பட்டு போன்ற கால் மற்றும் கைகளை பெற என்னதான் வழின்னு கேக்கறீங்களா? இதப் படிங்க!!

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

முகத்தை மட்டும் பார்க்காமல், இன்று பலரும் உங்களுடைய கைகள் மற்றும் கால்களையும் உற்று பார்க்க ஆரம்பித்துவிட்டனர். உங்கள் கைகள் மிருதுவாகவும், சுத்தமாகவும் இருக்கிறதா எனவும்...நகங்களை சீராக வெட்டி இருக்கிறோமா?

கால்கள் மற்றும் குதிகால்களையும் சுத்தமாக, ஒரு குழந்தையைப் போல் பட்டு போன்று மென்மையாக, வைத்திருக்கிறோமா...என்பதனையும் அவர்கள் விருப்பப் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.

சந்தர்ப்ப சூழ்நிலையால்...இதற்காக அடிக்கடி நீங்கள் சிகை அலங்கார கடையை நோக்கி செல்ல வேண்டியதில்லை. உங்கள் அழகை மேம்படுத்த வீட்டிலே பல பொருட்கள் தயாராக இருக்கிறது. அவை அனைத்தும் இயற்கை மூலப்பொருள் என்பது, மற்றும் ஓர் இனிமையான விசயமாகவும் நமக்கு அமைகிறது.

இப்பொழுது, உங்கள் கைகள் மற்றும் கால்களை எப்பொழுதும் சிறந்ததாகவும், மிருதுவாகவும் வைத்துகொள்ள சில வழிகளை நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் கிளிசரின்:

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் கிளிசரின்:

இந்த வெள்ளரியில், அதிக அளவில் தண்ணீர், வைட்டமின் K, சிலிக்கா, வைட்டமின் A, வைட்டமின் C, பச்சையம் ஆகியவையும் இருக்கிறது. இந்த கிளிசரினில் ஈரப்பதம் இருக்க...இந்த இரண்டு மூலப்பொருள்களின் கலவை சேர்ந்து, உங்கள் கைகளை மிருதுவாகவும் அழகாகவும் வைக்கிறது.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1 ( நறுக்கப்பட்ட தூய்மையானது)

தண்ணீர் - சில அளவு

கிளிசரின்

செய்முறை:

செய்முறை:

1.வெள்ளரிக்காயின் தோலை உறித்து, நறுக்கிகொள்ள வேண்டும். அதனை ஜூஸாக பிழிந்து கொள்ள வேண்டும்.

2.அத்துடன் க்ளிசரினையும் கலந்துகொள்ள வேண்டும்.

3.அந்த கலவையை, உங்கள் கைகளில் தடவிகொள்ள வேண்டும். உங்கள் கைகளை, கையுறை கொண்டு மூடிகொள்ள வேண்டும்.

அதன் பின் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து கழுவ வேண்டும். அப்பொழுது, உங்கள் கைகளை தொட்டு பார்க்க மிருதுவாக இருக்கும். இதனை தினமும் செய்துவர நல்ல பயனை நீங்கள் அடையலாம்.

எப்சம் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில்:

எப்சம் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில்:

இந்த எப்சம் உப்பு, உங்கள் கைகளில் இருக்கும் இறந்த லேயரை தளர்வடைய செய்கிறது. அத்துடன் இந்த ஆலிவ் ஆயிலானது சருமத்தில் மாயாஜாலம் செய்யகூடிய ஒரு மருந்தாகும். இதனை கொண்டு கையை துடைக்க, உங்கள் கைகள் மிருதுவாக, குழந்தைகளின் கரங்களை போல் ஆகிறதாம்.

தேவையான பொருட்கள்:

எப்சம் உப்பு

ஆலிவ் ஆயில்

செய்முறை:

செய்முறை:

1.எப்சம் உப்பினை ஆலிவ் ஆயிலுடன் கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை கொண்டு உங்கள் கைகள் மற்றும் கால்களில் தேய்த்துகொள்ள வேண்டும்.

