Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பேர்ல் ஃபேஸியல் பைசா செலவில்லாமல் வீட்டிலேயே செய்யலாம். எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!!
பேர்ல் ஃபேஸியல் செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என உபயோகப்படுத்தும் முறையையும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
பேர்ல் ஃபேஸியல் பார்லரில் காஸ்ட்லியானதுதான். இதுவே நீங்கள் வீட்டில் செய்தால் பேர்ல் பொடியோடு செலவு முடிந்துவிடும்.
பேர்ல் ஃபேஸியல் எந்த வித சருமத்திற்கும் ஒத்துப் போகும். இந்த சருமத்திற்குதான் போட வேண்டுமென்பதில்லை.

சுருக்கங்களை போக்கும். நச்சுக்களை வெளியேற்றி புதிய தோற்றத்தை சருமத்திற்கு தரும். நிறைய நன்மைகளை தரும் பேர்ல் ஃபேஸியல் எப்படி வீட்டிலேயே செய்வது என பார்க்கலாம்.

ஸ்டெப் - 1 :
முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து உங்கள் முகத்தை சுத்தப்படுத்துங்கள்.
பழங்களின் ஃப்ளேவர் கொண்ட க்ளென்சர்களை பயன்படுத்த வேண்டாம். இவை முத்துவுடன் வினைபுரியும். அவற்றை தவிருங்கள்.

ஸ்டெப்-2 :
முத்துப் பொடியுடன் சிறிது பால் கலந்து முகத்தில் போடுங்கள். குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
எண்ணெய் சருமம் இருப்பவர்கள் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து உபயோகப்படுத்தலாம். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

ஸ்டெப் -3 :
சாதரணமாக நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் க்ரீமுடன் சிறிது பேர்ல் பவிடரை கலந்து முகத்தில் 10 நிமிடம் மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

ஸ்டெப் - 4 :
ஆன்டி ஆஜிங் க்ரீம் எடுத்து அதனுடன் சில துளி எலுமிச்சை மற்றும் பேர்ல் பவுடர் கலந்து முகத்தில் பேக்காக போடுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

ஸ்டெப் - 5 :
இதுதான் கடைசி மசாஜ். சிறிது ஃப்ரெஷ் க்ரீம் எடுத்து அதனுடன் சிறிது பேர்ல் பொடியை கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

இதன் நன்மைகள் :
சூரியக் கதிர்களால் பாதிப்படைந்த சருமத்திற்கு மிகவும் நல்லது.
பேர்ல் ஃபேஸியல் மென்மையான சருமத்தை அளிக்கிறது. சருமதுளைகளை சுவாசிக்கச் செய்கிரது. இதனால் இரந்த செல்கள் எளிதக வெளியேறி சருமம் இளமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
