For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயில் ஸ்கின் சருமம் உள்ளவர்கள் தயவு செய்து இத எல்லாம் செய்யாதீங்க

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தவிர்க வேண்டியவை பற்றி கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அவர்களுக்கு முகப்பருக்கள் கரும்புள்ளிகள் அதிக தொல்லைகளை தரும். இங்கு எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எதை எல்லாம் தவிர்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக மேக்கப் வேண்டாம்

அதிக மேக்கப் வேண்டாம்

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அதிக மேக்கப் போடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிக மேக்கப் முகத்தில் வெடிப்பு மற்றும் பருக்களை உண்டாக்கும். மிதமாக மேக்கப் போட்டால் தான் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் மிக அழகாகத் தெரிவார்கள்.

குளிக்கும் தண்ணீர்

குளிக்கும் தண்ணீர்

சுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் இவை இரண்டுமே ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பொருந்தாத ஒன்று. மிதமான சூடுள்ள நீரில் குளித்தால் மட்டுமே முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்து வெளியேறும். ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் கிடைக்க எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.

கொழுப்புமிக்க இறைச்சிகள்

கொழுப்புமிக்க இறைச்சிகள்

கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த இறைச்சிகளான மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டுக்கறி போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பை அதிகரித்து, முகப்பருவை அதிகம் வரச் செய்யும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தான். ஆனால் எண்ணெய் பசை சருமத்தினர் பால் பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்தால், சருமத்தின் எண்ணெய் பசை இன்னும் அதிகரித்து, பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும்

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க மாய்சுரைசரை பயன்படுத்த வேண்டியது அவசியம். எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுக்கங்கள்.

ஸ்க்ரப்

ஸ்க்ரப்

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் வெடிப்பு அடிக்கடி ஏற்படும். எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ஸ்கிரப் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்ந்தெடுத்து, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குங்கள்.

முல்தாணிமெட்டி

முல்தாணிமெட்டி

எண்ணெய் சருமத்திற்கு இயற்கை அளித்த ஒரு பரிசு என்னவென்றால் அது தான் முல்தாணிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தாணிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

you should avoid these things if you have oily skin

you should avoid these things if you have oily skin
Story first published: Saturday, June 3, 2017, 11:52 [IST]
Desktop Bottom Promotion