கோடைக்கால சரும பராமரிப்பு பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பலர் பருவ காலங்களுக்கு ஏற்றவாறு அழகை அதிகரிக்க சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவோம். குறிப்பாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று உடுத்தும் உடையில் இருந்து, பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்துவோம்.

ஆனால் பலருக்கு கோடைக்கால சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பல விஷயங்கள் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இதுக்குறித்து தெளிவாக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

கோடை காலத்தில் மாய்ஸ்சுரைசர் உபயோகிக்கக் கூடாது என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. இரவு தூங்கப் போவதற்கு முன் மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. மேலும், அது உடல் வறட்சியைத் தடுக்கும். அதிலும் சருமத்திற்கு தகுந்த லோசனை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.

சோப்பு

சோப்பு

வியர்வை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்காக தனியாக புது சோப்பினை உபயோகிப்பது நல்லதல்ல. நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் சோப்பினையே தொடர்ந்து உபயோகியுங்கள். எப்பொழுதும் பயன்படுத்தும் சோப்பு நமக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பே இல்லை.

கேலமைன் லோசன்

கேலமைன் லோசன்

வெயில் காலத்தில் வியர்குரு என்பது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. கேலமைன் லோசனை உபயோகித்தால் வியர்குரு ஏற்படாது.

சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

வெயிலில் செல்லும் முன் தவறாமல் சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக வெளியே செல்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள். பல நாட்களுக்கு முன் வாங்கிய சன் ஸ்க்ரீன் லோசன் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதில் UV அளவு குறைந்திருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Summer Skin Care Products: Things You Need To Know

Before you go shopping for summer skin care or beauty products, here's what you need to know.
Subscribe Newsletter