For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் எப்போதும் இளம் வயதினரை போல இருக்கணுமா..?அப்போ இந்த மூலிகை முகப்பூச்சுகள் போதுமே..!

|

யாராக இருந்தாலும் முக அழகை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க தான் செய்யும். முக அழகை பொலிவாக வைத்து கொள்ள என்னென்னவோ செய்வார்கள். ஆனால், நம் வீட்டில் இருக்க கூடிய பல விதமான ஆயுர்வேத தன்மை நிறைந்த பொருட்களை கொண்டே நாம் வெண்மையான, இளமையான, அழகான முகத்தை பெற்று விடலாம்.

நீங்கள் எப்போதும் இளம் வயதினரை போல இருக்கணுமா..?அப்போ இந்த மூலிகை முகப்பூச்சுகள் போதுமே..!

அதுவும் மூலிகை தன்மை நிறைந்த பொருட்களை பயன்படுத்தி செய்தால் எந்த பக்க விளைவுக்களும் நமக்கு இருக்காதாம். இந்த முகப்பூச்சுகளை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கையே சிறந்தது..!

இயற்கையே சிறந்தது..!

முகத்தை அழகாக வைத்து கொள்ள பல விதமான வேதி பொருட்கள் இன்று சந்தையில் கூவி கூவி விளம்பரங்களில் வழியாக விற்கப்படுகிறது. ஆனால், இவை ஆரம்ப காலத்தில் சிறிதளவு வெண்மையை தந்து, பிறகு பல வித முகம் சார்ந்த பாதிப்புகளை தரவல்லது. இந்த நிலை நீடித்தால் சருமத்தின் பொலிவு முற்றிலும் குறைந்து விடும்.

சந்தனம்

சந்தனம்

முக அழகை மேம்படுத்தும் இயற்கை மருந்தாக இந்த சந்தனம் விளங்குகிறது. இந்த குறிப்பு உங்களை எப்போதுமே இளமையாக வைத்து கொள்ளுமாம்.

தேவையானவை :-

சந்தன பொடி 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

பன்னீர் 1 ஸ்பூன்

முல்தானி மட்டி 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் சந்தன பொடி, முல்தானி மட்டி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் 1 முறை செய்து வந்தால் அருமையான பலன் கிடைக்கும்.

துளசி

துளசி

மூலிகை குணம் நிறைந்தவற்றில் இந்த துளசி முதன்மையான இடத்தில் உள்ளது. இவற்றிலிருந்து செய்யப்படும் முகப்பூச்சு மிக சிறந்ததாக இருக்கும். இதற்கு தேவையானவை...

துளசி இலைகள் 10

வேப்பிலை இலைகள் 5

முல்தானி மட்டி 2 ஸ்பூன்

பன்னீர் சிறு துளிகள்

MOST READ: உடலில் இந்த இடங்களில் வலி இருந்தால், என்னென்ன உறுப்புகள் ஆபத்தில் உள்ளது என அர்த்தம்..!

செய்முறை :-

செய்முறை :-

முதலில் துளசி மற்றும் வேப்பிலையை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் முல்தானி மட்டி மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இந்த முகப்பூச்சு தொங்கிய உங்களின் சருமத்தை சரி செய்து இளமையாக வைத்து கொள்ளுமாம்.

கற்றாழை

கற்றாழை

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பல வித நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த கற்றாழைக்கு உள்ளது. இதனால் தயார் செய்யப்படும் முகப்பூச்சை பயன்படுத்தினால் முகத்தில் எந்த வித பிரச்சினைகளும் வராதாம்.

தேவையானவை :-

கற்றாழை ஜெல் 3 ஸ்பூன்

பன்னீர் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து கொண்டு, நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் பன்னீர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்க கூடிய அழுக்குகள், வறட்சி, சரும துளைகள் சரியாகி விடுமாம்.

மினுமினுப்பான முகத்திற்கு

மினுமினுப்பான முகத்திற்கு

முகம் பளபளவென பொலிவு பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதற்கு தேவையானவை...

கடலை மாவு 2 ஸ்பூன்

சிறிது மஞ்சள் தூள்

பன்னீர் 1 ஸ்பூன்

MOST READ: இந்த தினசரி பழக்க வழக்கங்கள் தான் உங்களின் நுரையீரலை மோசமான நிலைக்கு தள்ளுகிறது..!

செய்முறை :-

செய்முறை :-

கடலை மாவுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி வரவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbal Face Packs For Getting Glowing Skin

These are the herbal face mask for getting glowing skin.
Desktop Bottom Promotion