For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரு வந்து இப்படி ஆயிடுதா? புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்

புதினாவில் சாலிசிலிக் ஆசிட் உள்ளது. சாலிசிலிக் ஆசிட் முகப்பரு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சாலிசிலிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்தது. அதனால் துளைகளில் அடைத்துக் கொண்டுள்ளவற்றை நீக்குகிற

|

புதினா உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும். உங்கள் பழச் சாறில் சுவை கூட்டவா? நீங்கள் அதையும் செய்யலாம். நான் உங்களுக்கு புதினாவைப் பற்றி உபயோகமான இன்னொன்றைக் கூறினால் நீங்கள் எனக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுவீர்கள்.

beauty benefits of mint in tamil

புதினா பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது அழகு சாதனங்களிலும், தோல் பராமரிப்புப் பொருள்களிலும் முக்கியமான பொருளாக சேர்க்கப்படுகிறது. முகத்தில் இருக்கும் வடுக்களையும், பருக்களையும் போக்குகிறது. புதினா பருக்களைப் போக்குமா? உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கீழே! வாருங்கள் பார்ப்போம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பரு

முகப்பரு

புதினாவில் சாலிசிலிக் ஆசிட் உள்ளது. சாலிசிலிக் ஆசிட் முகப்பரு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சாலிசிலிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்தது. அதனால் துளைகளில் அடைத்துக் கொண்டுள்ளவற்றை நீக்குகிறது. நீங்கள் முகத்தை சுத்தம் செய்யும் பொருட்கள், முகத்தில் போட்டு பின்பு உரித்தெடுக்கும் அனைத்திலும் இது சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவை முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்குகிறது. ரெட்டினாய்டுகளை விட மிகவும் குறைவான எரிச்சலே உங்கள் தோலுக்கு ஏற்படும். புதினாவில் சாலிசிலிக் அமிலம் இருப்பதால் பருக்களை குணப்படுத்தும் மருந்துகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பெருமளவில் சேர்க்கப்படுகிறது.

கிளன்சர்

கிளன்சர்

புதினா ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினோலிக்ஸ் கொண்டுள்ளது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் (ஆக்சிஜெனேற்றத்தடுப்பு) பண்புகள் தோலை சுத்தம் செய்யும் போது ஏற்படும் பாதகங்களைக் குறைக்கிறது. புதினாவில் உள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்பு பண்புகள் சருமத்தை சுத்தப்படுத்தும்போது புண்படுத்துவதைக் குறைக்கிறது. புதினாவில் உள்ள ஆக்சிஜெனேற்றத்தடுப்பு பண்புகள் சருமத்தை நிறமேற்றும் போது மற்றும் பருக்களைப் போக்கும் போது ஏற்படும் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தைக் குறைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

எனவே, புதினா இலைகள் உங்களுக்கு உதவுவது எப்படி என்றால்

சருமத்தில் துளைகளில் அடைத்துக்கொண்டிருக்கும் அழுக்குகளைப் போக்குகிறது. கிருமிகள் பரவுவதைத் தடுத்து பருக்கள் வருவதைக் குறைத்து விரைவில் ஆற்றுகிறது.

வீக்கத்தைக் குறைத்து, விஷமாக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது, வடுக்களைப் போக்குகிறது. எனவே உங்கள் மேனியை மினுமினுப்பாக்குகிறது.

பாக்டீரியா வளர்வதைத் தடுத்து மீண்டும் பருக்கள் வருவதைத் தடுக்கிறது.

உங்கள் சருமத்தை மென்மையாக, மிருதுவாக மாற்றுகிறது.

இங்கே புதினாவைப் பயன்படுத்தி பருக்களையும் வடுக்களையும் போக்கும் வழிமுறைகளைப் பாப்போம்.

எப்படி உபயோகிப்பது?

எப்படி உபயோகிப்பது?

10-15 புதினா இலைகள்

சில துளிகள் தண்ணீர்

1. புதினா இலைகளை அரைத்துக் கொள்ளவும்

2. சிறிது தண்ணீர் கலந்து பசை போல் செய்து கொள்ளவும்

3. பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிக் காய விடவும்

4. வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தினசரி ஒருமுறை செய்யவும்.

புதினாவின் கிருமி நாசினி, மற்றும் ஆக்சிசனேற்ற தடுப்பு பண்புகள், பருக்களை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து அழுத்தத்தைத் தடுக்கிறது. பருக்களால் ஏற்படும் வடுக்களையும் போக்குகிறது.

 பருக்களுக்கு புதினா மற்றும் தேன்

பருக்களுக்கு புதினா மற்றும் தேன்

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி தேன்

1. புதினா இலைகளை கசக்கிக் கொள்ளவும்

2. ஒரு பாத்திரத்தில் புதினா மற்றும் தேன் கலந்து பசை ஆக்கிக் கொள்ளவும்.

3. நன்றாகக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.

4. 30 நிமிடங்கள் நன்றாகக் காய விடவும்.

5. நீரால் கழுவவும்

தினசரி ஒருமுறை செய்யவும்.

