முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இத ட்ரை பண்ணி பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

வெயில் காலங்களில் அதிகம் வாங்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். குளிர்ச்சியான காய் என்று வர்ணிக்கப்படும் வெள்ளரிக்காயில் ஏராளமானமருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.

Tips to use cucumber for acne

வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும் என்பதால், அதனை ஈடுகட்ட இதுபோன்ற காய்களை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளரிக்காயில் தொண்ணூத்து ஐந்து சதவீதம் நீர்ச்சத்து மட்டுமேயிருக்கிறது. இந்த வெள்ளரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மையளிக்கிறது.

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை வெள்ளரிக்காய் உதவியுடன் எப்படி போகச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெள்ளரிச்சாறு :

வெள்ளரிச்சாறு :

வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும்.

இதனை தினமும் கூட செய்யலாம். ஒரு வெள்ளரியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். காட்டனில் அந்த ஜூஸை முக்கியெடுத்து முகம் முழுவதும் துடைத்தெடுங்கள்.

மீதியிருக்கும் ஜூஸை ப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

வெள்ளரி :

வெள்ளரி :

வெள்ளரியை பச்சையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் வெள்ளரியை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரம் வரை ஊறிய பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம்.அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்துமுகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போடலாம்.

வெள்ளரி மற்றும் தயிர் :

வெள்ளரி மற்றும் தயிர் :

சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும்.

வெள்ளரியை தோல்நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

வெள்ளரி,ஆப்பிள்,பேக்கிங் சோடா மற்றும் தேன் :

வெள்ளரி,ஆப்பிள்,பேக்கிங் சோடா மற்றும் தேன் :

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை நீக்கச்செய்ய பல்வேறு வீட்டு வைத்திய மருத்துவ முறைகள் இருக்கிறது.அவற்றில் வெள்ளரியுடன் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நீங்கள் செய்யப்போகும் இந்த வைத்தியம் மிகவும் பயன் தரக்கூடியது. அதிலும் குறிப்பாக இதில் சேர்க்கப்படும் பேக்கிங் சோடா மிகுந்த பலனை தரக்கூடியது.

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். ஆப்பிளை தோல் சீவி ஆப்பிள் மற்றும் வெள்ளரி இரண்டையும் பாதியளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கலவையுடன் தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திட வேண்டும்.

பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் கழுவிடலாம்.

வெள்ளரி, தக்காளி,சந்தனம் :

வெள்ளரி, தக்காளி,சந்தனம் :

வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.

வெள்ளரி ,எலுமிச்சை :

வெள்ளரி ,எலுமிச்சை :

எலுமிச்சையில் இருக்கும் அமிலம் சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கிடும் ஆற்றல் கொண்டது. அத்துடன் கரும்புள்ளியை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா தொற்றினையும் நீக்கிடும்.

வெள்ளரச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு.

வெள்ளரி,மஞ்சள் :

வெள்ளரி,மஞ்சள் :

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும்.

நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

வெள்ளரி, கற்றாழை :

வெள்ளரி, கற்றாழை :

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

வெள்ளரி, வேப்பிலை, ஓட்ஸ் மற்றும் மஞ்சள் :

வெள்ளரி, வேப்பிலை, ஓட்ஸ் மற்றும் மஞ்சள் :

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்வது போல செய்ய வேண்டும். இதனை வாரத்தில் மூன்று முறை செய்யலாம்.

வெள்ளரி,புதினா, தக்காளி :

வெள்ளரி,புதினா, தக்காளி :

வெள்ளரி, சிறிதளவு புதினா இலைகள் மற்றும் தக்காளி மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த கலவையை முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to use cucumber for acne

Tips to use cucumber for acne
Story first published: Wednesday, November 15, 2017, 11:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter