For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஷேவிங் செய்ய சங்கடப்படும் ஆண்களுக்கான சூப்பர் டிப்ஸ்!

நீண்ட கால ஷேவிங் பெறுவதற்கான டிப்ஸ் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

|

நீங்கள் தொடர்ந்து ஷேவ் பண்ணுவிங்களா? ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வாரத்திற்கு இப்படி எந்த இடைவேளையிலும் ஷேவிங் பண்ணுவது என்பது அவரவர் இஷ்டம். ஏனென்றால் முடியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

ஷேவிங் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது உங்களை அழகாக காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்... தீமைகளும்..

ஒவ்வொருத்தரும் அவர்களின் சோம்பேறித்தனம், நிறைய இடைவெளிகளால் தங்களது ஷேவிங் செயலை தள்ளிக் கொண்டே போகின்றன.

அதற்கு ஒரு அத்தியாவசியமான தேவை வரும் வரை அதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும் ஷேவிங் முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

Tried And Tested Tips To Make Your Shaving Last Long

இந்த நீண்ட நாள் பயனுள்ள ஷேவிங் முறையில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் உங்கள் முடியின் வளர்ச்சியை மெதுவாக்கி நீண்ட நாட்களுக்கு உங்கள் சருமத்தை வழுவழுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பலன் அளிக்கக் கூடியது. ஒவ்வொரு ஷேவிங் டைமும் இந்த 5 அற்புதமான ட்ரிக்ஸ்யை பின்பற்றினால் கண்டிப்பாக நீண்ட கால ஷேவிங் பயன் கிடைக்கும்.

இந்த ட்ரிக்ஸ்யை உங்கள் ஷேவிங் டைமில் அப்ளைபண்ணி பாருங்கள் நீண்ட காலத்திற்கு நீங்கள் ஷேவ் பண்ண வேண்டிய தேவை ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடுதண்ணீர் குளியல்

சுடுதண்ணீர் குளியல்

பொதுவாக ஷேவிங் செய்வதற்கு முன்னாடி அந்த பகுதியை தண்ணீரால் நனைத்து கொள்வர். ட்ரிக்ஸ் என்னனா அதே நேரத்தில் நீங்கள் இதற்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால் முடியின் சரும துளைகள் திறந்து எளிதாக முடியை நீக்க முடியும்.

மேலும் முடி மிகவும் மென்மையாகிவிடும் எனவே அதன் வேர் வரை நெருங்கி ஷேவ் செய்ய முடியும். எனவே ரொம்ப சுலபமான ட்ரிக்கான இதை உங்கள் ஷேவிங் பண்ணுவதற்கு முன்னாடி செய்து பயன் பெறுங்கள்.

சரியான ஷேவிங் கருவி தேர்ந்தெடுத்தல்

சரியான ஷேவிங் கருவி தேர்ந்தெடுத்தல்

நீண்ட கால ஷேவிங் உங்கள் ரேசர் மற்றும் க்ரீம் பொறுத்தது. விலை மலிவான ரேசர் மற்றும் க்ரீம் பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்படைவதோடு நீண்ட கால பயனையும் தராது. எனவே பிராண்டட் க்ரீம் மற்றும் ரேசர் பயன்படுத்தினால் உங்களுக்கு அது ஒரு நல்ல லுக்கை கொடுக்கும்.

 ஒவ்வொரு முறையும் ப்ரஷ் ப்ளேடு பயன்படுத்துதல்

ஒவ்வொரு முறையும் ப்ரஷ் ப்ளேடு பயன்படுத்துதல்

ஒரே பிளேடுகளை அதிக தடவை ஷேவிங் செய்ய பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. ஒவ்வொரு தடவையும் புது பிளேடுகளை பயன்படுத்துவதே சிறந்தது.

ஏனெனில் புது பிளேடுகள் ரெம்ப கூர்மையாக இருப்பதால் உங்களுக்கு ஆழமான ஷேவிங்யை தரும். ஆனால் புது பிளேடுகளை பயன்படுத்தும் போது மெதுவாகவும் கவனமாகவும் பயன்படுத்தினால் வெட்டு காயங்களிலிருந்து விடுபடலாம்.

குறைந்த நேரம் மற்றும் அவசரமாக ஷேவ் செய்யக் கூடாது

குறைந்த நேரம் மற்றும் அவசரமாக ஷேவ் செய்யக் கூடாது

ரேசர் போன்ற கூர்மையான பொருளை பயன்படுத்துவதால் போதுமான நேரம் ஒதுக்கி நிதானமாகவும் கவனமாகவும் ஷேவிங் செய்ய வேண்டும். குறைந்த நேரத்தில் அவசர அவசரமாக ஷேவ் செய்ய கூடாது.

இப்படி விரைவாக செய்தால் உங்கள் சருமம் கண்டிப்பாக பாதிப்படையும். நீங்கள் ஷேவிங் செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் அதற்கான தகுந்த நேரம் மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஷேவிங் பிறகு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்

ஷேவிங் பிறகு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்

நீங்கள் ஷேவிங் செய்த பிறகு உங்களது சருமம் ரெம்ப சென்ஸ்டிவ்வாக இருக்கும். எனவே ஷேவிங் திரவமாக தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

கொஞ்சம் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை ஷேவிங் சருமத்தில் அப்ளை பண்ணி மசாஜ் செய்தால் சருமத்தால் ஊறிஞ்சப்பட்டு நமக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tried And Tested Tips To Make Your Shaving Last Long

Tried And Tested Tips To Make Your Shaving Last Long
Desktop Bottom Promotion