2.பதினைந்து நிமிடங்கள் கழித்து உங்கள் கை மற்றும் கால்களை கழுவ வேண்டும்.

3.அதேபோல், இந்த எப்சம் உப்பினை கொண்டு உங்கள் கைகள் மற்றும் கால்களை ஊற வைப்பதும் சிறந்த வழியாகும். ஆம், சில துளிகள் ஆலிவ் ஆயிலையும் அத்துடன் சேர்த்து கொள்ளவும் வேண்டும். இந்த முறை, உங்களுக்கு ஓய்வு தந்து, மனதினை அமைதிகொள்ள செய்வதுடன் ஆற்றவும் வல்லதாகும். இந்த எப்சம் உப்பு அழுத்தத்தை போக்குகிறது

எழுமிச்சை, தேன் மற்றும் சமையல் சோடா:

எழுமிச்சை, தேன் மற்றும் சமையல் சோடா:

இந்த எழுமிச்சையில் சிட்ரிக் அமிலமிருக்க, அது கரும்புள்ளிகளின் நிறத்தை மாற்ற வல்லதாகும். தேனில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்பு, உங்களுடைய முதிர்ச்சியடைதல் பருவத்தை மெதுவாக தள்ளி போட உதவுகிறது. சமையல் சோடாவிற்கு, தளர்வடைய செய்யும் பண்பிருக்க...அது உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அத்துடன் புதிய சரும செல்களை வெளிப்படுத்தவும் அது உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

ப்ரெஷ் லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் (நன்றாக கசக்கி பிழியப்பட்டது)

ஆர்கானிக் தேன் - 1 டேபிள் ஸ்பூன்

சமையல் சோடா - 1 அல்லது 2 சிட்டிகை

செய்முறை:

செய்முறை:

1.லேசான சோப்பை பயன்படுத்தி, அதன் பின்னர் உங்கள் கைகளை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

2.சிறிய கொள்கலன் அளவுள்ள பாத்திரத்தை எடுத்துகொண்டு, அதில் அனைத்து மூலப்பொருள்களையும் கலக்க வேண்டும்.

3.அந்த கலவையை கொண்டு உங்கள் கைகள் மற்றும் கால்களில் தேய்க்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்துகொள்வது அவசியமாகும்.

4.தேய்த்துகொண்டபடி 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கவும்.

5.இறுதியாக, உங்கள் கைகள் மற்றும் கால்களை சுடு தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். கழுவிய உடனே ஒருபோதும் சோப்பை பயன்படுத்தாதீர்கள்.

6.வாரத்தில் இரண்டு முறை இந்த செய்முறையை செய்து, உங்கள் கைகள் மற்றும் கால்களை மிருதுவாக பெற்று மகிழுங்க

மேலும் கவனிக்க வேண்டியவை:

மேலும் கவனிக்க வேண்டியவை:

பெட்ரோலியம் ஜெல்லியை கொண்ட அடிப்படை முறைக்கூட இதேபோல் தான். உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு உறை அணிந்து (க்லோவ்ஸ் மற்றும் ஸாக்ஸ்) இரவு பொழுதில் வைத்திருக்க, காலையில் உங்கள் கைகள் மற்றும் கால்கள் மிருதுவாகவும், மென்மையாகவும் காணப்படும்.

உங்களுடைய ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றும் பண்பு, உங்கள் கைகள் மட்டும் கால்களை சார்ந்திருக்க...இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி சிறந்ததோர் உணர்வினை பெற்று முதல் அபிப்ராயத்தில் உங்களை பார்ப்பவர்கள் மனதில் புகுந்து மாயாஜாலம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Want Great-looking Hands And Feet? Try These DIY Remedies

Want Great-looking Hands And Feet? Try These DIY Remedies
Story first published: Saturday, June 10, 2017, 8:00 [IST]