சேற்றுப் புண் வந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

சேற்றுப் புண்அல்லது கால் பூஞ்சை தொற்று என்பது ஒரு அதீத பூஞ்சை தொற்றாகும். வழக்கமாக உங்கள் பாதங்களில் இது போன்ற பிரச்சினை உள்ளதா. இந்த பூஞ்சை தொற்று விரைவாக வேகமாக பரவக் கூடிய தொற்றாகவும் உள்ளது. இந்த பூஞ்சை தொற்று ட்ரைகோபைத்தான் ரூபிரம் என்ற பூஞ்சை வைரஸால் ஏற்படுகிறது.

இந்த தொற்று பயப்படக்கூடிய அளவில் விளைவை ஏற்படுத்தா விட்டாலும் இது அப்படியே உடம்பின் மற்ற பாகங்களுக்கு பரவமும் மற்றவர்களுக்கு பரவமும் வாய்ப்புள்ளது. எனவே இதை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவான அறிகுறிகள்

பொதுவான அறிகுறிகள்

மென்மை, ஈரப்பதம், எளிதாக தோலை உரிக்க கூடிய நிலை, சிவந்த மற்றும் பிளவுபட்ட சருமம், அரிப்பு, செதில் போன்ற தோற்றம், பிளவுபட்ட சருமத்தால் வலி

வெள்ளை மற்றும் தடினமான சருமத்தால் வீக்கம்

கொப்புளங்கள்

கொப்புளங்கள்

இந்த அறிகுறிகளின் நிலையை பொருத்து இந்த அத்தளட்ஸ் ஃபுட்டை மூன்று நிலைகளாக பிரிக்கின்றனர், இன்டர்டிஜிட்டல்

கால் விரல்களுக்கிடையே பாதிப்பு, இடைப்பட்ட பகுதியில் இருக்கும் சருமம் ஒன்றோடொன்று உரசக் கூடிய நிலையில் இருக்கும். அதாவது கால் விரல்கள் மற்றும் அவைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளாகும்.

இந்த இன்டர்டிஜிட்டல் மாக்ஷேரேசன் நிலையில் கால் விரல்களுக்கிடையே காணப்படும் அறிகுறிகளாவன, சிவந்த மற்றும் செதில் போன்ற பிளவுகள் கால் விரல்களுக்கிடையே காணப்படும் பிளவுகள் மற்றும் தோல் உரிதல் காணப்படும்

அரிப்பு :

அரிப்பு :

இந்த நிலையில் உங்கள் கால் விரல்களுக்கிடையே உள்ள சருமம் மென்மையாக மாறி அதன் மேல் தோல் உரிந்து விடும்.

காலின் எல்லா பக்கவாட்டு பகுதிகளிலும் மற்றும் பாதங்களிலும் ஏற்படுதல் மாக்காஷன் என்பது ஒருவகையான காலணி ஆகும். ஆனால் இதே பெயரில் சேற்றுப் புண்பிரச்சினையை கூறுகின்றனர்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

பிளவுகள், வறண்ட மற்றும் அரிப்புள்ள சருமம் கால் நடுப்பகுதியில் மற்றும் பக்கவாட்டில் ஏற்படுகிறது. பாதிப்படைந்த இடத்தில் உள்ள சருமம் சிவந்து காணப்படும்

ஆன்கோமைகாஸிஸ் என்ற பூஞ்சை தொற்று நகங்களில் காணப்படுகிறது.

ஒரு நகங்களில் காணப்படும் தொற்று அப்படியே பரவி எல்லா நகங்களிலும் படர்கிறது. மேலும் நகங்களின் நிறமும் மாறி விடுகிறது.

கைகளில் படர வாய்ப்புள்ளதா?

கைகளில் படர வாய்ப்புள்ளதா?

பாதிப்பின் தீவிரம் அதிகமானால் கைகளிலும் படர வாய்ப்புள்ளது. நிறம் மாறிய நகங்கள் காணப்படும்

வெஸிகுலோப்ளோஸ் அறிகுறிகள் :

வெஸிகுலோப்ளோஸ் அறிகுறிகள் :

கொப்புளங்கள் காணப்படும் நிலை இந்த நிலையில் உங்கள் கால்களில் வலியுடன் கூடிய கொப்புளங்கள் காணப்படும். அரிப்பு அல்லது வலியுடன் கூடிய சலத்துடன் கூடிய கொப்புளங்கள் தோன்றிடும். இது கால் விரல்களுக்கிடையே, பாதங்களில் போன்றவற்றில் காணப்படுகிறது. வெடிப்பு கொப்புளங்கள் அளவில் சிறியதாக அல்லது பெரியதாக இருக்கலாம்.

சேற்றுப் புண்ஒரு தொற்று நோயா

சேற்றுப் புண்ஒரு தொற்று நோயா

பாதிக்கப்பட்ட பகுதியை மற்றவர்கள் தொட்டாலோ அது அவர்களுக்கு பரவி விடும். இந்த பாதிப்பு நேரிடையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் துண்டு, ஷாக்ஸ் மற்றும் ஷூ போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் இது எளிதில் பரவக் கூடியது.

இந்த பூஞ்சை பொதுவாக ஈரப்பதம் நிறைந்த சற்று வெதுவெதுப்பான இடமான ஷூ காலணியில் அல்லது குளிக்கும் பாத்ரூம் பகுதியில் காணப்படும்.

இந்த பகுதியிலிருந்து இது எளிதாக நாம் வெறும் காலில் நடக்கும் போது நீச்சல் குளம், ஜிம், உடை மாற்றும் அறை போன்றவற்றிற்கு பரவி நம்மையும் தொற்றி கொள்கிறது.

தீவிர சேற்றுப் புண்பிரச்சினைகள்

தீவிர சேற்றுப் புண்பிரச்சினைகள்

இந்த பாதிப்பு பொதுவாக இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. அதிலும் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபர்கள்

டயாபெட்டீஸ் நோயாளிகள் மற்றும் கால்களில் இரத்த ஓட்ட பிரச்சினை இருப்பவர்கள் தோல் மற்றும் அழற்சி இருப்பவர்கள் ஈரப்பதம் உள்ள பாதங்கள் உடையவர்கள்.

நடக்கும் விதம்

நடக்கும் விதம்

ஓடுபவர்கள் மற்றும் நீச்சலடிப்பவர்களுக்கு அடிக்கடி பாதங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

அதே மாதிரி அதிக நேரம் நிற்கும் நிலையான இராணுவ வீரர்கள் மற்றும் நீண்ட நேரம் கடினமான காலணிகளை அணிபவர்கள் போன்றவர்களும் இதனால் பாதிப்படைகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of athlete's foot and remedies to cure

Symptoms of athlete's foot and remedies to cure
Story first published: Thursday, November 23, 2017, 19:00 [IST]