For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர் காலத்தில் முகம் கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா? அதை எப்படி தடுக்கலாம்?

குளிர்காலத்தில் சருமம் கருத்துப் போவதற்கான காரணங்களும், அதனை தடுக்கும் முறைகளும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

குளிர் காலம் வந்தாலே சருமம் பயங்கர டல்லாகி விடும். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான்.

Remedies to protect your skin from getting dark in winter

சருமத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் உங்களை வெளிப்புற மாசு மற்றும் கதிர்களிடமிருந்து காப்பாற்றுவதால் சருமம் எந்தவித பாதுக்களுமின்றி இருக்கிறது. ஆனால் போதிய அளவு எண்ணெய் சுரக்கப்படாமலிருந்தால், சருமம் வறண்டு, சுருங்கி ஜீவனில்லாமல் காணப்படுகிறது.

ஆனால் சருமம் கருமையடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் சருமம் கருப்பதற்கான காரணங்கள் :

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கம்பளி :

கம்பளி :

குளிர்காலத்தில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய பொருள் கம்பிளி. அது ஸ்வெட்டராக அல்லது போர்வையாக நாம பயன்படுத்துகிறோம். நீங்கள் பயன்படுத்தும் ஸ்வெட்டர் அல்லது போர்வை மட்ட ரகமாக அல்லது இரண்டாம் தரமானதாக இருந்தால் சருமம் கருத்துப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெந்நீர் :

வெந்நீர் :

குளிர்காலத்தில் குளிருக்கு இதமாக சுடச் சுட நீரில் குளிப்பது எல்லாரும் செய்வது. ஆனால் அப்படி குளித்தால் உடல் கருத்துப் போகும். இது நல்லதல்ல. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதுதான் உடல் கருப்பாகாமல் தடுக்கும்.

எண்ணெய் உணவுகள் :

எண்ணெய் உணவுகள் :

ஆச்சர்யமா இருக்கா. ஆனால் அதுதான் உண்மை. குளிர்காலத்தில் அதிக எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடத் தோன்றும். அதிக எண்ணெய் உணவுகள் உங்கள் சருமத்தை கருமைப்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கருமையை வராமல் தடுக்கும் முறைகள் :

கருமையை வராமல் தடுக்கும் முறைகள் :

குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து குளிக்க வேண்டும். இவை சருமத்தின் நிறத்தை கருப்பாக்காமல் தடுக்கும்.

ஈரத்தன்மை :

ஈரத்தன்மை :

உங்கள் சருமம் வறண்டு போகும்போது எளிதில் கருத்துவிடும். ஆகவே குளித்ததும் மறக்காமல் மாய்ஸ்ரைசர் க்ரீம் பயன்படுத்துங்கள். இவை முகம் கருப்பாவதை தடுக்கும்

எந்த எண்ணெய் நல்லது?

எந்த எண்ணெய் நல்லது?

தேங்காய் எண்ணெய் சருமத்தை கருக்கச் செய்யும் என்பது உண்மைதான். அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். தினமும் குளிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து குளித்தால் சரும கருமையை தடுக்கலாம்.

 உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

பொதுவாக குளிர்காலத்தில் சரியாக வேலை செய்யத் தோன்றாது. ஆனால் உடலுக்கு போதிய பயிற்சி அளிக்கும்போது எண்ணெய் சுரப்பி தூண்டப்படும். இதனால் குளிரில் உடல் கருக்காமல் தப்பிக்கலாம். ஆகவே 10 நிமிடங்களாவது வியர்க்க உடற்ப்யிற்சி செய்திடுங்கள்.

 பப்பாளி மாஸ்க் :

பப்பாளி மாஸ்க் :

குளிர்காலத்தில் சருமம் வறட்சியடையாமலும் , கருப்பாவதையும் தடுக்கும் பழம் பப்பாளிதான். பப்பாளியை மசித்து சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது கருமையை விரைவில் போக்கும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் உங்கள் சருமம் குளிரினால் வாடிப் போகாது.

 முல்தானிமட்டி :

முல்தானிமட்டி :

முல்தானி மட்டி கருமை திட்டுகளை மறைய வைக்கும். ஆனால் அதனை நேரடியாக பயன்படுத்தினால், சருமம் மேலும் வறட்சியாகும். ஆகவே முல்தானி மட்டியுடன் சிறிது பால் மற்றும் பாலாடை கலந்து பயன்படுத்துங்கள்.

பால் பவுடர் :

பால் பவுடர் :

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு , சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். இவை கருத்துப் போன முகத்தை மீண்டும் பழையபடி மாற்றும். தகுந்த ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கும்.

தேனும் பாலும் :

தேனும் பாலும் :

காய்ச்சாத பால் 1 ஸ்பூன் எடுத்து அதே அளவு தேன் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேயுங்கள். காய்ந்தபின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் ஓரிரு நாட்களில் பழைய நிறம் பெறும்.

நீர் :

நீர் :

குளிர்காலத்தில் நீர் அதிக தேவைப்படாது மற்றும் அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமே என சிலர் குடிக்க மாட்டார்கள். ஆனால் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் நீராவது குடிப்பதை நிறுத்தாதீர்கள்.

பழங்கள் :

பழங்கள் :

பழங்கள் நீங்கள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது. ஆகவே நிறைய பழங்களை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக திராட்சை, சப்போட்டா, ஆப்பிள் வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

காபி :

காபி :

பொதுவாக குளிர்காலத்தில் அதிகம் காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால் அப்படி குடிக்காமல் பாலில்லாத க்ரீன் டீ, மூலிகை தே நீர் என குடிக்க முயற்சியுங்கள். காபி டீ உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்வதுடன், கருமையும் ஆக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies to protect your skin from getting dark in winter

Remedies to protect your skin from getting dark in winter
Story first published: Tuesday, January 2, 2018, 17:21 [IST]
Desktop Bottom Promotion