வறண்ட தோல் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை நன்றாக வேலை செய்யும். மிகச்சிறந்த கிருமி நாசினிகளான தேனும் புதினாவும் பருக்களைப் போக்கி முகத்திற்கு ஒரு மாயாஜால பொலிவைத் தருகிறது. மேலும் இந்தக் கலவை ஈரப்பதம் கொடுத்து வறண்ட சருமத்தில் ஈரப்பதம் இழக்காமல் இருக்கச் செய்கிறது.

புதினாவும் பன்னீரும் - பருக்களைப் போக்க

புதினாவும் பன்னீரும் - பருக்களைப் போக்க

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி பன்னீர்

1. புதினா இலைகளை பசை போல அரைத்துக் கொள்ளவும்.

2. பண்ணீருடன் நன்கு கலந்து கொள்ளவும்.

3. பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும்.

4. நன்றாகக் காய விடவும்

5. தண்ணீரால் கழுவவும்

பருக்கள் குணமாகும் வரை தினசரி ஒருமுறை செய்யவும்.

பன்னீர் முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பதோடு, சருமத்தின் PH ஐ சமநிலைப்படுத்துகிறது. பன்னீர் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. புதினாவுடன் சேரும் போது சருமத்திற்கு கேடு விளைவிக்கும் பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை தடுத்து சரும நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

புதினாவுடன் ஓட்ஸ்

புதினாவுடன் ஓட்ஸ்

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி ஓட்ஸ்

1 தேக்கரண்டி தேன்

1 தேக்கரண்டி வெள்ளரி சாறு

1. புதினா இலைகளை கசக்கிக்கொண்டு, ஓட்ஸை அரைத்துக் கொள்ளவும்.

2. இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் தேன் மற்றும் வெள்ளரி சாறு அல்லது கூழை சேர்த்துக் கொள்ளவும்.

3. நன்றாகக் கலக்கவும்

4. மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் பன்னீர் சேர்த்துக்கொள்ளவும்.

5. முகத்தில் நன்றாகத் தடவி, பாதிக்கப்பட்ட பகுதியில் கொஞ்சம் அதிகமாக தடவவும்.

6. நன்றாகக் காய விடவும்.

7. தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.

வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.

இந்தக் கலவையால் முகம் கழுவும் போது முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பாக்டீரியாவைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. ஓட்ஸ் சருமத்திலிருக்கும் இறந்த செல்களை அகற்றி முகத்தில் கறுப்புத் திட்டுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. புதினா, தேன் மற்றும் வெள்ளரி சாறு முகத்தை ஈரப்பசையுடன் வைத்திருந்து, சரும அழற்சியை குறைக்கிறது.

புதினா, ஆலிவ், எலுமிச்சை

புதினா, ஆலிவ், எலுமிச்சை

10-15 புதினா இலைகள்

1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு (பன்னீருடன் சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளலாம்)

1. புதினா இலைகளை கசக்கிக்கொண்டு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து கொள்ளவும்.

2. நன்றாகக் கலக்கவும்

3. முகத்தை நீரால் நன்றாகக் கழுவி, இந்தக் கலவையை முகத்தில் தடவவும்.

4. பாதிக்கப்பட்ட இடங்களுடன் முகம் முழுவதும் நன்றாகத் தடவவும்.

5. மென்மையாகத் தடவி அழுத்தம் கொடுத்து இருபது நிமிடங்கள் ஊற விடவும்.

6. வெது வெதுப்பான நீரால் கழுவவும்.

வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.

இந்தக் கலவை உங்கள் தோலின் வகையை பொறுத்து வேலை செய்யும். ஆலிவ் எண்ணெய் உபயோகித்தால் முகத்தில் எண்ணெய் வழியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும், ஒலிக் அமிலமும் உள்ளது மற்றும் இத்துடன் புதினாவும், எலுமிச்சையும் சேரும்போது, முகத்தில் பருக்கள் ஏற்படுத்த காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது.

புதினா, யோகர்ட், வெள்ளரிக் கலவை

புதினா, யோகர்ட், வெள்ளரிக் கலவை

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி யோகர்ட்

1 தேக்கரண்டி துருவிய வெள்ளரி (சாறும் சேர்த்துக் கொள்ளலாம்)

1. புதினா இலைகளை கசக்கிக் கொள்ளவும்.

2. மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும்.

3. காய்ந்தவுடன் கழுவவும்.

வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.

இது ஒரு ஒப்பற்ற, முகத்தை இளமையாக வைத்திருக்கும் கலவை. இது முகத்தில் உள்ள அழற்சியைப் போக்கி, சருமத்தை மென்மையாக்கி பருவைப் போக்கி, கரும் புள்ளிகளை போக்கி, வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பைப் போக்கி குணமாக்குகிறது. யோகர்ட் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சரும மாசுகளைக் குறைக்கிறது. வெள்ளரி, புதினா சருமத்திற்கு குளிர்ச்சி அளித்து பருக்களையும், வடுக்களையும் போக்குகிறது.

குறிப்பு: நல்ல பலன் கிடைக்க இந்தக் கலவையை உபயோகிக்கும் முன் 15 நிமிடங்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து உபயோகிக்கவும்.

