For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..? அப்போ இப்படி செய்யுங்க...

|

பலருக்கு உடலில் சுரக்கின்ற ஹார்மோன் காரணமாக எண்ணற்ற வகையான மாற்றங்கள் உடலில் ஏற்பட கூடும். இவற்றில் சில உடலுக்கு நல்ல மாற்றத்தை தரும். ஆனால், சில ஹார்மோன்கள் அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ வேறு வித பக்க விளைவுகளை இது ஏற்படுத்தும்.

ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..? அப்போ இப்படி செய்யுங்க...

அந்த வகையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் முகப்பருக்கள் கூட அதிக அளவில் ஏற்பட கூடுமாம். இது ஆண் பெண் என இருபாலருக்கும் அதிக அளவில் வர கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எவ்வாறு இதனை முழுமையாக இயற்கை முறையில் போக்குவது என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் பசையா..?

எண்ணெய் பசையா..?

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியேற்றுவதாலே இந்த பருக்கள் உருவாகிறது. இதற்கு பல காரணங்களை நாம் கூறலாம். குறிப்பாக ஹார்மோன்களின் மாற்றம், கிரீம்கள், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம் ஆகியவற்றால் பருக்கள் ஏற்படுகிறது.

ஹார்மோனும் பருக்களும்..!

ஹார்மோனும் பருக்களும்..!

ஹார்மோனுக்கும் பருக்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை நாம் அதிகம் யோசித்திருப்போம். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் எண்ணெய் பசை சுரக்க ஹார்மோன்களின் மாற்றம் தான் துணையாக உள்ளது. இவை sebum என்கிற பிசுபிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தை முகத்தில் சுரக்க செய்து பருக்களை உருவாகிறது.

தாமரை வைத்தியம்

தாமரை வைத்தியம்

ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள் வர தொடங்கினால், அதனை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் தாமரை கிரீன் டீ வைத்தியம். இதை எப்படி தயார் செய்வது என்பதை இனி அறிவோம்.

தேவையானவை :-

கிரீன் டீ 2 ஸ்பூன்

தாமரை இதழ் 10

செய்முறை :-

செய்முறை :-

முதலில் தாமரை இதழை அரைத்து கொண்டு, சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இந்த சாற்றுடன் கிரீன் டீ கலந்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் விரைவிலே வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

MOST READ: ஆண்களின் முகத்தை இளமையாக வைத்து கொள்ளும் இந்த புதுவித பழம் பற்றி தெரியுமா..?

இலவங்கமும் பருக்களும்...

இலவங்கமும் பருக்களும்...

முகத்தில் ஹார்மோன்களின் மாற்றத்தால் பருக்கள் வந்தால் அதனை இலவங்கப்பட்டை வைத்தே சரி செய்து விடலாம்.

தேவையானவை :-

இலவங்க பொடி 2 ஸ்பூன்

தேன் 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

இலவங்க பட்டையை முதலில் நன்கு பொடியாக்கி கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்து வந்தால் பருக்களை விரட்டி விடலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

இந்த யூகலிப்டஸ் எண்ணெய் பருக்களுக்கு எதிராக அருமையாய் வேலை செய்யும். அரை கப் நீரில் 4 சொட்டு இந்த எண்ணெய்யை ஊற்றி கலந்து கொள்ளவும். அடுத்து, இதனை காட்டன் பஞ்சால் முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால், எளிதில் குணமாகும்.

அவகேடோ

அவகேடோ

முகத்தில் உள்ள பருக்களை ஒழிக்க அவகேடோ பழம் ஒரு அருமையான தீர்வை தருகிறது. இந்த பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவினால் பருக்கள் மெல்ல மெல்ல மறைய தொடங்கும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் இதனால் எளிதில் நீங்கி விடுமாம்.

MOST READ: குடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்...!

மூலிகை வைத்தியம்

மூலிகை வைத்தியம்

தினமும் முகத்தை 2 முறை கழுவினால் இந்த பருக்கள் பிரச்சினையில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். அல்லது நீரில் இந்த முறையை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :-

திரிபலா பொடி 3 கிராம்

மஞ்சள் பொடி 3 கிராம்

செய்முறை :-

செய்முறை :-

முகத்தில் உள்ள அழுக்குகளையும் பருக்களையும் நீக்குவதில் இந்த மூலிகை வைத்தியதிற்கு பெரும் பங்கு உள்ளது. முதலில் நீரில் திரிபலா பொடி மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொண்டு, முகத்தை இந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை விரைவில் குணப்படுத்த மஞ்சள் நிற பழம் ஒன்று பயன்படும். அது தான் எலுமிச்சை. இதன் சாற்றை நேரடியாக பருக்கள் உள்ள இடத்தில் தடவினால், பருக்கள் விரைவில் நீங்கி விடும். தடவும் போது சிறிது எரிச்சலாகவும் வலியுடனும் இருக்கும்.

இந்த பருக்களை மறைய வைக்கின்ற குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies For Hormonal Acne

Try these natural remedies that deal with oily skin and acne-causing bacteria.
Story first published: Wednesday, October 24, 2018, 17:40 [IST]
Desktop Bottom Promotion