மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த ஒரு பொருள் போதும்!

Written By:
Subscribe to Boldsky

அழகை மேம்படுத்த பல வழிகள் உள்ளன.. அதில் ஒரு சில வழிகள் நல்லதாகவும், ஒரு சில வழிகள் தீமையானதாகவும் இருக்கும். எப்படியோ அழகானால் போதும் என்று சொல்லி கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு அப்ளை செய்வதை பெண்களும் ஆண்களும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு சில க்ரீம்கள் மற்றும் சோப்புகள் ஆரம்பத்தில் உங்களது முகத்திற்கு அழகினை தருவது போன்று தோன்றினாலும் கூட, அவை காலப்போக்கில் சருமத்தில் சில எதிர்வினைகளை உண்டாக்கலாம். எனவே நீங்கள் முகத்திற்கு எந்த ஒரு கெமிக்கல் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னரும் அந்த பொருளை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதோ அல்லது மருத்துவரின் பரிந்துரையின் படி அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதோ மிகவும் அவசியமானதாகும்.

உங்களது முகத்திற்கு பக்கவிளைவுகள் எதையும் உண்டாக்காமல், மிகச்சிறந்த பொலிவினை தரக்கூடியது எப்போது இந்த இயற்கை பொருட்கள் மட்டும் தான்.. இந்த பகுதியில் முகத்திற்கு அழகினை அள்ளித் தரும் இயற்கை பொருட்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்.

கேரட்

கேரட்

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு

வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

எண்ணெய்

எண்ணெய்

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசைப் போலச் செய்யவேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

கேரட் சாறு

கேரட் சாறு

சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.

வசம்பு

வசம்பு

ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு நன்றாக அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.

துளசி இலை

துளசி இலை

துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

புதினா

புதினா

3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் வெதுவெதுப்பான சூட்டில் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழைத்து உள்ளங்கைகளில் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

கிளிசரின்

கிளிசரின்

காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு கிளிசரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவேண்டும். வெந்நீரில் நனைத்த பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாத வெடிப்புகள் குறையும். பாதங்கள் மென்மையாக மாறும்.

பாலேடு

பாலேடு

பாலேட்டையும், கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைகளிலும், கை விரல்களிலும் பூசிவைத்திருந்து காலையில் பச்சைப்பயிற்றம் மாவைப் போட்டு தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை விரல்களும் நல்ல பென்னிறமாக மாறும்.

தாமரை

தாமரை

தாமரை, ரோஜா, தாழம்பூ, நந்தியாவட்டை ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.

பாதாம்

பாதாம்

கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவேண்டும். பாதாம் பருப்பை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்துக் கொள்ளவேண்டும். பின்பு சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை இந்த கலவையுடன் கலந்து முகத்தில் தடவி கால்மணி நேரம் கழித்து முகத்தை சோப்பு போட்டு கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் குறையும்.

தேயிலை

தேயிலை

2 தேக்கரண்டி தேயிலைத்தூள் எடுத்து அதனுடன் சிறிதளவு துளசி இலை சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு நன்கு அரை டம்ளராக வற்றும் வரை நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆறியதும் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.

தயிர்

தயிர்

2 தேக்கரண்டி தயிர் எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம், கழுத்து போன்ற இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How get Smooth and Bright Skin Using These Ingredients

How get Smooth and Bright Skin Using These Ingredients
Story first published: Wednesday, January 17, 2018, 16:40 [IST]
Subscribe Newsletter