For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோளமாவை இப்படி அப்ளை பண்ணுங்க… எவ்ளோ கருப்பா இருந்தாலும் கலராகிடுவீங்க…

சோள மாவு பயன்படுத்தி செய்யும் பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். சோளமாவு ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள் ஆகும். பல அற்புதமான அழகு தன்மைகள் கொண்ட ஒரு மூலப்பொருளாக சோளமாவு விளங்குகிறது.

By Kripa Saravanan
|

முதன் முதலாக ஒருவரைக் காணும்போது, அவர்களின் தோற்றத்தை வைத்து தான் எடை போடுவோம். குறிப்பாக அவர்களின் முகத்தை மட்டுமே நாம் கவனிப்போம். ஆகவே அத்தகைய முகத்திற்கு சிறப்பான கவனம் தேவை. முகத்தில் உள்ள சருமத்திற்கு சரியான விதத்தில் பாதுகாப்பு கிடைக்க வில்லை என்றால், முகம் சோர்வாக, அழுக்காக வறண்டு காட்சியளிக்கும். இதனைத் தடுக்க பெண்கள் இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி முக அழகை பாதுகாக்க நினைக்கின்றனர். இயற்கையான பொருட்கள் சருமத்திற்கு அழகையும் பொலிவையும் தருகின்றன.

beauty

இன்றைக்கு நாம் சோள மாவு பயன்படுத்தி செய்யும் பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். சோளமாவு ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள் ஆகும். பல அற்புதமான அழகு தன்மைகள் கொண்ட ஒரு மூலப்பொருளாக சோளமாவு விளங்குகிறது. சோள மாவு எண்ணெய் உறிஞ்சும் மற்றும் தூய்மைப்படுத்தும் பண்புகளால் நிரம்பியுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவதால், உங்கள் சருமம் களங்கமற்று மிகவும் அழகாக மாறுகிறது. சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற சோளமாவு உதவுகிறது. இந்த அதிசக்தி வாய்ந்த சோளமாவுடன் மற்ற மூலபோருட்களைச் சேர்த்து பேஸ் பேக் செய்யலாம். அதனைப் பற்றி இப்போது இந்த பதிவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோளமாவு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு :

சோளமாவு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு :

இந்த பேஸ் பேக் ஒரு தனித்தன்மையான அழகைக் கொடுக்கிறது. இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கட்டிகள், தழும்புகள் போன்றவை நீக்கப்படுகின்றன. உங்கள் முகத்தை பொலிவாக்கி புத்துணர்ச்சியைத் தருகின்றது.

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் சோளமாவு

1 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் மஞ்சள்

1 ஸ்பூன் பேகிங் சோடா

சில துளிகள் பன்னீர்

செய்முறை :

ஒரு சிறு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவவும். இந்த கலவையை தடவியபின் முகத்தில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். பிறகு மாயச்ச்சரைசர் தடவவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.

சோளமாவு , பால் மற்றும் அரிசி மாவு

சோளமாவு , பால் மற்றும் அரிசி மாவு

மேடு பள்ளம் உள்ள சீரற்ற சரமும் உள்ளவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். சரும நிறமிழப்பை கட்டுப்படுத்தும். மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தவும். முகத்தில் உள்ள அளவுக்கு அதிகமான எண்ணெய்யை இந்த பேஸ் பேக் போக்குகிறது.

தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் சோளமாவு

2 ஸ்பூன் அரிசி மாவு

1 ஸ்பூன் தேன்

3 ஸ்பூன் பால்

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா மூலபோருட்களையும் ஒன்றாக சேர்க்கவும். ஒரு மிருதுவான பேஸ்டாக ஆகும்வரை இந்தக் கலவையை நன்றாக கலக்கவும். முகத்தில் மேக்கப் இருந்தால் முழுவதும் நீக்கி முகத்தை நன்றாக கழுவவும். பிறகு இந்த பேஸ் பேக்கை தடவவும். பேஸ் பேக் தடவியபின் அது முற்றிலும் காயும் வரை அப்படியே விடவும். பேக் நன்றாக காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். முகத்தை கழுவியவுடன் நிச்சயம் உங்கள்ளல் ஒரு மாற்றத்தை உணர முடியும்.

சோளமாவு, முட்டை வெள்ளை கரு மற்றும் ஆரஞ்சு சாறு

சோளமாவு, முட்டை வெள்ளை கரு மற்றும் ஆரஞ்சு சாறு

இளம் வயதில் வயது முதிர்ந்த தோற்றத்துடன் இருப்பவர்களுக்கு இந்த பேஸ் பேக் பெரிதும் கைகொடுக்கும். முகத்தில் தென்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. இந்த பேக் உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் சோளமாவு

1 முட்டையின் வெள்ளை கரு மட்டும்

2 ஸ்பூன் ஆரஞ்சு சாறு

1 ஸ்பூன் தேன்

செய்முறை :

மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். முகத்தைக் கழுவி துடைத்த பின், இந்த பேக்கை முகத்தில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு தடவவும். இயற்கையாக முகம் காயும் வரை அப்படியே விடவும். முகம் முற்றிலும் காய்ந்தவுடன், குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் உடனடி பொலிவு உங்கள் முகத்திற்கு கிடைக்கிறது.

சோளமாவு , ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்

சோளமாவு , ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்

சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமம் விரைவில் நீர்சத்தை இழந்து , ஜீவன் இல்லாமல் , சோர்ந்து விடுகிறது. இதனால் சருமத்தில் சேதம் உண்டாகிறது. இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதால் சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. சரும சேதங்களைப் போக்குவதுடன், சருமத்திற்கு நீர்சத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் சோளமாவு

1 ஸ்பூன் காபி தூள்

1 ஸ்பூன் ஓட்ஸ்

3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை :

ஒரு சின்ன கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா மூலப் பொருட்களையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவும் முன் முகத்தை சுத்தமாகக் கழுவி கொள்ளவும். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். 5 நிமிடங்கள் இந்த பேக் முகத்தில் அப்படியே இருக்கட்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனால் உங்கள் சருமம் போளிவாவதுடன், சுத்தமாகவும், கலங்கமற்றதாகவும் மாறுகிறது.

சோளமாவு, பப்பாளி மற்றும் வாழைப்பழம்

சோளமாவு, பப்பாளி மற்றும் வாழைப்பழம்

இந்த பேக் உங்களுக்கு உடனடி பொலிவை தருகிறது. இந்த பேக்கின் பயன்பாட்டிற்கு பிறகு உங்கள் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறுகிறது.

தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் சோளமாவு

1 வாழைப்பழம்

சில துண்டு பப்பாளி

சில துளிகள் பன்னீர்(வறண்ட சருமமாக இருந்தால்)

சில துளிகள் எலுமிச்சை சாறு(எண்ணெய் சருமமாக இருந்தால்)

செய்முறை :

சோளமாவுடன், பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான விழுது ஆகும் வரை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனையும் நன்றாக கலந்துக் கொள்ளவும். பின்பு இந்த மொத்தக் கலவையை பிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு முகத்தை நன்றாக சுத்தமாக கழுவவும். பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். பேஸ்ட் தடவியபின், மென்மையாக சுழல் வடிவத்தில் முகத்தில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின், பஞ்சை குளிர் நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். உங்கள் முகத்தில் உடனடியாக ஒரு மிருதுவான உணர்வை பெற முடியும். மேலும் சருமம் பொலிவாகவும் மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 amazing corn flour face packs for flawless skin

Besan, also known as gram flour is a popular ingredient extensively used in making delicious Indian fritter.
Story first published: Monday, May 21, 2018, 14:40 [IST]
Desktop Bottom Promotion