For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்துல இப்படி குழிக்குழியா திட்டுதிட்டா இருக்கா? கொஞ்சம் பட்டையை அரைச்சு தடவுங்க...

சருமத்தில் நிறம் சீராக இல்லாமல் சருமத்தில் திட்டுதிட்டாக இருப்பதை லவங்கப்பட்டை மூலமாக எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

|

சரும நிறம் சீராக இல்லாமல் ஒரு சில இடங்கள் கருமையாகவும் ஒரு சில இடங்கள் வெண்மையாகவும் சீரற்று காணப்படுவது நம்மில் சிலருக்கு வேதனையை உண்டாக்கும். ஒரே நிற சருமம் பெற, ப்ரைமர், கன்சீலர், பவுண்டேஷன் போன்ற ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

cinamon face mask

இதனால் நம்மை காண்பவர்களுக்கு முகத்தில் எந்த ஒரு வித்தியாசமும் தோன்றாமல் இருக்கும். ஆனால், இது ஒரு நிரந்தர தீர்வு இல்லை. மேலும், இத்தகைய ஒப்பனைப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சருமத்தில் வேறு சில பாதிப்புகள் உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு

தீர்வு

இதற்கான தீர்வு தான் என்ன? தீர்வு இருக்கிறது. எளிய முறையில் சீரற்ற சருமத்தை மாற்றி அழகான பொலிவான சருமத்தைப் பெற முடியும். ஆமாம், அதுவும் வீட்டில் இருக்கும் பொருள் மூலம். அது தான். லவங்கப் பட்டை. லவங்கப் பட்டை கொண்டு தயாரிக்கும் மாஸ்க் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதனைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தான் இந்தப் பதிவு.

MOST READ: மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...

சருமத்துக்கு ஊட்டச்சத்து

சருமத்துக்கு ஊட்டச்சத்து

பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைத் தன்னிடம் கொண்டுள்ள லவங்கப் பட்டை, சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள நிற வேறுபாடுகளைக் களைந்து சீரான சரும நிறத்தையும் வழங்குகிறது. சரும பாதுகாப்பிற்கான பொருட்களில் லவங்கப் பட்டையை சேர்ப்பதற்கான காரணங்களைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை

கட்டிகள், பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றிற்கு தகுந்த சிகிச்சையைத் தர உதவுகிறது லவங்கப் பட்டை.

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை தந்து உதவுகிறது.

எரிச்சலடைந்த சருமத்திற்கு இதமான உணர்வைத் தருகிறது.

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளைப் போக்க உதவுகிறது.

லவங்கப் பட்டை மூலம் தயாரிக்கும் பேஸ் மாஸ்க் வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு ஒப்பனைப் பொருள். லவங்கப் பட்டை மூலம் பேஸ் மாஸ்க் தயாரிக்கும் சில வழிமுறைகளை கீழே காணலாம்.

லவங்கப் பட்டை பேஸ் மாஸ்க்

லவங்கப் பட்டை பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

லவங்கப் பட்டை தூள் 2ஸ்பூன்

தேன் ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

ஜாதிக்காய் தூள் 1/2 ஸ்பூன்

டீ ட்ரீ அத்தியாவசிய எண்ணெய் 4-5 துளிகள்

MOST READ: இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?

செய்முறை

செய்முறை

ஒரு சிறிய கிண்ணத்தில் தூள் செய்யப்பட்ட லங்காப் பட்டையை சேர்க்கவும். பிறகு, அதில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்பு, எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதில் ஒரு பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து 1/2 ஸ்பூன் அளவு அந்த கலவையில் சேர்க்கவும். சிறிது ஜாதிக்காய் தூள் சேர்த்து இந்த கலவையை மேலும் நன்றாகக் கலக்கவும்.

இறுதியாக, இந்த கலவையில் 4-5 துளிகள் டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களும் ஒன்றாகக் கலந்து ஒரு விழுதாக மாறும் வரை கலக்கினால், பேஸ் மாஸ்க் தயார். இப்போது இந்த மாஸ்க் பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது.

எப்படி தடவ வேண்டும்?

எப்படி தடவ வேண்டும்?

முதல் நிலையாக, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீர், உங்கள் முகத்தில் உள்ள துளைகளை திறந்து சருமத்தில் படிந்துள்ள அழுக்கு, தூசி மற்றும் நச்சுகள் வெளியேற உதவும்,

டிஷ்யு அல்லது டவலால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும்.

தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்கை பிரஷ் மூலம் முகத்தில் தடவவும். உங்கள் கைகளால் கூட இதனை தடவலாம். ஆனால் கைகளால் தடவும்போது சீராக தடவ முடியாது என்ற காரணத்தால் பிரஷ் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மாஸ்கை உங்கள் கழுத்து பகுதியிலும் சேர்த்து தடவவும். இல்லையேல் இதனை பயன்படுத்துவதால் உண்டாகும் சரும நிற மாற்றம், கழுத்து பகுதியில் ஏற்படாமல், மீண்டும் சரும நிறத்தில் வேறுபாடு தோன்றும். உங்கள் கண், காது மற்றும் வாய் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் சீராக தடவவும்.

அடுத்த 15 முதல் 20 நிமிடங்கள் இந்த மாஸ்க் உங்கள் முகத்தில் இருக்கட்டும். பின்பு முகத்தை நீரால் கழுவிக் கொள்ளலாம்.

நீங்கள் விரும்பிய மாற்றத்தைப் பெற இந்த மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...

எப்படி இது வேலை செய்கிறது?

எப்படி இது வேலை செய்கிறது?

லவங்கப் பட்டையில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பு, சருமத்தில் கட்டிகளை உண்டாக்கும் பாக்டீரியாவை ஒழிக்க உதவுகிறது. மேலும், சருமத்தை வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் பண்புகள் இதற்கு உண்டு.

தேன், சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது,

எலுமிச்சை சாறு, சருமத்தின் துளைகளை இறுக்கமாக மாற்ற உதவுகிறது.

ஜாதிக்காய் தூள், சருமத்தில் உள்ள இறந்த அணுக்களைப் போக்க உதவுகிறது. மேலும் வறண்ட சருமத்தைப் போக்கி, ஈரப்பதத்தை வழங்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

டீ ட்ரீ எண்ணெயில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக, சரும எரிச்சல் குறைந்து சருமத்திற்கு இதம் உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to make cinamon face mask for uneven skin tone

getting rid of uneven skin tone. Speaking of home remedies, have you ever tried using cinnamon?
Story first published: Wednesday, December 5, 2018, 17:06 [IST]
Desktop Bottom Promotion