For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொய்வான சருமத்தை எப்படி முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி சரி செய்வது?

முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி சருமத்தின் தளர்ச்சியை நீக்கி, இறுக்கமாக்குவது எப்படி என்பதை இங்கே காணலாம்.

By Kripa Saravanan
|

தொங்கும் சதையை சரிபடுத்தி சரும இறுக்கத்தை உண்டாக்க பல்வேறு சரும பாதுகாப்பு சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் நிரந்தர தீர்வை அளிக்க முடிவதில்லை.

இந்த நவீன உலகில் சில வகை ஒப்பனை சிகிச்சை மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவை நம் பர்சை காலி செய்யும் விதத்தில் விலை உயர்வான சிகிச்சையாக உள்ளன. பெண்களும் ஆண்களும் இந்த பிரச்சனையில் அவதி படும்போது, இதற்கான நிரந்தர தீர்வை, இயற்கை முறையில் வழங்கலாம்.

Here’s How You Should Use Egg White To Tighten Your Skin

இந்த பதிவில், பல்வேறு இயற்கை முறைகளில் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி சரும தளர்ச்சிக்கு விடை தருகிறது. வாருங்கள் , பார்த்து அறிந்து கொள்வோம்.

முட்டையின் வெள்ளை கருவில், சக்தி மிகுந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட், புரதம், வைட்டமின் பி6, போன்றவை சரும தளர்ச்சியை குறைக்க உதவுகின்றன. தொங்கும் சதையை போக்க முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி விரைவில் நல்ல தீர்வை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மற்றும் எலுமிச்சை சாறு :

முட்டை மற்றும் எலுமிச்சை சாறு :

முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் ;போடவும். அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து இந்த மாஸ்க் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி வீட்டில் தயார் செய்த மாஸ்கை வாரத்தில் 2 முறை முகத்திற்கு பயன்படுத்தினால், இளமையான மற்றும் இறுக்கமான சருமம் கிடைக்கும்.

முட்டை மற்றும் ஓட்ஸ் :

முட்டை மற்றும் ஓட்ஸ் :

முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் போடவும். அதில் 2 ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் காய விடவும். காய்ந்தவுடன் ஒரு ஈர துணியால் முகத்தை துடைக்கவும். இந்த ஸ்க்ரபை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவதால் சருமம் இறுக்கமாகிறது.

முட்டை மற்றும் பன்னீர் :

முட்டை மற்றும் பன்னீர் :

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை போட்டு, அதில் 1/2 ஸ்பூன் சோள மாவை சேர்க்கவும். 1 ஸ்பூன் பன்னீரை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலக்கவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கி, சருமம் இறுக்கமாகிறது.

முட்டை மற்றும் தேன் :

முட்டை மற்றும் தேன் :

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து, 1 ஸ்பூன் தேனை அதனுடன் கலக்கவும். நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும் . வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் சருமம் இறுக்கமாகி, தொங்கும் சதை

முட்டை மற்றும் அரிசி மாவு :

முட்டை மற்றும் அரிசி மாவு :

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், விரைவில் நல்ல பலனை பெறலாம்.

முட்டை மற்றும் தயிர் :

முட்டை மற்றும் தயிர் :

2 ஸ்பூன் யோகர்டுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் போட்டு கலக்கவும். இந்த கலவையை, முகத்தில் தடவி 10 நிமிடம் காய விடவும். நன்றாக காய்ந்த பிறகு , வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தினால், சரும தளர்ச்சி நீங்கும்.

முட்டை மற்றும் ஆப்பிள் விழுது :

முட்டை மற்றும் ஆப்பிள் விழுது :

ஆப்பிள் விழுது 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவவும். 20 நிமிடம் இந்த கலவையை முகத்தில் வைத்திருந்து காய விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். மாதத்திற்கு 2 முறை இதனை செய்து வருவதால் தொங்கும் சதை நீங்கி முகம் வசீகரமாகும்.

 முட்டை மற்றும் க்ளிசெரின்:

முட்டை மற்றும் க்ளிசெரின்:

1 ஸ்பூன் க்ளிசெரினுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். மாதம் ஒரு முறை இதனை பயன்படுத்தி சரும இறுக்கத்தை அதிக படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here’s How You Should Use Egg White To Tighten Your Skin

Here’s How You Should Use Egg White To Tighten Your Skin
Story first published: Friday, January 5, 2018, 18:11 [IST]
Desktop Bottom Promotion