For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்... ட்ரை பண்ணி தான் பாருங்களேன்...

இங்கு சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கிறதா? பண்டிகை அன்று பொலிவோடு காட்சியளிக்க வேண்டுமா? உங்களுக்கு மேக்கப் போடும் பழக்கம் இல்லையா? அப்படியானால் பொலிவிழந்து காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க நம் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள்.

உங்கள் ஃப்ரிட்ஜை திறந்து பாருங்கள். ஃப்ரிட்ஜில் காய்கறி மட்டும் தான் இருக்கிறதா? என்ன காய்கறி உள்ளது என்று பாருங்கள். அவற்றைக் கொண்டு நைட் தூங்கும் முன் ஃபேஸ் பேக் போடுங்கள். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமைகள் மற்றும் இதர சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக காணப்படும்.

ஒருவர் இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது, சரும செல்களின் ஆரோக்கியம் தான் மேம்படும். அதிலும் காய்கறிகளைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து முகத்திற்கு மாஸ்க் போடும் போது, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமத்தில் உடனடி மாற்றத்தைக் காண்பிக்கும்.

இங்கு சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, பொங்கல் பண்டிகை அன்று பொலிவோடு காட்சியளியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.

கேரட் ஃபேஸ் பேக்

கேரட் ஃபேஸ் பேக்

* 2 டீஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகம் பிரகாசமாக காணப்படும்.

கத்திரிக்காய் ஃபேஸ் பேக்

கத்திரிக்காய் ஃபேஸ் பேக்

* கத்திரிக்காயை துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த பேக்கை மாதத்திற்கு 2 முறை செய்யுங்கள். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதைக் காணலாம்.

பீட்ரூட் ஃபேஸ் பேக்

பீட்ரூட் ஃபேஸ் பேக்

* பீட்ரூட்டை துண்டுகளாக்கி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும்.

பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்

பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்

* 6-7 பச்சை பட்டாணியை அரைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின்பு மைல்டு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரின் உதவியால் கழுவவும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

* 2-3 முட்டைக்கோஸ் இலையை அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகம் முழுவதும் தடவ வேண்டும்.

* 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

செலரி ஃபேஸ் பேக்

செலரி ஃபேஸ் பேக்

* ஒரு துண்டு செலரி கீரையை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்வதால், முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும், அழகாகவும் இருக்கும்.

தக்காளி மாஸ்க்

தக்காளி மாஸ்க்

* தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Vegetable Face Packs For Glowing Skin

If you are tired of using the same cosmetics and are not satisfied with the end result, then switch to vegetable packs. Yes, vegetables such as potato, carrot, eggplant, etc., can help you attain a glowing skin in no time. So, check out these homemade vegetable face packs.
Story first published: Friday, January 12, 2018, 18:30 [IST]
Desktop Bottom Promotion