புதினா, முல்தானி மட்டி

புதினா, முல்தானி மட்டி

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி முல்தானி மட்டி

1 தேக்கரண்டி யோகர்ட்

1. புதினா இலைகளை கசக்கி பசையாக்கிக் கொள்ளவும்.

2. அதை முல்தானி மட்டி மற்றும் யோகர்டுடன் கலந்து கொள்ளவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் யோகர்ட் கலந்து கொள்ளவும்.

3. இவற்றை புதினா பசையுடன் கலந்து கொள்ளவும்.

4. முகம் மற்றும் கழுத்தில் சமமாகத் தடவவும்.

5. காய விடவும்.

6. வளர்ந்தவுடன் ஈரத் துணியால் ஒத்தடம் கொடுக்கவும்.

7. கலவை மென்மையானவுடன், மென்மையாக வட்ட வடிவத்தில் தேய்த்துக் கழுவவும்.

வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

முல்தானி மட்டி சருமத்தில் இருக்கும் அதிகப்படியான என்ணெயையும், அழுக்கையும் நீக்குகிறது. சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து பருக்களால் ஏற்படும் அழற்சியைப் போக்குகிறது. புதினாவும், யோகார்ட்டும் பாக்டீரிவை அழித்து, சருமத்திற்கு போஷாக்கு அளித்து பொலிவுறச் செய்கிறது. இது முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளையும், வெயிலால் தோலில் ஏற்படும் கருமையையும் போக்குகிறது.

புதினா, துளசி

புதினா, துளசி

10-12 புதினா இலைகள்

10-12 துளசி இலைகள்

1 தேக்கரண்டி கற்றாழை கூழ்

செய்ய வேண்டியது

1. புதினா இலைகளையும், துளசி இலைகளையும் சேர்த்து கசக்கிக் கொள்ளவும்.

2. இத்துடன் கற்றாழைக் கூழ் சேர்த்துக் கலக்கி பசையாக்கிக் கொள்ளவும்.

3. இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 - 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.

4. நீரால் கழுவவும்.

வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

புதினாவும், துளசியும் சருமத்தின் தோழர்கள். இந்த மூலிகைகள் சருமத்தில் உள்ள வெடிப்புகளை நீக்குவதோடு மட்டுமன்றி தோல் தொற்று நோய்களையும் தடுத்து, ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைக்கிறது.

புதினா தூள்

புதினா தூள்

1 கப் புதினா இலைகள் (தூளாக்கியது)

1 1/2 கப் தண்ணீர்

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் புதினா இலைத் தூளைப் போடவும்.

2. சிறு தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்

3. தீயை அணைத்து விட்டு, ஒரு மூடியால் பாத்திரத்தை மூடி வைக்கவும். குளிர வைக்கவும்.

4. ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும்.

5. முகத்தில் தெளித்துக் கொள்ளவும்.

2-3 முறை தினமும் பயன்படுத்தலாம். இதில் உள்ள துவர்ப்புச் சுவை, இதில் அதிகமாக உள்ள சாலிசிலிக் அமிலம் பரு வருவதைத் தடுத்து முகத்தில் வடுக்கள் இல்லாமல் செய்கிறது. உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் திகழச் செய்கிறது. வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது.

புதினா களிமண் கலவை

புதினா களிமண் கலவை

10-15 புதினா இலைகள்

1 தேக்கரண்டி பென்டோனைட் களிமண் (வேறு ஏதாவது இருந்தாலும் சரி)

1 தேக்கரண்டி யோகர்ட்

1. ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

2. மிகவும் கெட்டியாக இருந்தால், மேலும் சிறிதளவு யோகர்ட் சேர்த்துக் கொள்ளவும்.

3. முகத்தில் சீராகத் தடவி, காய விடவும்.

4. காய்ந்தவுடன், தண்ணீரில் உங்கள் கைகளை முக்கி முகத்திற்கு மென்மையாக அழுத்தம் கொடுத்தால், இக்கலவை மென்மையாகி விடும்.

5. மென்மையாக தடவி இந்தக் கலவை போகும் வரை கழுவவும்.

எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்?

வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த எளிமையான கலவை உங்கள் முகத்திற்கு குளிர்ச்சியும், இளமையும் தருகிறது. களிமண் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. யோகர்ட் மற்றும் புதினா மாசுக்களை நீக்கி, முகத்தில் பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து முகத்தில் வெடிப்பு ஏற்படாமல் முகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப்பசை நீங்காமல் பாதுகாக்கிறது. எனவே நீங்கள் உங்களுக்கு பாதிப்பை, சங்கடத்தை ஏற்படுத்தும் பருக்களும், வடுக்களும் நீங்க புதினாவின் இத்தகைய முறைகளைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். இன்றே இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்ற ஒன்றை கண்டுபிடியுங்கள். உங்களுக்கு பருவைப் போக்க வேறு ஏதேனும் முறைகள் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவரை பொலிவுடன் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Easy Ways To Use Mint Leaves To Get Rid Of Acne Scars

Salicylic acid is used for treating acne. It is an anti-inflammatory agent and is used for clearing clogged follicles
Desktop Bottom Promotion