Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
உங்கள் முகம் தங்கம் மாதிரி ஜொலிக்க வைக்க ஆசையா? ஒரு அற்புத மாஸ்க் ட்ரை பண்ணிப் பாருங்க!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மைதான். நல்ல அன்பான மனதின் வெளிப்பாடு அவர்களின் முகத்தில் பிரதிபலிக்கும். அதோடு போதும் என்று திருப்திப்படாமல் கொஞ்சம் வீட்டில் வாரம் ஒருமுறை முகத்தை பராமரித்துப் பாருங்கள். நீங்கள் தேவதை என்றே எல்லாரும் சொல்வார்கள்.
நிறம் பிரச்சனையில்லை. கிளியோபாட்ராவிலிருந்து நம்ம ஊர் தீபிகா படுகோனே வரை எல்லாருமே மா நிறத்திற்கும் குறைவுதான்.
ஆனால் அவர்கள் பராமரித்த விதத்தில்தான் அவர்களின் அழகை உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இதற்காகவே , மாசிக்ல்லாத சருமம் பெறுவதற்காகவே உங்களுக்காக இங்கே ஒரு அருமையாக குறிப்பு சொல்லப்படுகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு குறிப்பு சொல்லப்பட்டிருக்கிறது. முயற்சித்துப் பாருங்களேன்.

வறண்ட சருமத்திறான மாஸ்க் :
தேவையானவை:
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
ரோஜா எண்ணெய் - 3 துளிகள்
ரோஸ் வாட்டர் - 1/2 கப்.

செய்முறை :
எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கலக்குங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்தில் ஒரே மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். சில நிமிடங்களில் உங்கள் முகம் ஜொலிக்கும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் மாசு மருவில்லாத முகம் கியாரெண்டி.

எண்ணெய் சருமத்திற்கான மாஸ்க் :
தேவையானவை:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
யோகார்ட்- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
நீர்- கலக்கும் அளவு.

செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கி, முகம் மற்று கழுத்திற்கு அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருக்களை மறைந்து மிருதுவாகும்

கருமை மறைந்து பளிச்சிட மாஸ்க் :
தேவையானவை :
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை :
எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பிரஷ் கொண்டு தடவவும். இதனால் நன்றாக சருமத்தில் பரவும். 20-30 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வாரம் ஒருமுறை செய்தால் வெயிலினால் கருமையடைந்த முகம் நிறம் பெறும். பளிச்சிடும். வறண்ட சருமம் பெற்றவரள் இந்த கல்வையொட ஃப்ரெஷ் க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications