்த கலவையை முகம் மட்டுமின்றி கை, கால் போன்ற இடங்களிலும் தடவலாம்.

சென்சிடிவ் இடங்களை மட்டும் விட்டு விடவும். உருளைக்கிழங்கு துண்டுகள் மீதம் இருந்தால் அதனை உங்கள் கண்களின் மேல் வைக்கலாம். இதனால் உங்கள் கண்களில் உண்டாகும் அழுத்தம் குறைந்து சுகமான உணர்வு பெரும். முகத்தில் உள்ள கலவை முழுவதும் காயும் வரை காத்திருக்கவும். பிறகு குளிர் நீரால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தின் கருமை நீங்கி வெண்மை பெறலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர், தேன், பேக்கிங் சோடா மாஸ்க்

ஆப்பிள் சிடர் வினிகர், தேன், பேக்கிங் சோடா மாஸ்க்

வினிகர், பூஞ்சை தொற்று எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனால் கட்டிகளைப் போக்க உதவுகிறது. கருமையை போக்கும் தன்மையும், வயது முதிர்வை தடுக்கும் தன்மையும் இதில் இயற்கையாக உள்ளதால், இயற்கையாகவே இளமையான சருமம் பெற உதவுகிறது. இத்தகைய குணம் கொண்ட வினிகருடன் தேன் மற்றும் பேக்கிங் சோடா சேர்ப்பதால் இந்த மாஸ்க் இயற்கையான முறையில் சருமத்தின் கருமையைப் போக்க உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும், இதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். நுரை வரும் இந்த கலவையை உங்கள் முகம் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு முகத்தைக் கழுவவும். சில முறை தொடர்ந்து இதனை பின்பற்றுவதால் உங்கள் சருமத்தின் கருமை மறையும்.

ஆப்பிள் சிடர் வினிகர், லவங்கப்பட்டை, மற்றும் தேன் மாஸ்க்

ஆப்பிள் சிடர் வினிகர், லவங்கப்பட்டை, மற்றும் தேன் மாஸ்க்

லவங்க பட்டை பூஞ்சை எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனால் இயற்கையாகவே கட்டிகளை போக்கும் தன்மை கொண்டது. தேன் , கோடைக்கால கருமையைப் போக்கி, சருமத்தை மிருதுவாக்கி புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. லவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து ஒரு அடர்த்தியான கலவை செய்து கொள்ளவும். இந்த மாஸ்க்கை உங்கள் முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவவும். இந்த கலவை முற்றிலும் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

இப்போது சம பங்கு தண்ணீர் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையில் பஞ்சை நனைத்துக் கொள்ளவும். நனைத்த பஞ்சை உங்கள் முகத்தில் வைத்து துடைத்துக் கொள்ளவும். இது ஒரு டோனர் போல் செயல்படுகிறது. மேலும் கோடைக்காலக் கருமையை போக்கவும் இது உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்வதால் கருமை விரைந்து நீங்குகிறது.

வினிகர் மற்றும் முட்டை வெள்ளை கரு பேஸ்பேக்

வினிகர் மற்றும் முட்டை வெள்ளை கரு பேஸ்பேக்

வினிகர் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் முட்டையுடன் சேர்ந்து இது நல்ல பலனைத் தருகிறது. ஆனால் முட்டையுடன் சேர்க்கும்போது ஆப்பிள் சிடர் வினிகர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு முட்டையின் வெள்ளை கருவில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இந்த மாஸ்க் ஓட்டும் தன்மையுடன் இருக்கும். இந்த மாஸ்க் பல்வேறு சரும பிரச்சனைகளான கட்டிகள், அரிப்பு, நிறமாற்றம், தடிப்பு போன்றவற்றிற்கு தீர்வாகிறது. அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவவும். உங்கள்ள நல்ல மாற்றத்தை உணர முடியும். உங்கள் முகத்தில் ஏற்பட்ட கோடைக்கால கருமையில் பெரும்பகுதி மறைந்திருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றுவதால் விரைவில் முழு கருமையும் மறைந்து சருமம் பொலிவாக மாறும்.

களிமண் மற்றும் வினிகர் மாஸ்க்

களிமண் மற்றும் வினிகர் மாஸ்க்

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கோடைக்கால கருமையைப் போக்க மிகவும் கடினமாக இருக்கும். இவர்களுக்கு இந்த மாஸ்க் நல்ல பலனைத் தரும். களிமண் சருமத்திற்கு உலர்ந்த தன்மையை தருகிறது. வினிகரில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் கருமையைப் போக்கி சிறந்த விளைவை உண்டாக்குகிறது. 3 ஸ்பூன் களிமண் எடுத்து சிறிதளவு வினிகர் சேர்த்து கலக்கவும். லாவெண்டர் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய் இரண்டு துளிகள் இந்த கலவையுடன் சேர்க்கலாம். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இது முழுவதும் காய்ந்தவுடன் உடையத் தொடங்கும். அந்த நேரத்தில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இதனை பின்பற்றுவதால் கோடைக்காலக் கருமை முற்றிலும் நீங்கி விடும். சோர்வான சருமம், கட்டிகள் , பருக்கள் போன்றவற்றை நீக்கி சரும அழகை மேம்படுத்த இந்த களிமண்ணை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

வெள்ளை மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய இரண்டிற்கும் அழற்சியை போக்கும் தன்மை உண்டு. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இது ஒரு அற்புதமான கோடைகால கருமையை போக்க உதவும் பொருள், ஒரு சிறந்த டோனர் மற்றும் இந்த சிகிச்சை மூலம் சருமம் சுத்தமாக இருக்கிறது. உங்கள் அழகு சிகிச்சையில் இதனை நிச்சயம் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to remove tan with vinegar? Vinegar for skin lightening

Tanning causes the skin to look dark and patchy while also causing a lot of sensitivity, itchiness and burning sensation.
Desktop Bottom Promotion