For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் விளையாட்டு வீரரா..? வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...!

நமது உடலில் மிக முக்கிய உறுப்பு இந்த கால்கள். நாம் எங்கு செல்ல விருப்பப்படுகிறமோ அந்த இடத்திக்கு நம்மை உடனே கொண்டு செல்வது இந்த கால்கள் தான். கால்கள் இன்றி நம்மால் நமக்கு விருப்பமான இடத்திற்கு செல்ல ம

|

நமது உடலில் மிக முக்கிய உறுப்பு இந்த கால்கள். நாம் எங்கு செல்ல விருப்பப்படுகிறமோ அந்த இடத்திக்கு நம்மை உடனே கொண்டு செல்வது இந்த கால்கள் தான். கால்கள் இன்றி நம்மால் நமக்கு விருப்பமான இடத்திற்கு செல்ல முடியாது. ஏன்...' நமது கனவுகளை நினைவாக்குவதும் இந்த கால்கள் தான். இப்படி பல அழகிய தன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் இந்த கால்களை நாம் எவ்வளவு அக்கறையோடு பாதுகாக்க வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் மிக கவனத்துடன் கால்களை பராமரிக்க வேண்டும். பலருக்கு காலணிகளை அணிந்து கொண்டே இருப்பதால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இவர்களுக்கென்றே அற்புதமான வீட்டு வைத்தியம் பல இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலில் புண்கள் ஏற்பட காரணம் :-

காலில் புண்கள் ஏற்பட காரணம் :-

பொதுவாகவே இந்த விளையாட்டு வீரர்களுக்கு கால் மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் முழு பலமே இந்த கால்கள் தான். காலணிகளை அதிக நேரம் போட்டு கொண்டே இருப்பதால் இவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வர கூடும். மேலும் இந்த வித பாதிப்புகள் ஃபங்கஸ் போன்றவற்றால் உருவானதே.உலக மக்கள் தொகையில் 15 % மக்கள் இந்த விதமான பாதிப்புகளை சந்திக்கிறார்கள். இது விளையாட்டு வீரர்களின் பாதம்,நகங்கள்,விரல் இடுக்குகள், போன்றவற்றில் அதிக நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பால் இவர்களால் சரியாக கூட தங்களது விளையாட்டில் கவனம் செலுத்த முடிவதில்லை.

அறிகுறிகள் :-

அறிகுறிகள் :-

  • வீக்கம்
  • அரிப்பு
  • கால் எரிச்சல்
  • துர்நாற்றம் வீசுதல்
  • செதில்கள் உருவாகுதல்
  • தோல் மங்கலாவது
  • 1. குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

    1. குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

    தேவையானவை :-

    • ஆலிவ் எண்ணெய்
    • எலுமிச்சை எண்ணெய்
    • சூடு தண்ணீர்
    • செய்முறை :-

      8 சொட்டு ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை 1 லிட்டர் மிதமான சூடு தண்ணீரில் போடவும்.( எலுமிச்சை எண்ணெய் இல்லாதவர்கள் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம்) பிறகு உங்கள் பாதங்களை 20 நிமிடத்துக்கு அந்த மூலிகை தண்ணீரில் வைக்கவும். இந்த முறையை தினமும் இரவில் செய்து வர உங்கள் பாதங்களில் ஏற்பட்ட வைரல், மற்றும் ஃபங்கல் இன்பெக்ஷன்ஸ் விரைவில் குணமடையும். மேலும் எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ள ஆண்டி செப்டிக் தன்மை கால்களை அனைத்து விதமான பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தடுக்கும்.

      2.வீட்டு வைத்தியம்

      2.வீட்டு வைத்தியம்

      தேவையானவை :-

      • யூக்கலிப்டஸ் எண்ணெய்
      • மிதமான சுடு தண்ணீர்
      • செய்முறை :-

        முதலில் 2 கப் மிதமான சுடு தண்ணீரில் 1 டீஸ்பூன் அளவு யூக்கலிப்டஸ் எண்ணெய் ஊற்றி விடவும். பிறகு இந்த தண்ணீரை ஸ்பிரே அடிக்க கூடிய பாட்டிலில் ஊற்றி, இதனை தினமும் 2 முறை காலில் ஸ்பிரே போல் அடித்து வர விரைவில் பாதங்கள், விரல் இடுக்கில் ஏற்படட வலிகள் குணமடையும். இந்த யூக்கலிப்டஸ் எண்ணெய் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. இஃது கால் வீக்கத்தையும், புண்கள் காலில் ஏற்படாத வகையிலும் தடுக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது.

        3.வீட்டு வைத்தியம்

        3.வீட்டு வைத்தியம்

        தேவையானவை :-

        • பாதாம் எண்ணெய்
        • தேயிலை மர எண்ணெய்
        • செய்முறை :-

          முதலில் 3 சொட்டு தேயிலை மர எண்ணெய்யை பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து பாதிக்கபட்ட பாதத்தில் தினமும் 3 முறை தடவ வேண்டும். தேயிலை மர எண்ணெய்யில் உள்ள 92 வகையான மருத்துவ குணமுடைய ஆற்றல் காலில் ஏற்பட்ட எல்லா விதமான பாதிப்புகளையும் தீர்க்கும் வல்லமை உடையது. மேலும் இது காலில் வியர்வை ஏற்படுத்துவதையும் குறைக்கும். அத்துடன் பாதத்தில் உள்ள கிருமிகளையும் கொல்லும்.

          4.வீட்டு வைத்தியம்

          4.வீட்டு வைத்தியம்

          தேவையானவை :-

          • ஆப்பிள் சிடர் வினிகர்
          • தேங்காய் எண்ணெய்
          • தண்ணீர்
          • செய்முறை :-

            மிதமான சுடு தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றி விடவும்.பின்பு 30 நிமிடம் வரை அதில் பாதங்களை நனைய விடவும். பின்பு காட்டன் துணியை கொண்டு பாதங்களை துடைத்து விட்டு உலர வைக்க வேண்டும். இறுதியாக சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை பாதத்தின் மேல் தடவி வர காலில் ஏற்பட்ட எரிச்சல் , அரிப்பு போன்றவை கூடிய விரைவில் குணமடையும்.

            5.வீட்டு வைத்தியம்

            5.வீட்டு வைத்தியம்

            தேவையானவை :-

            • சூரிய காந்தி எண்ணெய்
            • செய்முறை :-

              3 சொட்டு சூரிய காந்தி எண்ணெய்யை காலில் வலி அல்லது புண்கள் ஏற்பட்ட இடத்தில் தினமும் தடவி வர வேண்டும். இஃது உடனடி நிவாரணியாக செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் டி கால் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

essential oil for athlete's foot-home remedies

Foot is very important for everyone. Here are some essential oil for athlete's foot-home remedies
Desktop Bottom Promotion