For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்துல க்ளே மாஸ்க்கை யூஸ் பண்றப்போ நீங்க செய்யற தவறு என்ன தெரியுமா?

முகப்பருக்களை தடுக்கவும், குணமாக்கவும், ஹெர்பல் ஆவி செய்வதன் மூலம் சரிப்படுத்த முடியும். ஹெபல் ஆவி தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது.

By Arunkumar P.m
|

வெயில் காலத்தில் களிமண் மாஸ்க் உபயோகித்தால் தோல் மென்மையாக இருக்கும். அந்த மாஸ்க் தோலில் உள்ள எண்ணெய் தன்மையை குறைத்து நல்ல நீர்ச்சத்தையும் மிருதுவான தோல் அமைப்பையும் கொடுக்கும். மேலும் அது ரத்த ஓட்டத்தை சீர் செய்து உயிரற்ற தோல் அணுக்களை வெளியேற்றும்.

இந்த மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினால் தோல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். இந்த கட்டுரையில் களிமண் மாஸ்க் உபயோகிக்கும்பொழுது நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சரியான மாஸ்க்கை தேர்வு செய்தல் :

1. சரியான மாஸ்க்கை தேர்வு செய்தல் :

நீங்கள் தேர்வு செய்யும் களிமண் மாஸ்க் உங்களுடைய தோலின் தன்மைக்கு ஏற்றதாக இருக்கு வேண்டியது மிக அவசியம். இந்த மாஸ்க் தேர்வுக்கு நீங்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் 'பிரென்ச் பச்சை களிமண்' வகையை சார்ந்த மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.உங்கள் தோலை இயல்பாக பிரகாசிக்க வைக்க வேண்டுமானால் 'சிவப்பு களிமண்' மாஸ்க்கை தேர்வு செய்ய வேண்டும்.

தோலை நேர்த்தியாகவும் ஈரமில்லாமல் வைத்துக்கொள்ள 'வொல்கானிக் ஆஷ் ' களிமண் முறையை பயன்படுத்த வேண்டும்.

2.ஹைடிரேடிங் மாஸ்க் உபயோகித்தல்:

2.ஹைடிரேடிங் மாஸ்க் உபயோகித்தல்:

களிமண் மாஸ்க் பயன்படுத்திய பின் கண்டிப்பாக ஹைடிரேடிங் மாஸ்க்கை உபயோகிக்க வேண்டும்.ஏனென்றால் களிமண் மாஸ்க் சில நேரங்களில் தோலை மிகவும் வரட்சியாக மாற்றி விடக்கூடும்.

எனவே தோலை மிருதுவாகமாற்றவும் நீர்ச்சத்துடன் இருக்க வழிசெய்யவும் இந்த ஹைடிரேடிங் மாஸ்க் பயன்படுகிறது. உங்களுடைய தோலின் தன்மைக்கேற்ப ஹைடிரேடிங் மாஸ்க்கை தேர்வு செய்ய வேண்டும்.

3.களிமண் மாஸ்க்கை முழுமையாக உலரச் செய்ய கூடாது :

3.களிமண் மாஸ்க்கை முழுமையாக உலரச் செய்ய கூடாது :

உங்கள் களிமண் மாஸ்க் முழுமையாக உலர்ந்த விட்டால் அது நல்ல பலனை கொடுக்காது. அந்த மாஸ்கின் மேல் அடுக்கு நிறம் மாறிய உடன் நீங்கள் அதனை தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

ஏனேன்றால் , தோலின் மேல் அடுக்கு .காய்ந்த உடன் அது தோலிற்கு தேவையான சத்துக்களை கொடுத்து எண்ணெய் தன்மையை அகற்றி விடும். களிமண் மாஸ்க்கை முழுமையாக உலரச்செய்தால், அது தோலிற்கு தேவையற்ற வறட்சியை கொடுக்கக்கூடும்.

4. முதலில் தோல் கழுவப்பட வேண்டும் :

4. முதலில் தோல் கழுவப்பட வேண்டும் :

களிமண் மாஸ்க்கை உபயோகிக்கும் முன் தோலின் அனைத்து பகுதியையும் நன்கு கழுவ வேண்டும். அதற்கு தேவையான க்ளீன்சர்களை பயன்படுத்தி உலர வைக்கலாம்.இது தோலின் துளைகளில் உள்ள அழுகுகளை விரட்ட உதவும்.

அல்லது ஆவி பிடிப்பதன் மூலம் தோலின் உட்புறத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும்.இந்த முறைகளை பின்பற்றினால் களிமண் மாஸ்க் மூலம் நல்ல சத்துக்களை உங்களுடைய தோல் எளிதாக உறிஞ்சிக்கொள்ளும்.

5.அடிக்கடி பயன்படுத்த கூடாது :

5.அடிக்கடி பயன்படுத்த கூடாது :

களிமண் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்துதல் நல்ல பலனை தராது.அந்த மாஸ்க்கிற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.இயல்பான தோல் வகையை பெற்றவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.எண்ணெய் தன்மை கொண்ட தோலிற்கு இந்த வகையான மாஸ்க்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

உலர்ந்த தோலை உடையவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் போதுமானது. களிமண் மாஸ்க்கை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினால் தோல் கடினத்தன்மையை பெற்று எரிச்சல் உண்டாகும்.

எனவே களிமண் மாஸ்க்கை பயன்படுத்தும்போது சற்று பொறுமையாக உங்கள் தோலின் தன்மையை கருத்தில் கொண்டு செயல்படவேண்டியது மிக அவசியம் ஆகும்.

6 .குளிர்ந்த நீரை உபயோகித்தல்:

6 .குளிர்ந்த நீரை உபயோகித்தல்:

களிமண் மாஸ்க் பயன்படுத்தும்போது கண்டிப்பாக குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நன்கு கொதித்த நீரையோ , அளவான கொதிநிலையில் உள்ள நீரையோ உபயோகிக்க கூடாது.இயல்பாகவே களிமண் மாஸ்க் உலர்ந்த தன்மையை கொண்டது.இதனுடன் கொதிக்கவைத்த நீரை பயன்படுத்தினால் தோலின் நீர்ச்சத்து பாதிக்கப்படும்.சிறந்த தீர்வு என்னவென்றால் களிமண் மாஸ்க் மூலம் தோல் சிகிச்சை செய்பவர்கள், கண்டிப்பாக குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்.

7. சிறிய அளவு கலவையே போதுமானது :

7. சிறிய அளவு கலவையே போதுமானது :

உங்கள் முகத்திற்கு எவ்வளவு அளவு களிமண் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்ற கேள்வி முக்கியமானது. சிறு அடுக்கு களிமண் மாஸ்க்கை பயன்படுத்தினாலே அது நல்ல பலனை கொடுக்கும். அந்த கலவையை அளவாக எடுத்து சமமாக அனைத்து பகுதிகளிலும் பூச வேண்டும்.இதன் மூலம் முகம் நல்ல பொலிவை பெற்று மிளிரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Keep In Mind When Using A Clay Mask

Things To Keep In Mind When Using A Clay Mask,
Story first published: Thursday, May 25, 2017, 16:59 [IST]
Desktop Bottom Promotion