என்ன பண்ணினாலும் கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா?... இத செய்ங்க போயிடும்...

Posted By: Gayathri Kasi
Subscribe to Boldsky

உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ளதா? கரும்புள்ளியை விரைவில் அகற்ற முயற்சிப்பவர்கள் தவறாமல் இந்த பதிவை படியுங்கள். கரும்புள்ளி வர காரணம் மெலனின் ஆக்ஸிடேஷன்.

beauty

கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் கழுத்திலும் காணப்படும். மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். கரும்புள்ளிகளை அகற்ற இதோ 26 வீட்டு வைத்தியம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீராவி

நீராவி

கரும்புள்ளிகளை இயற்கை மற்றும் எளிமையான முறையில் அகற்ற நீராவியே சிறந்தது. நீங்கள் செய்ய வேண்டியது, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் உங்கள் முகத்தை நீராவி பிடிக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் மாஸ்க்கை மெதுவாக முகத்தில் போடலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் உப்பு கொண்டு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். தயாரித்த பேஸ்ட்டை பத்து நிமிடம் முகத்தில் மெதுவாக தடவி, பின்னர் அதை கழுவவும். மாற்றாக, மூன்று தேக்கரண்டி தயிர், சிறிதளவு பிரெஷ் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய், மற்றும் இரண்டு டீஸ்பூன் ஓட்மீல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். பிறகு கலந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் போட்டு சுமார் பத்து நிமிடம் கழித்து கழுவவும். மேலும், நீங்கள் ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் கொண்டு பேஸ்ட் தயாரித்து அதையும் பயன்படுத்தலாம்.

பாதாம் ஃபேஸ் ஸ்க்ரப்

பாதாம் ஃபேஸ் ஸ்க்ரப்

நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து அதை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். அதேபோல் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் ஆகியவை மிகத் தீவிரமாக இருப்பவர்கள், பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர மாசு மருவற்ற சருமத்தைப் பெற முடியும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். பிறகு அதை கொண்டு மெதுவாக பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் முகத்தை காயவைத்து பின்னர் மிதமான தண்ணீரில் முகத்தை அலம்பவேண்டும். கரும்புள்ளி முற்றிலும் போகும் வரை இதை வாரத்திற்கு 2 தடவை செய்யவேண்டும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

சூடான தண்ணீரில் அயோடின் மற்றும் ஒரு டீஸ்பூன் எப்சாம் உப்பு சேர்க்கவும். தண்ணீர் குளிர்ந்த பின்னர் சிறிதளவு பஞ்சை எடுத்து தண்ணீரில் நனைத்து அதை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மெதுவாக அப்ளை பண்ணவும். அது காய்ந்த பிறகு, அதை கவனமாக அகற்றவும்.

சூடான மசாஜ்

சூடான மசாஜ்

கரும்புள்ளியை நீக்க சூடான மசாஜ் ஒரு சிறந்த தீர்வு. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுடைய தண்ணீரை எடுத்து அதில் சுத்தமான துணியை நனைத்து அதை கரும்புள்ளி உள்ள இடங்களில் 15 நிமிடம் வைக்கவும். அவ்வாறு செய்வதனால் விரைவில் உங்கள் கரும்புள்ளி மற்றும் தோல் துளைகளை அகற்றலாம் .

முட்டை

முட்டை

முட்டையும் ஒரு வித எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்று.

ஒரு ஸ்பூன் ஹனி மற்றும் முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி அந்த கலவையை கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

பன்னீர் / ரோஸ் வாட்டர்

பன்னீர் / ரோஸ் வாட்டர்

தினசரி ரோஸ் வாட்டர் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளி கணிசமாக குறையும். தினமும் குளிப்பதற்கு முன்னும் மேக்கப் போடுவதற்கு முன்பாகவும் காட்டனில் சுத்தமான ரோஸ்வாட்டரை நனைத்து முகத்தை அழுத்தித் துடைத்து வந்தால், சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, முகப்பருக்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவு, மஞ்சள், மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை முகத்தில் பயன்படுத்தலாம். கடலை மாவு சருமத்தில் எண்ணெய் பசை இருப்பது போல் சிலர் உணர்வார்கள். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கடலைமாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை வெளியேற்றும். அதனால் சருமம் மேலும் வறட்சியடையும்.

ஆரஞ்சு பீல்

ஆரஞ்சு பீல்

கரும்புள்ளியை அகற்ற மற்றொரு பயனுள்ள வழி ஆரஞ்சு தோல். காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை கொண்டும் கரும்புள்ளியை அகற்றலாம் . அதற்கு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மட்டும் பூசி வர வேண்டும். அதேபோல் தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து முகத்தில் நன்கு ஸ்கிரப் போல தேய்த்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர வேண்டும்.

அரிசி

அரிசி

பாலில் கொஞ்சம் அரிசி சேர்த்து அதை நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும். கலவையை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம். அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பாகவும் பயன்படும். சருமத்துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.

தக்காளி

தக்காளி

ப்ரெஷான தக்காளியை நசுக்கி அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி இரவு முழுக்க தங்க விடவும். மறுநாள் சூடான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும் தக்காளியில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் கரும்புள்ளியை குறைக்க உதவும்.

கார்ன்மீள் பொடெர்

கார்ன்மீள் பொடெர்

நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் பேசியல் கிலேன்செரில் சிறிது கார்ன்மீள் பொடெர் சேர்த்து முகத்தில் போடவும். கலவையை முகத்தில் போடும் முன் நன்கு நீராவி பிடித்து கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும்

ஹனி / தேன்

ஹனி / தேன்

சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கின் போர்ஸை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

மஞ்சள்

மஞ்சள்

புதினா இலை சாறு மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் மிதமான சூடுள்ள தண்ணீரில் முகத்தை கழுவவும். இல்லையெனில் , பால், மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு சந்தனக்கட்டை ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் முகத்தில் போடவும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

ஓர் உருளைக்கிழங்கு எடுத்து அதை நன்றாக துருவி அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும். இதை நீங்கள் தினமும் செய்யலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு பயன்படுத்தக்கூடாது. அந்த தோலில் தான் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன.

எலுமிச்சை

எலுமிச்சை

கரும்புள்ளியை நீக்க எலுமிச்சை சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஃப்ரெஷ் எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து ஸ்க்ரப் தயாரித்து அதைக்கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் உள்ள பருக்களில் சிட்ரிக் அமிலம் எரிச்சரை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் இரண்டு துளிகள் நீரை எலுமிச்சை சாறோடு சேர்த்துக் கொண்டால் எரிச்சல் வராது.

டூத்பேஸ்ட்

டூத்பேஸ்ட்

சிறிதளவு டூத்பேஸ்ட் எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் மெதுவாக தடவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கரும்புள்ளி முற்றிலும் மறைந்துவிடும். சென்சிடிவ் ஸ்கின், ஸ்கின் அழற்சி உள்ளவர்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம். டூத் பேஸ்ட்டில் உள்ள கெமிக்கல்கள் அழற்சியை உண்டாக்கும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

சிறிதளவு கொத்தமல்லி இலையை நன்கு நைசாக அரைத்து எடுத்து, அதில் மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மேல் பூசி சிறுது நேரம் கழித்து முகத்தை கழுவவும். இது கரும்புள்ளிகளைப் போக்குவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய் கரும்புள்ளியை நீக்க பெரிதும் உதவுகிறது. சிறிதளவு பஞ்சை எடுத்து அதை தேயிலை எண்ணெய்யில் நனைத்து அதை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மெதுவாக அப்ளை பண்ணவும். பின் சிறிது நேரம் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை கரும்புள்ளியை நீக்க பெரிதும் உதவுகிறது. கற்றாழை ஜெல் அல்லது ஜூஸை எடுத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி, அரை மணி நேரம் நன்கு ஊறவிட்டு மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளி விரைவில் நீங்கும். அதோடு சருமத்தில் ஏதேனும் பூஞ்சைத்தொற்றுக்கள் இருந்தாலும் குணமடையும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஒரே இரவில் கரும்புள்ளியை அகற்ற விரும்பினால், க்ரீன் டீ நன்கு பயன்படும். ஒரு டீஸ்பூன் காய்ந்த க்ரீன் டீ மற்றும் சிறுது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதை மெதுவாக முகத்தில் தடவவும். சிறிது நேரம் உலரவிட்டு பின் வட்டவடிவில் முகத்தில் மசாஜ் செய்து நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைப்பதை விரைவில் உணர்வீர்கள்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தய இலையை நசுக்கி, அதில் தண்ணீர் சேர்த்து திக் பேஸ்ட் செய்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசி 10 நிமிடம் கழித்து மிதமான வெதுவெதுப்புடன் இருக்கிற தண்ணீரில் முகத்தை கழுவவும். வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதனால் வெயில்காலத்தில் அடிக்கடி இதைப் பயன்படுத்தலாம்.

இலவங்கப்பட்டை தூள்

இலவங்கப்பட்டை தூள்

இலவங்கப்பட்டை தூள் கரும்புள்ளியை அகற்ற சிறந்த மருந்துகளில் மருந்தாக பயன்படும்.

ஒரு டீஸ்பூன் சின்னமென் பௌடர் மற்றும் ப்ரெஷான எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இதை தினமும் மூன்று முறை செய்யவும்.

மாற்றாக, ஒரு டீஸ்பூன் சின்னமென் பௌடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ஹனி சேர்த்து கலந்து அதை தூங்கும் முன் முகத்தில் பூசி மறுநாள் காலையில் அதை கழுவவும். இல்லையெனில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு துளி மஞ்சள் பௌடர் மற்றும் ஒரு டீஸ்பூன் சின்னமென் பௌடர் சேர்த்து

முகத்தில் தடவவும். பிறகு மிதமான சூடுள்ள தண்ணீரில் முகத்தை கழுவவும்.

விட்ச் ஹேசல்

விட்ச் ஹேசல்

சிறிதளவு பஞ்சை எடுத்து விட்ச் ஹேசல் சாறில் நனைத்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு வர கரும்புள்ளி விரைவில் மறையும்

செய்யவேண்டியவை

செய்யவேண்டியவை

தினம் இரண்டு முறை தவறாமல் முகத்தை கழுவவேண்டும்.

தினசரி உப்பு தண்ணீர் கொண்டு கரும்புள்ளி உள்ள இடத்தை கழுவவும்.

மென்மையான ஸ்க்ரப் கொண்டு முகத்தை கழுவவேண்டும்.

உங்கள் வழக்கமான உணவில் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்.

எண்ணெய் இல்லா பேசியல் கிலேன்செர், லோஷன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஜுங்க் உணவை தவிர்க்கவும்.

மதுபானங்கள் மற்றும் புகைபிடிப்பதை தவிர்க்கவும்.

முகத்தில் மேக்கப் உடன் உறங்கக்கூடாது.

எக்காரணத்தை கொண்டம் கரும்புள்ளியை கையால் அழுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது அதை அதிகப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

26 Home Remedies To Get Rid Of Blackheads

Is your face full of blackheads? Are you looking for some quick and effective solutions to get rid of blackheads.
Story first published: Tuesday, April 17, 2018, 14:20 [IST]